– வழக்கறிஞர் பி. விஜயகுமார்
Passive Euthanasia (இயல்பான மரணத்தை அனுமதித்தல்)
சண்டிகார் பல்கலைக்கழகத்தில் சுமார் பத்து ஆண்டுகள் முன்பாக படித்துக் கொண்டிருந்த ராணா என்ற மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து கடந்த 10 வருடங்களாக உயிருடன் இருந்தாலும் நினைவு மற்றும் உணர்வு இல்லாத நிலையில் இருந்து வந்தார். மனிதன் உயிருடன் இருப்பார். (மூச்சு, இதயத்துடிப்பு போன்றவை நடக்கும்) ஆனால் அறிவு இருக்காது. சுற்றியுள்ள உலகை உணர முடியாது. பேசவும் பதிலளிக்கவும் முடியாது. இயந்திர உதவியுடன் தான் வாழ முடியும். இதற்குத்தான் ஆங்கிலத்தில் Uegetative State என்று பெயர்.
இவர்கள் வென்டிலேட்டர் உதவியுடன் தான் சுவாசிக்க முடியும். இவர்களுக்கு குழாய் மூலம் தான் உணவு செலுத்த முடியும். தொடர்ந்து மாத்திரை மருந்துகளில் மட்டுமே உயிர் இருக்கும்.
கடந்த 10 வருடங்களாக கஷ்டப்பட்ட ராணாவின் பெற்றோர்களுக்கு இப்போது வயதாகி விட்டது. தாங்கள் காலத்திற்குப் பிறகு ராணாவை யார் கவனிப்பார் என்ற கவலையெல்லாம் வந்துவிட்டது. ஆதலால் தமது காலத்திலேயே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் உச்சநீதிமன்றத்தை நாடினர். உச்ச நீதிமன்றத்தில் தமது மகன் இயற்கையாக இறப்பதற்கு அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். மகனால் இனிமேல் மீளவே முடியாது என்றனர். அனைத்து மருத்துவ சிகிட்சை சான்றிதழ்களையும் சமர்ப்பித்தனர். மருத்துவ சான்றிதழ்களை பார்த்த நீதிமன்றம் கனத்த மனதுடன் ராணாவின் இயல்பான மரணத்திற்கு அனுமதி வழங்கினர். இதற்குப் பெயர்தான் ஆங்கிலத்தில் assive Euthanasia என்பதாகும்.
இப்போது இயல்பான மரணம் என்றால் என்ன?
செயற்கை சுவாசம், குழாய் வழி உணவு, மருந்து, மாத்திரைகள் கொடுத்து வந்த அத்தனையும் ராணாவுக்கு இப்போது படிப்படியாக நிறுத்துவர். பிறகு இயற்கையாகவே மரணம் ஏற்படும். இவ்வளவு நாளும் இயந்திர உதவியுடன் வாழ்ந்து வந்த ராணாவிற்கு இயந்திர உதவியும் படிப்படியாக நிறுத்தப்படும். பிறகு ராணா இயற்கை எய்துவார். இவ்வாறு செய்வதற்கு குடும்ப சம்மதம் வேண்டும். நீதிமன்ற அனுதியும் வேண்டும்.
இதற்கு முன் மும்பையில் ஒரு நர்ஸ் சுமார் 34 ஆண்டுகளாக இதே நிலைமையில் இருந்து வந்தார். இவருக்கும் நீதிமன்ற உத்தரவுபடி Passive Euthanasia மேற்கொள்ளப்பட்டது. ராணா விவகாரம் இந்தியாவில் இரண்டாவது நிகழ்வு ஆகும். Active Euthanasia என்பது கருணை கொலை எனப்படும். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காது. கருணை கொலை என்றால் நோயால் கடும் அவஸ்தை படும் ஒரு நபரை வெளி உலகுக்குத் தெரியாமல் விஷ ஊசி போட்டோ அல்லது இதர முறையை கையாண்டோ அந்த நபரின் இறப்பை ஏற்படுத்துவது. இம்முறைக்கு சிலர் மனம் ஒத்துக் கொள்ளாது.
Leave a Reply