சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA–297 வது கருத்தாய்வு கூட்டமானது 07.03.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு.இராஜன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.ஜாண் ஆகியோர் முன்னிலையில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் உடல் உஷ்ணம், நரம்பு வலிமை இவற்றுக்கு அமிர்த சஞ்சீவி சூரணம் செய்முறையைக் கூறினார்.

திரு. அருள்தாஸ் ஆசான் பாசாண விசம் முறிக்கும் மருந்து செய்முறையைக் கூறினார். மேலும் ஒடிவுமுறிவு, புண், தீபட்டபுண், அடிபட்ட காயம் இவற்றுக்கு ரச தைலம் செய்முறையையும் கூறினார்.

மரு.கமலகண்ணன் பாரம்பரிய மருத்துவர்கள் உரிய அங்கீகாரம் பெற்று சிகிட்சை செய்வது குறித்து பேசியதோடு, நாள்பட்ட தலைவலி, சளிப்பிரச்சனைகள் குணமாக தலைக்கு வைக்கும் தைலம் செய்முறையையும், ஒரு தலைவலி, நரம்புநோய்கள் குணமாக தலைக்கு வைக்கும் தைலம், மூக்கடைப்பு, நீர்க்கோவை, தும்மல் இவற்றுக்கு தலைக்கு வைக்கும் தைலம் செய்முறையையும் தெளிவாக கூறினார்.

திரு.ஜாண் ஆசான் மூலம், பௌத்திரம் குணமாக வாலைரசம் செய்முறை, கரும்புள்ளி, தழும்புகள் மாற மருந்து செய்முறையைக் கூறினார்.

திரு.சுப்பிரமணியம் ஆசான் மூலநோய்க்கான எளிய மருந்தினையும், வர்ம நோய்கள், தேறாத குழந்தைகளை தேற வைக்க தேரை நெய் செய்முறையைக் கூறினார்.

திரு.ஜெபமணி ஆசான் அழல்வாதம், கடுப்பு, உழைச்சலுக்கு பூச்சு மருந்து செய்முறையை கூறினார்.

திரு. அருள்செல்வன் ஆசான் பித்தவாயு, பித்தமந்தம், பெருமல், நெஞ்சடைப்பு, வயறுவலி இவற்றுக்கு இஞ்சி லேகியம் செய்முறையைக் கூறினார்.

திரு. சுப்பிரமணியம் ஆசான் தோல் நோய்களுக்கு பூச்சு மருந்தினையும், சிறுநீரகக்கல் வலி மாற எளிய மருந்தினையும், பாம்பு விசம் முறிக்க எளிய மருந்து மற்றும் சிறுநீரக செயல்பாடுகளுக்கு எளிய மருந்தினையும் கூறினார்.

திரு.ஜெகஜீவன் ஆசான் சொரியாசிஸ் குணமாக சூரணம் செய்முறையைக் கூறினார். மேலும் எல்லாவித இரத்தப்போக்கும் கட்டுப்பட ஹோமியோ மருந்தினையும் கூறினார்.

திரு.ஸ்டீபன் ஆசான் மேகம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், படபடப்பு, உடல்காந்தல், பித்தம், தலைச்சுற்று மாற தைலம் செய்முறையைக் கூறினார்.

மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் SAVKIA 25-வது ஆண்டுவிழா நடத்துவது குறித்து சில ஆலோசனைகளைக் கூறினார். மேலும் நீரிழிவு நோய்க்கான மூலிகைகளையும், நீரிழிவு நோய் கட்டுப்படுவதற்கான மருந்துகளையும் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.அருள்செல்வன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *