கத்தரிப்பு

  • By Magazine
  • |

கமல. அருள் குமார்

கத்தரிப்புகள் இன்றி

மரம் கூட அழகாவதில்லை..

சித்தரிப்புகள் இன்றி

மன்னர் கூட மாவீரன் ஆவதில்லை..

மட்டம் தட்டாமல் மண் கூட

செம்மையாவதில்லை..

மட்டம் தட்டுபவர்கள் இன்றி

மனம் கூட

வன்மையாவதில்லை..

கத்தரிப்புகளும்

சுத்திகரிப்புகளும்

அவரவரால் இயலாது..

அடுத்தவர் தரும்

அவமானங்களால் இயலும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *