சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் Passive Euthanasia  (இயல்பான மரணத்தை அனுமதித்தல்) சண்டிகார் பல்கலைக்கழகத்தில் சுமார் பத்து ஆண்டுகள் முன்பாக படித்துக் கொண்டிருந்த ராணா என்ற மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து கடந்த 10 வருடங்களாக உயிருடன் இருந்தாலும் நினைவு மற்றும் உணர்வு இல்லாத நிலையில் இருந்து வந்தார். மனிதன் உயிருடன் இருப்பார். (மூச்சு, இதயத்துடிப்பு போன்றவை நடக்கும்) ஆனால் அறிவு இருக்காது. சுற்றியுள்ள உலகை உணர முடியாது. பேசவும் பதிலளிக்கவும் முடியாது. இயந்திர உதவியுடன் தான் […]
Read More
  • By Magazine
  • |
– காளீஸ்வர் சமீபத்திய உலக அரசியல் சூழல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு வழி வகுத்திருக்கிறது. நிலைமை சீராகுமா எனும் சந்தேகங்கள் ஒருபுறம் இருக்கும் இடத்தில், எங்கே எரிபொருள் கிடைக்காது போய்விடுமோ என்கிற அச்சத்தில்! எரிபொருள் நிலையங்களில் மக்கள் செய்யும் விஷ பரீட்சைகளை பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. குடிதண்ணீர் கேன்கள், குடங்கள் என கிடைக்கும் பொருட்களில் எல்லாம் பெட்ரோலை வாங்கி மக்கள் நிரப்பி கொள்வதற்காக இணையம் முழுவதும் பல காணொளிகள் பரவுகிறது. […]
Read More
தேசபற்றால் கணவனையே கொன்ற வீரமங்கை நீரா ஆர்யா
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் உத்திரபிரதேச மாநிலம் பாகுபத் மாவட்டத்தில் சேத்சஜீமால் என்ற செல்வந்தரின் செல்ல மகளாக 1905- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் நாள் பிறந்தவர் தான் வீரமங்கை நீரா ஆர்யா. தன் அன்புமகள் உத்திரபிரதேசத்தில் கல்வி பயின்றால் அவளது எதிர்காலம் சிறப்பாக அமையாது என்று எண்ணிய சேத்சஜீமால் பெரும் செலவு செய்து கொல்கத்தா அனுப்பினார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கேற்ப அவர் விருப்பப்படி திறம்பட கல்வி கற்று முதல் மாணவியாகத் திகழ்ந்தார்.  […]
Read More
மாமனிதர் நல்லகண்ணு
  • By Magazine
  • |
தமிழக அரசியலின் ‘அறம்’ என்கிற சொல்லுக்கு உருவம் கொடுத்தால், அது முதுபெரும் இந்திய கம்யூ. தலைவர் நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். 101-வது வயதில் அவர் இன்று விடைபெற்றிருப்பது, ஒரு கட்சியின் இழப்பல்ல; இந்த மண்ணின் அரசியல் எளிமையின் மறைவு! அரசியல்வாதிகள் என்றால் ‘சொத்து சேர்ப்பவர்கள்’ என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் நல்லகண்ணு. அவரது 80-வது பிறந்தநாளில், கட்சித் தொண்டர்கள் வியர்வை சிந்திச் சேர்த்த ஒரு கோடி ரூபாயையும், ஒரு புத்தம் புதிய காரையும் நல்லகண்ணுவிடம் அன்பளிப்பாக வழங்கினார்கள். மேடையில் அதனைப் […]
Read More
கல்வியின் வரலாறும் வளர்ச்சியும்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி பிறப்பினாலும், வளர்ச்சியினாலும், தோற்றத்தினாலும் மனிதர் அனைவரும் ஒன்றே என்றாலும், தனி ஒருவன் கல்வி கற்று அறிவும் ஆற்றலும் பெற்று உயர்ந்து நிற்கும் போது, அவனை உலகம் மதித்துப் போற்றுகிறது. எனவே சமுதாயத்தில் ஒரு தனிமனிதனின் பெருமைக்கும், புகழுக்கும், அறிவுக்கும் கல்வி ஒரு தலையாய காரணம் ஆகும். அறவுடையோன்வழி அரசும் செல்லும் என்பது அசைக்க முடியாத உண்மை. கிறிஸ்துவத்துக்கு ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட கி.மு 15- ஆம் நூற்றாண்டினை இந்திய வரலாற்றில் வேதகாலம் என்று குறிப்பிடுவர். […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் வாகன விபத்து வளர்ப்பு பிராணிகளுக்கு பொருந்துமா? கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 2022-ஆம் ஆண்டு ஒரு வழக்கு நடந்தது. அதாவது ஒருவர் செல்லமாக வளர்த்து வந்த உயர்ரக நாய் மீது ஒருவர் தமது வண்டியை கவனக்குறைவாக ஒட்டி, அந்த நாய்க்கு விபத்து ஏற்படுத்தி அதை சாகடித்து விட்டார். இதனால் மனம் நொந்ந நாயின் சொந்தக்காரர் நீதிமன்றத்தை நாடி விபத்து ஏற்படுத்திய டாக்சி டிரைவர் மீது இ.த.ச பிரிவு 304 A (கவனக் குறைவால் இறப்பு […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி.. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, இந்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசீய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் 2023 பிப்ரவரியில் திருப்போரூரை அடுத்த முட்டுக்காடு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் தேசீய அளவிலான கண்காட்சி மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை நடத்தியது. இந்தக் கண்காட்சியில் 23 மாநிலங்களைச் […]
Read More
நேர்மையும் நீதிமன்றங்களும்
  • By Magazine
  • |
டாக்டர். பழனி அரங்கசாமி உலகம் முழுதும் மக்களாட்சியின் மகத்தான கட்டுமானத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் நான்கு. நீதிமன்றங்கள், அரசுத்துறை, சட்டமன்றங்கள் என்பதோடு செய்தி ஊடகங்களும் அவற்றுள் ஒன்றாகும். நீதி என்பது இந்திய மண்ணில் குறிப்பாகத் தமிழகத்தில் காலம் காலமாக வேரூன்றி நிற்கும் அரியதோர் நெறிமுறையாகும். மன்னராட்சியோ, மக்களாட்சியோ எதுவாக இருப்பினும் ஆட்சிகள் மாறலாம். ஆளுவோர் மாறுவர். ஆனால் நேர்மை என்னும் ஆணிவேரில் முகிழ்த்து நிற்கும் நீதி என்பது சாகாமல் வாழும் ஒரு சமூகப்பண்பு. பசுவின் கன்றைக் தேர்க்காலில் […]
Read More
உலகின் புதிரான முதல் கொலையும் மிகப்பழமையான மனித இரத்தமும்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி அற்புதமான அறிவியல்..! அறிவியல் உலகில்,   அதிரடித் திருப்பு  முனையாக, உலகத்தைத் திருப்பிபோட்ட, பிரமிக்கச் செய்த ஒரு தகவல்  இப்போது   கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . அது  என்ன   என்று  தெரிந்தால்  நீங்களெல்லாம்  ஆச்சரியத்தில்  மயக்கம்  போட்டு விடுவீர்கள் . உடலிலிருந்து  இரத்தம்  வெளியேறிய, கண நேரத்தில், காற்று அதன் மேல் பட்டவுடன், இரத்தம் இறுகிக்    கட்டியாகிவிடும். இதுதான் இரத்தத்தின் இயல்புத் தன்மையும்  கூட. அது நிகழவில்லை என்றால், சின்ன காயம் பட்டால் கூட அது […]
Read More
போதைப் பழக்கத்தால்   மதியிழந்த மனிதர்கள்
  • By Magazine
  • |
C. முருகன் மக்கள் சமுதாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் பிரச்சனை போதைப்பழக்கம் ஆகும். வயது வித்தியாசம் இன்றி சமுதாயத்தில் போதைப்பழக்கம் வேரூன்றி உள்ளது என்பது கவலைக்குரியது ஆகும். போதைப்பழக்கத்தை தடுக்கும் விதமாக பல சட்டங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இப்பழக்கம் ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடத்தும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26-ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நோய்களும், தற்கொலைகளும் போதை […]
Read More