சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் Passive Euthanasia  (இயல்பான மரணத்தை அனுமதித்தல்) சண்டிகார் பல்கலைக்கழகத்தில் சுமார் பத்து ஆண்டுகள் முன்பாக படித்துக் கொண்டிருந்த ராணா என்ற மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து கடந்த 10 வருடங்களாக உயிருடன் இருந்தாலும் நினைவு மற்றும் உணர்வு இல்லாத நிலையில் இருந்து வந்தார். மனிதன் உயிருடன் இருப்பார். (மூச்சு, இதயத்துடிப்பு போன்றவை நடக்கும்) ஆனால் அறிவு இருக்காது. சுற்றியுள்ள உலகை உணர முடியாது. பேசவும் பதிலளிக்கவும் முடியாது. இயந்திர உதவியுடன் தான் […]
Read More
  • By Magazine
  • |
– பராந்தகன் தொடர்ந்து விண்ணிலே வேட்டுச் சத்தம்.. வானம் திகைத்துத்தான் போனது. பண்டிகைப் பொழுதும் இல்லை , திருமணக் கொண்டாட்டம் இத்தனை நாளா? பெருவாழ்வு வாழ்ந்தவர்களின் கல்யாண சாவா! வானின் அகண்ட பார்வையில் அகப்பட்டது, கனவைச் சுமந்த பிஞ்சுகளும் அவர்களை அரவணைத்த கட்டிடங்களும், அன்றாட அலுவல்களில் திளைத்த மாந்தர்களும் அகால மரணம் அடைந்த போர்காலம் இது என்று
Read More
ரெண்டு குடம் தண்ணி
  • By Magazine
  • |
விஜயபாரதி “இப்பதான் ரெண்டு குடம் புடிச்சிகிட்டு போன அதுக்குள்ள இன்னும் ரெண்டு கொடம் எடுத்துட்டு வந்து தண்ணி புடிக்கிற”என்றாள் தனம். “ம்ம்ம்ம்ம் ,,,,என இழுத்தபடி நீயும் தான்” என்று பதில் உரைத்தவள், மீண்டும் சொன்னாள் “அடுப்ப சிம்ல வச்சுட்டு ரெண்டு கொடத்த தூக்கிட்டு ஓடியாந்தேன் தண்ணி நின்னுடும்ல்ல அதான்” என்றாள் கல்யாணி.”ரெண்டு கொடம் பத்தாதா?” என்றாள் போதும். “அது எனக்கு புடிச்சிட்டு போனேன், இது என் மாமியாவுக்கு புடிச்சு வக்கிறேன், அது எங்க ஆட்டிட்டு வரப்போவுது, அதான் […]
Read More
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் கம்பனது காவியம் தான் காசினியில் மாந்தக்                 கற்பனையின் கோட்டைக்குத் தூணாகிடும் காண் அம்பலத்தில் கற்புத்தீ ஆர்த்தெழுந்த காதை                 அளித்திட்ட இளங்கோவின் சிலம்பும் நற்றூண்தான் நம்பலமாம் நன்னெறியின் வாழ்வியலை ஈந்த                 நன்மறையாம் வள்ளுவரின் வள்ளுவமும் தூண்தான் உம்பரும்தாம் போற்றுமுயர் துறவுரைத்த நூலாம்                 உயர்வுமணி மேகலையோ ஞானமிகு தூண்தான்! அம்புவியில் மழலையென அவதரித்த நாளாய்                 அறிவூட்டும் நூல்களெலாம் அறந்தாங்கும் தூண்கள் செம்புலப்பெய் நீரெனவே சேர்த்தே நாம் அணைத்தால்                 சிந்தனையின் கோட்டையெலாம் […]
Read More
வர்ம அடிமுறை வரலாற்றின் வாழும் சாட்சி  கிள்ளியூர் கே.ஆர்.ராஜ்குமார் ஆசானுடன் ஒரு நேர்காணல்!
  • By Magazine
  • |
குமரி மண்ணின் வீரக்கலையான வர்மம் மற்றும் அடிமுறைத் துறையில் சுமார் 70 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் 82 வயது நிறைந்த தமிழ் வித்வான் கே.ஆர். ராஜ்குமார் ஆசான் அவர்கள். இரண்டு முதுகலை (M.A) பட்டங்கள் பெற்ற கல்வியாளரான இவர், தனது பாரம்பரியக் கலை அறிவைப் பகிர்ந்து கொள்கிறார். கேள்வி: ஆசான் அவர்களே, கல்விப்புலத்தில் இவ்வளவு பட்டங்களைப் பெற்ற உங்களுக்கு, இந்த வர்ம மற்றும் தற்காப்புக் கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி? பதில்: எனது குடும்பமே ஒரு […]
Read More
உதவும் உள்ளங்கள்
  • By Magazine
  • |
 திருமதி .செல்வி ஞானதாஸ் “கடவுளே! என் பிள்ளைக்கு நல்லபடியா ஒரு கல்யாணம் முடிஞ்சிட்டா, என் கடமை முடிஞ்சிரும். அவனைக் கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்கியாச்சு. அவனுக்கு ஒரு துணை கிடைச்சா போதும்,” எனச் சொர்ணம்மாள் மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார். அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த சோமு சிரித்துக் கொண்டே வந்தான். “என்னம்மா… காலையிலேயே ஒரே வேண்டுதலா இருக்கு? இன்னைக்குப் பார்க்கப்போற பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிருவேன்னு பயமா?” என்றான். “ஆமாப்பா… அந்தப் பொண்ணு பாக்கியாவுக்குப் படிப்பு மட்டும் இருந்தா போதும்னு […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA–297 வது கருத்தாய்வு கூட்டமானது 07.03.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு.இராஜன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.ஜாண் ஆகியோர் முன்னிலையில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் உடல் உஷ்ணம், நரம்பு வலிமை இவற்றுக்கு அமிர்த சஞ்சீவி சூரணம் செய்முறையைக் கூறினார். திரு. அருள்தாஸ் ஆசான் பாசாண விசம் முறிக்கும் மருந்து செய்முறையைக் கூறினார். மேலும் ஒடிவுமுறிவு, புண், தீபட்டபுண், அடிபட்ட காயம் […]
Read More
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… பேரண்ட (பிரபஞ்சம்) தோற்றம் பற்றிய அறிவியல் ஆய்வுகள் பேரண்டத் தோற்றம் பற்றி சமயம் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை, தத்தம் கொள்கைகளுக்கேற்ப நம்பிக்கைக்குரியதாய் காணப்படுகின்றன. 1. கடவுள் எனும் ஓர் ஒப்பற்ற ஆற்றல் படைத்தவர் நேரடியாகவே பிரபஞ்சத்தையும் அதன் உயிரினங்களையும் படைத்தார். 2. சூனியத்திலிருந்து பிரபஞ்சம் உருவாகியது. 3. இப்பிரபஞ்சம் கண்ணுக்குப் புலப்படாத பரமாணுக்களின் சேர்க்கையில் உருவானது என்பன […]
Read More
ஃபாஸ்ட்ஃபுட்  –Fast Food
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா    ஜாண்ஸன் ஃபாஸ்ட்ஃபுட் உணவில் செயற்கை நிறங்களை அதிகம் கலக்கின்றனர். சான்ட்விச், சிக்கன் 65, பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற பல்வேறு உணவுகள் துரித உணவுகள் என்ற பெயரில் பல்வேறு வகையான நிறப்பொடிகளுடன் அலங்காரமாக அங்காடிகளில் அரங்கேறுகின்றன. நிறத்துக்காகவும், ருசிக்காகவும், மணத்துக்காகவும் சிறுவர் முதல் பெரியோர் வரை அவற்றை உண்டு ருசிக்கின்றனர். அவற்றில் பல்வேறு வகையான இராசாயன மருந்துகள் சேர்க்கப்படுகின்றன. அதனால் குடல் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்கோளாறு, உடல் பருமன் போன்ற […]
Read More
கூடாரத்தில் கசிந்த குளம்படி
  • By Magazine
  • |
அகிலா கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையின் நுழைவு வாயில். வெள்ளை வண்ணம் பூசிய பழங்காலத்துக் கட்டிடமாக இருந்தது. அதற்கு நூற்றாண்டுகால வரலாறு இருப்பதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு வகையில் அங்கே பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் வலப்பக்கத்தில் சிறிது தூரத்தில் பெரிய வேப்ப மரம். அதைக்கடந்து தான் பிரசவ வார்டுக்கு செல்ல வேண்டும். எந்தக் காலமும் அந்த மரத்தை தனித்துப் பார்த்ததே இல்லை. பறவைகளோடு சேர்த்து பிரசவத்திற்கு வந்தவர்கள், அவர்களுக்காகக் காத்திருப்பவர்கள், உணவு, உறைவிடம் என இல்லாதவர்களுக்கு […]
Read More