செ.பராந்தகன்
அரச மரத்தடி பிள்ளையாரிடம்
ஆயிரக்கணக்கில்
வேண்டுதல்கள்…
மழை வேண்டி
உருகி நின்றான் உழவன்..
வேண்டாம் என்கிறான் அருகிலேயே உப்பள உரிமையாளன்..
நோயாளி கூட்டம் அதிகம் வேண்டுமென மருத்துவன் ஏங்கி நிற்க
நோயில்லா வாழ்வுக்கு பிரார்தித்தனர் அதிகம்பேர்..
வெட்டியானும் வேலை வேண்டும் என மன்றாடினான்
ஒருபுறம்,
வியாபாரம் தழைக்க வியாபாரிகளோ மறுபுறம்..
இப்படிக் கேட்டுக்
கேட்டே பெரிய காதோடு அமர்ந்துள்ளார் அரசமரத்தடி பிள்ளையார்..
Leave a Reply