படிப்பதற்கு நேரம் ஓதுக்குங்கள் !
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் மனிதனுக்கும் அவனுடைய தலைவிதிக்கும் இடையே உண்மையாக உரையாடி அவனை நடுநிலைப்படுத்துவதே புத்தகம் தான். மனிதனாக பிறந்துள்ள ஒவ்வொருவரும் விலக்க முடியாத முடிவாக புத்தகங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. மனித இனத்தில் சிறப்புடைய மனிதனாக உயர, நாளைய தினம் நன்மைகளைக் கண்டுபிடிக்க உதவுவது புத்தகம் தான். மனிதனுக்கு நிறைய கனவுகள் உள்ளன. போற்றி வைத்து பாதுகாத்து வரும் அந்த கனவுகள், உண்மையில் நிஜமாக உருவானதால் தான் ஜெயித்தோம். கனவுகளை நிஜமாக்க முயற்சி செய்யும் போது ஏற்படும் தடைகள் […]
Read More
பெண்களே ! உங்கள் உரிமைகளை பேசுங்கள் !
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் விடுதலை, ஆழ்கடலில் தேங்கிப்போன உடலுக்குக் கிடைத்த ஒரு பிடி காற்று. விடுதலை இறுகிப்போன கல்லறை மேல் விழுந்து நெகிழச் செய்யும் மெல்லிய முளரி இதழ். விடுதலை, அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் ஒட்டுமொத்த விடுவிப்பு. விடுதலை, வரையறைக்குள் அடக்க முடியாத உணர்வு. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று மீண்டதை நெஞ்சு நிமிர்த்திக் கொண்டாடுகிறோம். குடும்ப வரையறை, சமூக வரையறை எனக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கி, தனித்தன்மையை, விடுதலை உணர்வைத் தொலைத்த பெண்களின் உணர்வுகளைப் பற்றி எண்ணுகிறோமா? படிக்கும் படிப்பிலிருந்து திருமணநாள் […]
Read More
பழங்கால தமிழகத்தில் (வில் ஊணி) அனகோண்டா பாம்பா?
  • By Magazine
  • |
பாம்பு வைத்தியர் அதிர்ச்சி தகவல் …!!! பழங்கால தமிழகத்தில் வில் ஊணி என்ற அனகோண்டா போன்ற பிரம்மாண்டமான பாம்பு வாழ்ந்திருக்கலாம் என்று கூறுகிறார் பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம். கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு அருகே கண்ணங்கரை விளை பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம் (66) அவர்களை புதிய தென்றலுக்காக அவரது வீட்டில் சந்தித்தோம். பாரம்பரிய விஷ வைத்தியரான அவர் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக அவரது வீட்டில் இதுவரை மின்சார இணைப்பு இல்லை. செல்போன், […]
Read More
  • By Magazine
  • |
கமல. அருள் குமார் கத்தரிப்புகள் இன்றி மரம் கூட அழகாவதில்லை.. சித்தரிப்புகள் இன்றி மன்னர் கூட மாவீரன் ஆவதில்லை.. மட்டம் தட்டாமல் மண் கூட செம்மையாவதில்லை.. மட்டம் தட்டுபவர்கள் இன்றி மனம் கூட வன்மையாவதில்லை.. கத்தரிப்புகளும் சுத்திகரிப்புகளும் அவரவரால் இயலாது.. அடுத்தவர் தரும் அவமானங்களால் இயலும்..
Read More
  • By Magazine
  • |
செ.பராந்தகன் அரச மரத்தடி பிள்ளையாரிடம் ஆயிரக்கணக்கில் வேண்டுதல்கள்… மழை வேண்டி உருகி நின்றான் உழவன்.. வேண்டாம் என்கிறான் அருகிலேயே உப்பள உரிமையாளன்.. நோயாளி கூட்டம் அதிகம் வேண்டுமென மருத்துவன் ஏங்கி நிற்க நோயில்லா வாழ்வுக்கு பிரார்தித்தனர் அதிகம்பேர்.. வெட்டியானும் வேலை வேண்டும் என மன்றாடினான் ஒருபுறம், வியாபாரம் தழைக்க வியாபாரிகளோ மறுபுறம்.. இப்படிக் கேட்டுக் கேட்டே பெரிய காதோடு அமர்ந்துள்ளார் அரசமரத்தடி பிள்ளையார்..
Read More
மூட நம்பிக்கையால் மூடப்பட்டிருக்கிறீர்கள்
  • By Magazine
  • |
– ஓஷோ ஒரு சிறந்த சிந்தனையாளர் கிராமத்து எண்ணெய் வியாபாரியிடம் போனார். எண்ணெய் வியாபாரி, எண்ணெயை அளந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த எண்ணெய் செக்கில் ஒரு காளை கட்டியிருப்பதைப் பார்த்தார். அந்த காளை சுற்றி நடந்து கொண்டிருந்தது. அதன் கண்கள் மூடப்பட்டிருந்தன. அந்த காளை அந்த செக்கை ஆட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அதை வழிநடத்த யாரும் இல்லை. அவர் அந்த வியாபாரியிடம் கேட்டார், அந்த காளையை வழி நடத்த யாருமில்லை, ஆனாலும் அது வேலை செய்கிறது. ஏன் […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
காலத்தை செதுக்கும் உளிகள் என்ற நூலை எழுதியுள்ளார் பேனா நண்பர் திரு. ஆ.பிரம்ம நாயகம் அவர்கள், காலை எழுந்தவுடன் ஒரு சிறு தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அனைவருக்கும் கொடுத்துவிட வேண்டும், என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ் ஆர்வத்திலும், தினமும் எண்ணத்தில் தோன்றிய கருத்துக்கள் அனைத்தையும் ஒன்றாக்கி எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை ஆகியவற்றை கொள்கையாகக் கொண்டு, தினமும் காலையில் தோன்றும் எண்ணங்களைக் காலை வணக்கச் செய்திகளாக நட்புக்களுக்கும், சொந்தங்களுக்கும்,  உறவுகளுக்கும் அனுப்பி வந்திருக்கிறார் இந்நூலாசிரியர். தோல்விகளாலும் துயரங்களாலும், கஷ்டங்களாலும், […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) பாதிக்கப்பட்ட பெண் பார்வையற்றவர் என்பதால் அவரது சாட்சியை கண்ணுள்ள சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. செவிவழி சாட்சியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆட்டோ டிரைவர் தான் வண்டியை ஓட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை. மேலும், ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்ததை நேரில் பார்த்ததாக யாரும் சாட்சியம் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண் சொன்னதாக மட்டுமே கூறப்பட்டிருப்பது செவிவழி சாட்சியாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் ஆட்டோ ஓட்டுநருக்கு […]
Read More
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் கவிதைகள் என்னை நான் எப்படி எதிர்கொள்வது எதிர்நிற்கும் மலைத்தொடர்களின் முன் ஒரு சிறு செடிக்குச்சி கையிலிருக்கிறதென்று நிமிர்ந்து நிற்கின்றேன் கையிருப்பிலிருந்த சின்ன பனிக்கட்டியும் உருகியபின் ஈர மணலை கைப்பிடி மண்ணென இறுக்கிப் பிடித்திருக்கிறேன் என்னை நான் எப்படி எதிர்கொள்வது மலையாகவும் பனியுருக்கும் வெப்பமாகவும் இருக்கும் அந்த என்னை எதிர்கொள்ளும் நானின் களைத்த தோள்களை மகனின் பிஞ்சு விரல்கள் தொட்டு தடவி ஆசுவாசப்படுத்துகையில் கையிருக்கும் சிறுகுச்சி வளர்கிறது சிலம்பமாக எழுந்து சுழற்றுகிறேன் படைவீச்சை உச்சி அடித்து […]
Read More
தர்மம் செய் மனமே…
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் கவிதைகள் உரு கொள்கிறார்கள்! புரியவே மாட்டேன் என்கின்றது. குளித்து முடித்து ஈரமான நகத்தை வெட்டி எறிவதைப் போன்ற லாவகத்தில் செய்துவிடுகிறார்கள்! பயிற்சிப் பெற்ற தொழில் வல்லுனர்களாக இருக்கிறார்கள் அல்லவா! ஆச்சரியம் தருகின்றது. அன்பெனும் உறையுள் துருப்பிடித்திருக்கும் கூரியக் கத்தியை எவ்வளவுதான் இறுக்கிப் பிடிப்பது! தன்னை ஒரு ஈர்க்காம் பெட்டியென அடக்கி வைப்பதற்குள்ளிருக்கும் துயரம், ஒரு வெடித்தலின் சிதறல்களை அள்ளிப் பருகுவதைப் பரிசளிக்கின்றது. ஞாயம் தன்னைத் தின்று சீரணித்தவர்களின் வயிற்றுக்குள் உருண்டு கொண்டிருக்கின்றது தாழக் கிடப்பாரை […]
Read More