சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA – 298-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில், திரு. கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மூலச்சல் டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 04.04.2026 அன்று மதியம் சுமார் 2 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. அருள்தாஸ் ஆசான் ஆறறிவு விளக்கம் குறித்துப் பேசினார். மேலும் மூலநோய்களுக்கு கந்தக செந்தூரம், நரம்புச்சுருக்கம், கட்டிகளுக்கு வெடியுப்பு சுண்ணம் செய்முறையைக் கூறினார். திரு. சுப்பிரமணிய ஆசான் தமரக வாயு குணமாக மருந்து, சொறி, சிரங்கு, படை, […]
Read More
கிரியேட்டினின் பற்றி அறிவோம்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரியேட்டினின் (Creatinine) என்பது அன்றாட செயல்பாட்டின் போது தசைநார்கள் சிதைவடைவதால் உருவாகும் ஒரு கழிவுப்பொருளாகும். சுருக்கமாகச் சொன்னால் கிரியேட்டினின் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அளவிட உதவும் ஒரு முக்கியமான இரத்தக் கழிவுப்பொருள் எனலாம். கிரியேட்டின் சில செய்திகள் இரத்தத்தில் கிரியேட்டின் அளவு அதிகரிப்பது, சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதைக் குறிக்கும் முக்கிய அறிகுறியாகும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள இந்த கழிவைக் வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. தசை ஆற்றலை பயன்படுத்தும் போது கிரியேட்டினின் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
குளச்சல் ரவிச்சந்திரன் குடும்பம் என்னும் மலர் வளையத்தில் வாசம் வீசும் அன்பு தேவதைகளே பெண்கள், தோற்றுப் போனது தோல்விகள் உண்மைதான், காலங்காலம் தொட்டு கிழக்கும் மேற்கும் இதுவரை சமநீதி கண்டதுண்டோ?… இடப்பாகம் அளித்து-ஈசன் அர்த்தநாரி ஆகியும், பூசையோடு பெண்மை மறுக்கப்படுவது மாபெரும் உண்மை, இந்த ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தியதி அன்று,,,, “உலகெங்கும் பெண்ணிற்கு எதிரான வன்முறைகள் இன்று இல்லை” யென நாளை செய்தி வந்தால்…… வெற்றிதான்.
Read More
கவிதை
  • By Magazine
  • |
பெட்ரோல்,டீசல் விலை!      எவ்வளவு என்றாலும்…..      உயர்த்திக் கொள்ளுங்கள்!      ஏனெனில் எங்களுக்கு      உலகம் தெரியாது. சமையல் எரிவாயு விலை!      எவ்வளவு என்றாலும்….      உயர்த்திக் கொள்ளுங்கள்!      ஏனெனில் எங்களுக்கு      சிந்திக்கத் தெரியாது. அந்தவரி இந்தவரியென்று,      எத்தனை வரிகளுண்டோ…..      வசூலித்துக் கொள்ளுங்கள்!      ஏனெனில் நாங்கள்      குட்டக் குட்ட குனிபவர்கள். வங்கிக் கடன்கள்!      எத்தனை லட்சங்கோடி என்றாலும்….      தள்ளுபடி செய்யுங்கள்!      ஏனெனில் […]
Read More
மே தினம் + உழைப்பாளர் சிலை
  • By Magazine
  • |
.  –  இந்திரன், எழுத்தாளர், ஓவியர் “என்னை வெளிப்படையாக இருக்க விடுங்கள். நான் ஒரு அறிவு ஜீவியாக பாசாங்கு செய்ய விரும்பவில்லை. நான் மல்யுதத்தையும் குஸ்தியையும் எந்த அளவுக்கு விரும்புகிறேனோ அதே அளவுக்கு கலையையும் விரும்புகிறேன். நான் கோட்பாடுகளில் விருப்பம் கொண்டிருக்கவில்லை.” வேடிக்கை என்னவென்றால் பொது உடைமை சித்தாந்தத்தில் நம்பிக்கையில்லாத ஒரு சிற்பி கலை எனும் காரணத்துக்காக செய்த சிற்பம் இன்று உழைப்பாளிகளின் பெருமை பேசுவதாக அரசாங்கத்தால் பெயரிடப்பட்டு நிற்கிறது என்பதுதான்.
Read More
எதிர்வீடு
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காலையிலே வெளியே போய் என்னத்த பார்த்துக்கிட்டிருக்கே கூப்பிட்டது கூட காதில் கேட்காம என்றபடி என் அருகில் வந்தார் என் கணவர் ஆமாங்க. ஏதோ சிந்தனைதான் என்றேன். எதிர்த்த வீட்டு பொண்ணை பற்றி நினைச்சி பார்த்தியாக்கும் என்றார் என்னவர். ஆமாங்க என்றேன். உன் முகத்திலே தெரியுது என்றார். பெரிய சைக்கியாட்ரிஸ்ட் தான் வாங்க டிபன் சாப்பிடுவோம் என்றேன். இருவரும் காலை உணவு அருந்திய பின் மீண்டும் பால்கனியில் வந்து செயரில் இருந்தேன் நினைவுகள் பின்னோக்கி […]
Read More
வாய்ப்புண்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) வாயில் ஆரம்பித்து ஆசனவாயில் முடிவடையும் ஜீரணமண்டலத்தில், வாய் முதல் பகுதியாக உள்ளது. வாய்ப்புண் பல காரணங்களால் ஏற்பட்டு, உணவு உண்பதற்கும், உணவு விழுங்குவதற்கு சிரமத்தை கொடுக்கிறது. உதடுகளின் உட்புறம், கன்னத்தின் உட்புறம், நாக்கு, பல்ஈறு ஆகிய பகுதியில் ஏற்படும் புண்களை, வாய்ப்புண் என்று அழைக்கிறோம். பொதுவாக வாய்ப்புண் 4 நாட்களிலிருந்து 14 நாட்களுக்குள் ஆறிவிடும். வாய்ப்புண்ணை அக்கரம் என அழைப்பதுண்டு.  மேலும்  Apthousulcer, Stomatitis என்பதும் வாய்ப்புண்ணை குறிக்கும். வாய்ப்புண் உண்டாவதற்கான […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் மனித உறுப்பு மாற்று முறை சட்டம் 1994 (The Transplantation of human organs & Tissues Act 1994) மேற்படி சட்டப்படி உடல் உறுப்பு தானம் செய்வோர் தாமாக முன் வந்து தானம் செய்ய வேண்டும். பிறர் வற்புறுத்தலால் தானம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வியாபார ரீதியில் உறுப்புத்தானம் செய்வதற்கும் தடை உள்ளது. இதயம் கல்லீரல், சிறுநீரகம், கணையம், கண் போன்ற உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. தானம் […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் புயவர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கூட்டுக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் புயவர்மம் பற்றி அறிவோம். புயவர்மம் புயத்தின் நடுச்சுழியில் அமைந்துள்ளது. புஜ வர்மம், புஜப்பொருத்து வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “புஜத்தின் நடுச்சுழியில் புயவர்மம்”.                                                                                 – வர்ம குருநூல் “தாக்குகின்ற காறை எல்லுமுனை அற்றத்தில் சார்வாக புயவர்மம்”.                                                                                – வர்ம கலைக்களஞ்சியம் என குறிப்பிடுகிறது. “தீருமடா காறையதின் முனையில் தானே திறமான […]
Read More
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன். முகமது அலியின் உரை:                “ஏன் எல்லாம் வெள்ளையாக இருக்கிறது?” “நான் எப்போதும் என் அம்மாவிடம் கேட்பேன், ‘அம்மா, ஏன் இங்கே எல்லாமே வெள்ளையாக இருக்கிறது?’ என்று. நான் கேட்டேன்: ‘ஏன் இயேசு (Jesus) மட்டும் பொன்னிற தலைமுடியுடனும், நீல நிற கண்களுடனும் வெள்ளையாக இருக்கிறார்? ஏன் அந்த ‘இறுதி இரவு உணவு’ (The Lord’s Supper) ஓவியத்தில் இருப்பவர்கள் அனைவரும் வெள்ளை மனிதர்களாக இருக்கிறார்கள்? தேவதூதர்கள் வெள்ளையாக இருக்கிறார்கள், போப் ஆண்டவர், மேரி […]
Read More