மூட நம்பிக்கையால் மூடப்பட்டிருக்கிறீர்கள்

மூட நம்பிக்கையால் மூடப்பட்டிருக்கிறீர்கள்

  • By Magazine
  • |

– ஓஷோ

ஒரு சிறந்த சிந்தனையாளர் கிராமத்து எண்ணெய் வியாபாரியிடம் போனார். எண்ணெய் வியாபாரி, எண்ணெயை அளந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த எண்ணெய் செக்கில் ஒரு காளை கட்டியிருப்பதைப் பார்த்தார். அந்த காளை சுற்றி நடந்து கொண்டிருந்தது. அதன் கண்கள் மூடப்பட்டிருந்தன. அந்த காளை அந்த செக்கை ஆட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அதை வழிநடத்த யாரும் இல்லை. அவர் அந்த வியாபாரியிடம் கேட்டார், அந்த காளையை வழி நடத்த யாருமில்லை, ஆனாலும் அது வேலை செய்கிறது. ஏன் அப்படி?

அந்த எண்ணெய் வியாபாரி ஒரு அர்த்தமுள்ள விஷயத்தைச் சொன்னார். அவர் சொன்னார் நாங்கள் அதன் கண்களை மூடியிருக்கிறோமே பார்க்கவில்லையா? இந்த முறையில், அந்தக் காளைக்கு தன்னை யாராவது வழிநடத்துக்கிறார்களா இல்லையா என்பது தெரியாது. அதன் கண்களைத் திறந்து வைத்திருந்தால், அந்த காளைக்கு தன்னை யாரும் விரட்டவில்லை என்று தெரிந்து, அப்படியே நின்று விடும்.

அந்த மனிதர் கேட்டார். அது நின்றால், உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் அந்த காளைக்கு முதுகை காட்டிக் கொண்டுதான் உட்கார்ந்திருக்கிறீர்கள்.

அந்த எண்ணெய் வியாபாரி சொன்னார் நான் அதன் கழுத்தில் ஒரு மணியைக் கட்டியிருக்கிறேன். அது நடந்து கொண்டே இருக்கிற வரையில், அந்த மணி அடித்துக் கொண்டே இருக்கும். அந்த மணி அடிப்பது நின்று போனால், உடனே நான் அந்த காளையைத் தள்ளி விடுவேன். அதனால் அந்த காளைக்கு அதைத் தள்ளி விடுபவர் தூரத்தில் இருக்கிறார் என்பது தெரியவே தெரியாது.

சிந்தனையாளன் சொன்னார், ஆனால் அந்த காளை நின்றபடியே தன் தலையை ஆட்டிக் கொண்டிருந்தால் மணி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் சாத்தியம் இருக்கிறதல்லவா?

அந்த எண்ணம் வியாபாரி சொன்னார். உங்களை தயவு செய்து இப்போது போகச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒருவேளை அந்த காளை நீங்கள் சொல்வதை கேட்டு விட்டால் மிகவும் சங்கடமாகி விடும். தயவு செய்து போய்விடுங்கள். அடுத்த முறை வேறு எங்காவது எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள். அந்த பரிதாபமான காளை தன் வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மாதிரி பேச்சை அது கேட்டால் எல்லாம் கெட்டு விடும்.

அந்த எண்ணெய் வியாபாரிக்கு இந்த எண்ணம் அந்த காளையை எட்டக் கூடாது என்று நினைக்கிறார். உலகத்தில் எந்த தலைவரும் இந்த மாதிரி எண்ணங்கள் மக்களை எட்டக் கூடாது என்று நினைக்கிறார்கள். மக்கள் எண்ணெய் செக்கில் தொல்லைப்படுத்தப்பட்டு, கடினமாக வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். அவர்கள் கழுத்தில்  மணிகள் கட்டப்பட்டிருக்கிறது. மக்களும் கண்கள் மூடியபடி நடந்து கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் எதனால் மூடப்பட்டிருக்கின்றன? அவர்கள் கண்கள் நம்பிக்கைகளால் மூடப்பட்டிருக்கின்றன. நம்பிக்கைகள் என்னும் மறைப்பு அவர்கள் கண்களில் இருக்கிறது. அதுதான் மதநம்பிக்கைகள். மத நம்பிக்கையால் மக்கள் பிரிந்து கிடக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளை தவிர ஒரு மனிதருக்கும் இன்னொருவருக்கும் வேறுபாடு இருக்கிறதா? இரண்டு மனிதர்களுக்குள் வேறுபாடு இருக்கிறதா? ஏதாவது குறுக்குச் சுவர், அவர்களுக்கு நடுவே பள்ளம்? நேசிப்பதை நிறுத்த ஏதாவது சுவரிருக்கிறதா? நம்பிக்கைகளைத் தவிர வேறு எந்த சுவரும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *