நூல் மதிப்புரை

நூல் மதிப்புரை

  • By Magazine
  • |

காலத்தை செதுக்கும் உளிகள் என்ற நூலை எழுதியுள்ளார் பேனா நண்பர் திரு. ஆ.பிரம்ம நாயகம் அவர்கள்,

காலை எழுந்தவுடன் ஒரு சிறு தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அனைவருக்கும் கொடுத்துவிட வேண்டும், என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ் ஆர்வத்திலும், தினமும் எண்ணத்தில் தோன்றிய கருத்துக்கள் அனைத்தையும் ஒன்றாக்கி எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை ஆகியவற்றை கொள்கையாகக் கொண்டு, தினமும் காலையில் தோன்றும் எண்ணங்களைக் காலை வணக்கச் செய்திகளாக நட்புக்களுக்கும், சொந்தங்களுக்கும்,  உறவுகளுக்கும் அனுப்பி வந்திருக்கிறார் இந்நூலாசிரியர்.

தோல்விகளாலும் துயரங்களாலும், கஷ்டங்களாலும், கவலைகளாலும் துன்பப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் துவண்டு கொண்டிருக்கும் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் ஆகியோரை தட்டி எழுப்பும் ஆயுதமாக தினமும் இவர் அனுப்பும் கருத்துக்கள் இருந்திருக்கின்றன. ஆகவே தமது கருத்துக்கள்பலருக்கும் பயன்பட வேண்டும் என்று இந்த நூலை எழுதியுள்ளார் திரு. ஆ.பிரம்ம நாயகம் அவர்கள்,

இந்நூலில்………

வாழ்க்கையில் பலர் இன்னும் துன்பப்பட்டுக் கொண்டிருப்பது திறமை இல்லாமல் அல்ல…

அவர்களின் நேர்மையான எண்ணங்களும், நியாயமான வாழ்க்கை முறைகளும் கூட காரணமாக இருக்கலாம்..! என்றும் அன்பு நமக்கு அனைத்தையும் அழகாக காட்டும் ,

நம்பிக்கை அனைத்தையும் நல்லதாகக் காட்டும்.

உழைப்பு அனைத்தையும் உயர்வாக காட்டும்.

வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும்..! என்றும் ……

வெற்றி என்பது கதவு மாதிரி நாம் அதைத் தட்டிப் பார்ப்போம்..!

திறக்கவில்லை என்றால் முட்டித் திறப்போம். முட்டியும் திறக்கவில்லை என்றால் அதை உடைத்துவிடுவோம்..!

என்றும் பல்வேறு விதமான ஊக்கமூட்டும் பல்வேறு கருத்துக்களை இந் நூலில் எழுதியுள்ளார்.

நூலின் விலை : ரூ.99

வெளியீடு:

ஞான லலிதா பதிப்பகம்

02/84-கீழ வடக்கு தெரு, கூனியூர்,

வடக்கு காரு குறிச்சி (அஞ்சல்),

சேரன்மகாதேவி (வழி),

திருநெல்வேலி மாவட்டம்-627 417,

 தொடர்பு எண்: 9650033514.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *