குளச்சல் ரவிச்சந்திரன்
குடும்பம்
என்னும்
மலர் வளையத்தில்
வாசம் வீசும்
அன்பு
தேவதைகளே
பெண்கள்,
தோற்றுப் போனது
தோல்விகள்
உண்மைதான்,
காலங்காலம்
தொட்டு
கிழக்கும்
மேற்கும்
இதுவரை
சமநீதி
கண்டதுண்டோ?…
இடப்பாகம்
அளித்து-ஈசன்
அர்த்தநாரி
ஆகியும்,
பூசையோடு
பெண்மை
மறுக்கப்படுவது
மாபெரும்
உண்மை,
இந்த ஆண்டு
மார்ச் மாதம்
எட்டாம் தியதி
அன்று,,,,
“உலகெங்கும்
பெண்ணிற்கு
எதிரான
வன்முறைகள்
இன்று
இல்லை” யென
நாளை
செய்தி வந்தால்……
வெற்றிதான்.
Leave a Reply