– கஸ்தூரிபா ஜாண்ஸன்
கிரியேட்டினின் (Creatinine) என்பது அன்றாட செயல்பாட்டின் போது தசைநார்கள் சிதைவடைவதால் உருவாகும் ஒரு கழிவுப்பொருளாகும். சுருக்கமாகச் சொன்னால் கிரியேட்டினின் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அளவிட உதவும் ஒரு முக்கியமான இரத்தக் கழிவுப்பொருள் எனலாம்.
கிரியேட்டின் சில செய்திகள்
இரத்தத்தில் கிரியேட்டின் அளவு அதிகரிப்பது, சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதைக் குறிக்கும் முக்கிய அறிகுறியாகும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள இந்த கழிவைக் வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. தசை ஆற்றலை பயன்படுத்தும் போது கிரியேட்டினின் இயற்கையாகவே உருவாகிறது.
இரத்தப் பரிசோதனை மூலம் கிரியேட்டினின் அளவு அளவிடப்பட்டு சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மற்றும் வடிகட்டும் திறன் கண்டறியப்படுகிறது. நமக்கு தசைகள் அதிகம் இருந்தால் உடல் அதிக கிரியேட்டினை உற்பத்தி செய்கிறது. இது இரத்தத்தின் மூலம் சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது புரதத்தின் கட்டுமானத் தொகுதிகளான மூன்று அமினோ அமிலங்களிலிருந்து ஒரு கலவை. இது எலும்பு தசைகளை நெகிழ வைக்கிறது. இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 1.7 இருந்தால் ஆபத்தானது.
அறிகுறிகள்
கிரியேட்டினின் அளவு அதிகம் இருந்தால் சோர்வு, சிறுநீரில் மாற்றம், முகம் கால் போன்றவைகளில் வீக்கம், முதுகுவலி ஏற்படலாம்.
கிரியேட்டினின் அளவு அதிகரிக்க காரணங்கள்
சிறுநீரக நோய், கடுமையான நீரிழப்பு, அதிகப்படியான உடற்பயிற்சி, அதிக அளவு புரத உணவு உட்கொள்தல், சிறுநீரில் அதிக புரதம் வெளியாதல், அதிக இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அதிகம் இருப்பதால் சிறுநீரகங்களுக்கு செல்லும் நரம்புகள் பாதிப்பு, ஸ்டீராய்டு பயன்படுத்துதல் வீட்டு சாப்பாட்டை தவிர்த்து வெளியில் சாப்பிடுவது, நீர் அதிகம் அருந்தாமை போன்ற காரணங்களால் யூரியா கிரியேட்டின் அளவு அதிகரிக்கறது.
கிரியேட்டின் அளவை குறைக்க
உப்பு, பால் சேர்ந்த உணவுகள், அதிகப் புரதம் சேர்ந்த அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொண்டைக்கடலை , துவரம் பருப்பு போன்ற புரதம் நிறைந்த உணவுகள் தவிர்க்க வேண்டும். நீர் அதிகம் குடிக்க வேண்டும். சிவப்பு இறைச்சி (Red meat) தவிர்ப்பது நல்லது.
உப்பு சோடியம் குறைந்த உணவு உண்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். அது சிறுநீரகத்தை பாதுகாக்கும். கிவி, அன்னாசி, எலுமிச்சை, மாதுளை, நெல்லிக்காய் போன்ற பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த இஞ்சி டீ அருந்தலாம்.
மேலும் நான்கைந்து பூண்டு பற்கள் நசுக்கி தினம் மென்று சாப்பிடுவது நல்லது. கிரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடண்டுகள் சிறுநீரக வடிகட்டுதல் திறனை மேம்படுத்தி கிரியேட்டினின் அளவைக் குறைக்கும்.
இலவங்கப்பட்டை இயற்கையான சிறுநீர்ப்பெருக்கி (Diuretic) ஆக செயல்படுகிறது. எனவே இதன் மூலம் சிறுநீரகச் செயல்பாடு மேம்படுகிறது. தண்ணீர் தினம் போதிய அளவு அருந்துதல் மிக அவசியம். சிறுநீரக பாதிப்பு அதிகம் இருந்தால் மருத்துவர் ஆலோசனை தேவை.
மேலும் இந்நோயாளிகள் சவ்சவ், புடலை, வெள்ளைப்பூசணி, வெண்டைக்காய், கோவைக்காய், வாழைக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், கொத்தவரக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை சர்க்கரை அளவைக் குறைக்கும்.
வாழை இலையுடன் சீரகம் சேர்த்து குடிநீர் செய்து அருந்தலாம். வாழைத்தண்டு நீர் சுமார் 80 மில்லி குடிப்பதும் சிறந்தது. இதை தவிர மருத்துவர் ஆலோசனையுடன் சீந்தில் கொடி குடிநீர், நீர்முள்ளி, நெருஞ்சில் சூரணம், மரமஞ்சள் குடிநீர் ஆகியவற்றை அருந்தலாம்.
சிறுநீர் கழித்தப்பின் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது படிகார நீர் கலந்த நீரில் கழுவுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கிரியேட்டின் அளவு
நமக்கு தசைகள் அதிகம் இருந்தால் உடல் அதிக கிரியேட்டினை உற்பத்தி செய்யும். பெரியவர்களுக்கு அளவு பொதுவாக ஆண்களுக்கு 07 முதல் 1.3 mg/dl மற்றும் பெண்களுக்கு 0.6 முதல் 1.1 mg/dl வரை இருக்க வேண்டும்.
தசை நிறை, வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து இந்த அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்த வரம்பை விட அதிகமாக இருந்தால் அது சிறுநீரக செயல்பாடு குறைபாட்டைக் குறிக்கும்.
அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அல்லது அதிக தசை நிறை கொண்டவர்களுக்கும் கிரியேட்டினின் அளவு சற்று அதிகம் இருக்கலாம். இது இயல்பு தான். மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.
Leave a Reply