சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

– வழக்கறிஞர்   பி. விஜயகுமார்

மனித உறுப்பு மாற்று முறை சட்டம் 1994

(The Transplantation of human organs & Tissues Act 1994)

மேற்படி சட்டப்படி உடல் உறுப்பு தானம் செய்வோர் தாமாக முன் வந்து தானம் செய்ய வேண்டும். பிறர் வற்புறுத்தலால் தானம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வியாபார ரீதியில் உறுப்புத்தானம் செய்வதற்கும் தடை உள்ளது.

இதயம் கல்லீரல், சிறுநீரகம், கணையம், கண் போன்ற உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. தானம் வழங்குபவர் உயிரோடும் இருக்கலாம் அல்லது இறந்த பிறகும் தானம் செய்யலாம். மூளைச்சாவு  (Brain Death) அடைந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்வது இறந்தவரின் உறுப்பு தானம் செய்யப்பட்டது என்றே கருதப்படும்.

உடல் உறுப்பு தானம் முதன் முதலில் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும். மற்றவர்களுக்கு தானம் அளிக்க வேண்டுமென்றால் குடும்ப உறுப்பினர்களின் அனுமதி தேவை.

மனித உறுப்பு மாற்று சிகிட்சை எல்லா மருத்துவமனைகளாலும் செய்ய முடியாது. இதற்காக அந்த மருத்துவமனை அரசின் தனி அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும் அம்மருத்துவமனை பதிவு செய்யப்பட்ட மருத்துவமனையாக இருக்க வேண்டும்.

மனித உறுப்பு வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று. அவ்வாறு வியாபாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவ்வாறு செய்பவர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் 5 முதல் 10 வருடம் வரை சிறைத் தண்டனையும் அபாரதமுத் விதிக்கப்படும். பொதுவாக சிறுநீரக வியாபாரம் தான் அதிகம் அமுக்கமாக நடைபெறுகிறது. இந்த வியாபாரம் கண்டுபிடிக்கப்பட்டால் அவ்வியாபாரிகளுக்கு மேலே சொல்லப்பட்டுள்ள தண்டனை வரும்.

மேற்படி வியாபாரத்தில் மருத்துவர்களும் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்களின் மருத்துவ தொழில் பதிவு ரத்து ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *