படிப்பதற்கு நேரம் ஓதுக்குங்கள் !

படிப்பதற்கு நேரம் ஓதுக்குங்கள் !

  • By Magazine
  • |

 – சஜிபிரபு மாறச்சன்

மனிதனுக்கும் அவனுடைய தலைவிதிக்கும் இடையே உண்மையாக உரையாடி அவனை நடுநிலைப்படுத்துவதே புத்தகம் தான்.

மனிதனாக பிறந்துள்ள ஒவ்வொருவரும் விலக்க முடியாத முடிவாக புத்தகங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

மனித இனத்தில் சிறப்புடைய மனிதனாக உயர, நாளைய தினம் நன்மைகளைக் கண்டுபிடிக்க உதவுவது புத்தகம் தான். மனிதனுக்கு நிறைய கனவுகள் உள்ளன. போற்றி வைத்து பாதுகாத்து வரும் அந்த கனவுகள், உண்மையில் நிஜமாக உருவானதால் தான் ஜெயித்தோம்.

கனவுகளை நிஜமாக்க முயற்சி செய்யும் போது ஏற்படும் தடைகள் நம்முடைய கற்பனை செய்யும் திறனை வலுக்குறையச் செய்து விடுகின்றன. நம்பிக்கையும் கற்பனையும் ஒரு சேர சிதைவதால் கனவும், வெற்றியும் கண்ணெதிரிலேயே கலைந்து போய் விடுகின்றன.

இந்த நிலையில் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும், விடாமுயற்சியே வெற்றியை ஈட்டிதரும் வைர வரிகள் நினைவுக்கு வந்து அவர்களுக்கே உற்சாகத்தை ஊட்டும்.

புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கற்பனை செய்யும் பழக்கத்தையும், தன்னம்பிக்கையுடன் தாங்கள் படிக்கும் புத்தகங்களின் மூலமே பெறுகிறார்கள். விடாதே பிடி! என்ற ஒரே வாசகம் கால்வின் கூலிஜ் என்பவரை அமெரிக்க அதிபர் அளவுக்கு உயர்த்தியது.

நல்ல புத்தகங்கள் நமது குணநலன்களை உருமாற்றி விடும் சக்தி படைத்தது. திருவள்ளுவரும், பாரதியாரும் எத்தனையோ மனிதர்களை செயல் வீரராக, பண்பில் சிறந்த மனிதராக உருவாக்கியுள்ளனர்.

எல்லா புத்தகங்களும்  ஆன்மாவுடன் நேரடியாக பேசும். ஒளி,ஒலி வடிவில் உள்ள புத்தகங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தளிக்கின்றன. ஆனால் எல்லா புத்தகங்களையும் நாம் படித்து தான் பார்க்க வேண்டும். இதனால் திரை காட்சிகள் போல் மறைந்து போகாது.

ஆன்மாவுடன் பேசுவதால் மனிதனுக்கும், அவனுடைய தலைவிதிக்கும் இணைப்பாக இருந்து அவரை உருமாற்றுகிறது.

உங்களின் ஒழுக்கத்தை காத்து உங்களை பண்பிலும், செயலிலும் உயர்வாக்கும் புத்தகம் எதுவென நினைக்கிறீர்களோ அந்த புத்தகத்தையும் உங்கள் கடமை தொடர்பான புத்தகங்களையும் தினமும் சில பக்கங்களாவது படித்து உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

புத்தகங்கள் கனவுகளை வளர்க்கும். கனவுகள் எண்ணங்களை உண்டாக்கும். எண்ணங்கள் செயல்களை உருவாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *