சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA – 298-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில், திரு. கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மூலச்சல் டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 04.04.2026 அன்று மதியம் சுமார் 2 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில் திரு. அருள்தாஸ் ஆசான் ஆறறிவு விளக்கம் குறித்துப் பேசினார். மேலும் மூலநோய்களுக்கு கந்தக செந்தூரம், நரம்புச்சுருக்கம், கட்டிகளுக்கு வெடியுப்பு சுண்ணம் செய்முறையைக் கூறினார்.

திரு. சுப்பிரமணிய ஆசான் தமரக வாயு குணமாக மருந்து, சொறி, சிரங்கு, படை, செங்கிரந்தி இவற்றுக்கு மருந்து, குழந்தையின்மைக்கான மருந்து செய்முறைகளைக் கூறினார்.

திரு.மைக்கேல் ஆசான் சிறுநீரகக்கல் குணமாக வெடியுப்பு சுண்ணம் செய்முறையைக் கூறினார்.

அடுத்ததாக மருத்துவர்.த.இராஜேந்திரன் தலைமையில் SAVKIA-25-வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.

கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *