– கஸ்தூரிபா ஜாண்ஸன்
ஃபாஸ்ட்ஃபுட் உணவில் செயற்கை நிறங்களை அதிகம் கலக்கின்றனர். சான்ட்விச், சிக்கன் 65, பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற பல்வேறு உணவுகள் துரித உணவுகள் என்ற பெயரில் பல்வேறு வகையான நிறப்பொடிகளுடன் அலங்காரமாக அங்காடிகளில் அரங்கேறுகின்றன. நிறத்துக்காகவும், ருசிக்காகவும், மணத்துக்காகவும் சிறுவர் முதல் பெரியோர் வரை அவற்றை உண்டு ருசிக்கின்றனர். அவற்றில் பல்வேறு வகையான இராசாயன மருந்துகள் சேர்க்கப்படுகின்றன. அதனால் குடல் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்கோளாறு, உடல் பருமன் போன்ற நோய்கள் தோன்றி வாட்டி எடுக்கின்றன.
மஞ்சள், பச்சை, சிவப்பு வண்ணங்களில் அல்வா, கேசரி போன்ற பலகாரங்கள் செய்ய பயன்படும் கலர் வேதியல் பொடிகள் ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது என்று கருதப்படுகிறது.
மேலும் பெண்கள், ஆண்கள் தங்கள் முடியை நிறம் மாற்றம் செய்ய பயன்படுத்தும் பிணீவீக்ஷீ பீஹ்மீ தோல் புற்றுநோயை உண்டாக்குகிறது. பலருக்குத் தலையின் தோல் வழியாக முகத்தில் இறங்கி முகத்தில் திட்டுகளாக காட்சி அளிக்கிறது.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல்வேறு வகையான வலிகளையும் வரவழைக்கின்றோம். (பிளாஸ்டிக் கவர்களில் வைத்து உணவுகள் உண்பதும் ஆபத்து தான்). அஜினோ மோட்டோ உணவில் சுவை கூட்ட பயன்படுகிறது. இதில் உள்ள இராசாயனப் பொருள் தாழ்ந்த இரத்த அழுத்தத்தையும், முடி கொட்டுதல், வாதம் போன்ற நோய்களையும் உண்டாக்கும். ஊறுகாய் தயாரிப்பில் உதவும் வினிகர் எனப்படும் அசிட்டிக் அமிலம் உடலுக்கு பல்வேறு நோய்களை உண்டாக்குவதாக கூறப்படுகிறது.
ஆண்களை விட பெண்கள் பலர் இதயநோய் போன்ற பல்வேறு நோய்களால் மேற்சொன்ன பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர்.
நாம் கடைகளில் வாங்கும் ஓமம் தண்ணீரில் கலந்து வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பயன்படுததுவார்கள். இத்துடன் சில வேதி பொருட்களும் கலக்கிறார்கள். வெண்ணிலா எலன்சில் பினாயில் கலக்கப்படுகிறதாம்.
பாக்கெட் பாலிலும், குளிர்பானங்களான லிம்கா, மெரிண்டா, கொக்கோ கோலா போன்றவற்றிலும் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை அறிகிறோம்.
மேலும் Junk food எனப்படும் நொறுக்குத் தீனிகளான முறுக்கு, பிஸ்கட், மிச்சர், பக்கோடா, சிப்ஸ், பர்கர், பிஸ்ஸா போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளாலும் நமது எடை அதிகரிக்கிறது. தொடர்ந்து துரித உணவுகள் உண்பதால் கொழுப்பு, சோடியம், சர்க்கரை அதிகமாக இருக்கும். அவை மெல்ல கொல்லும் விஷமாக மாறி உடற்பருமன், இதயநோய், நீரிழிவு, மூட்டுவலி, மூச்சிரைப்பு என்று வரிசையாக பல நோய்களுக்கும் வித்திடுகிறது என்று அஞ்சப்படுகிறது.
Leave a Reply