மே தினம் + உழைப்பாளர் சிலை

மே தினம் + உழைப்பாளர் சிலை

  • By Magazine
  • |

.  –  இந்திரன், எழுத்தாளர், ஓவியர்

  1. இந்தியாவிலேயே முதல் முதலாக மே தினம் சென்னையில்தான் கொண்டாடப்பட்டது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரால் நிறுவப்பட்டதை நினைவு கூறும்  வகையில் 1959  ஜனவரி 25  சென்னை மெரீனா கடற்கரையில் அப்போதைய முதலமைச்சர் கர்மவீரர் காமராசரால் உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது.
  2. இதனை சென்னை ஓவியக் கல்லூரியின் முதல்வரும் அகில இந்தியச் சிற்பியுமான தேவி பிரசாத் ராய் சௌதுரி படைத்து இருந்தார்.
  3. ஆனால் ராய் சௌதுரிக்கு உழைப்பின் வெற்றியைக் கொண்டாடுவது நோக்கமல்ல. ராய் சௌதுரி ஒரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
  4. ஒரு இத்தாலிய சிற்பியிடம் மேலை நாட்டு சிற்பத்தைப் பயின்றவர். ஒரு மல்யுத்த, குஸ்தி  வீரரான ராய் சௌதுரிக்கு தசைத் திரட்சியை விளக்கும் வகையில் ஒரு சிற்பம் செய்யும் ஆசை வந்தது. அப்போது சென்னை ஓவியக்கல்லூரியில் காவல்காரராக இருந்த ஸ்ரீனிவாசன் , மாணவன் ராமு ஆகியவர்களை மாடலாக வைத்து ஒரு கல்லைப்புரட்டிப் போடுவது மாதிரி போஸ் கொடுக்க வைத்து இந்த சிற்பத்தை உருவாக்கினார். நான்கு உழைப்பாளிகள் ஒரு பாறையை உருட்டித் தள்ளுவது மாதிரி படைத்து இருந்தார்.
  5. இந்த சிற்பத்தை விலைக்கு வாங்கி காமராசர் முதலமைச்சராக இருந்த தமிழ்நாட்டு அரசு ” உழைப்பின் வெற்றி “ என்று பெயர் கொடுத்து நிறுவியது.
  6. சென்னை கடற்கரையில் மகாத்மா காந்தி சிலையைச் செய்தவர் தான் ராய் சௌதுரி எனும் இந்த சிற்பி. இதோ ராய் சௌதுரி சொல்வதைக் கேளுங்கள்.“

“என்னை வெளிப்படையாக இருக்க விடுங்கள். நான் ஒரு அறிவு ஜீவியாக பாசாங்கு செய்ய விரும்பவில்லை. நான் மல்யுதத்தையும் குஸ்தியையும் எந்த அளவுக்கு விரும்புகிறேனோ அதே அளவுக்கு கலையையும் விரும்புகிறேன். நான் கோட்பாடுகளில் விருப்பம் கொண்டிருக்கவில்லை.” வேடிக்கை என்னவென்றால் பொது உடைமை சித்தாந்தத்தில் நம்பிக்கையில்லாத ஒரு சிற்பி கலை எனும் காரணத்துக்காக செய்த சிற்பம் இன்று உழைப்பாளிகளின் பெருமை பேசுவதாக அரசாங்கத்தால் பெயரிடப்பட்டு நிற்கிறது என்பதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *