சாலையில்  இறந்து கிடக்கும் பூனைக்கான இரங்கல் குறிப்பு
  • By Magazine
  • |
வண்டியில அடிபட்டு செத்துகிடக்குது பாருங்கப்பா, பாவம் அந்த பூனை. சாம்பல்கரிய நிறத்தில் உப்பிப்போய் கிடந்த அந்தப் பூனையின் உடலில் வண்டியின் தடயங்களைக் கண்டறிய இயலவில்லை. இதோட அப்பா பூனை எங்கப்பா இருக்கும்?… தேடிவரும்ல. நெஞ்சுக்கு முன்னிருந்தது அவனின் குரல்… அப்பாவை எவ்வளவு பெரிய உருவமாக எழுப்பிவிட்டான்! கடுகுக்குள்ளிருந்து எகிறும் குரலை குறுகத் தறித்தால் எங்கு கொண்டு பொத்தி வைப்பது. அது பெரிய பூனைதான் என்பதையும் தனித்தலையும் திறன் கொண்டது என்பதையும் நான் சொல்லவில்லை. அவ்வாறே அது கைவிடப்பட்டதாகவோ […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
கரிசனையோடு உச்சுகொட்டும் சிலரும் கண்டும் காணாமல் பலருமாயிருக்கும் ஒரு மத்தியான வெய்யிலின் உக்கிரத்தில் மாரெலும்பு தெந்நிய ரோட்டோரச் சிறுமி நெருப்பைக் கடப்பதுபோல ரோட்டைக் கடக்கிறாள் பட்டுப்போன மர இலைகளுக்கு நன்றியோடு நானெழுதிக்கொண்டிருக்கும் இந்த கவிதை என்னை அருவருப்பாய் பார்க்கிறது. – டாக்டர் கி. பாபு
Read More
பாரதி என்னும் சாரதி
  • By Magazine
  • |
சீவலப்பேரி என்றவுடனே நம் கண் முன் விரியும் காட்சி சீவலப்பேரி பாண்டி என்னும் தொடர் கட்டுரையும் திரைப்படமும்தான் … அந்த ஊர் இன்னொரு சிறந்த மனிதனை கவிஞனை ஒரு யுக புருசனை ஈன்றதும் கூட…. ஆம் மகாகவி பாரதி பிறந்த ஊர் சீவலப்பேரி புகுந்த ஊர் எட்டயாபுரம் படித்த ஊர் நெல்லை சரணடைந்த ஊர் பாண்டிச்சேரி மறைந்த ஊர் சென்னை….. ஆம் தாமிர பரணிக் கரையில் பிறந்து மெரினா கடற்கரையில் கரைந்தார்….. ஆம் மகாபாரதத்தில் யுத்தரதத்திற்கு கண்ணன் […]
Read More
உறவு!
  • By Magazine
  • |
உறவுகளே இல்லாத உலகமாக உருமாறும் நாள்களையே காண்கின்றோமே; பிறந்திட்ட பிள்ளையெலாம் வளர்ந்த பின்னர் பெற்றோரை தள்ளிடுவர் படுகுழிக்குள்; சிறந்திட்ட கல்விதனில் தேர்ந்த பின்னர் செல்கின்றார் எங்கெங்கோ செல்வம் சேர்க்க; உறவுசுற்றம் யாவினையும் நீக்கி வைத்தே ஒரு வட்டத்துள்ளெங்கோ சுழலுகின்றார் ! பறக்கின்ற வரையிங்கே பாதுகாக்கும் பறவைகளின் வாழ்வையின்று மாந்தர் கொண்டார்; சிறகிங்கே முளைத்தவுடன் பிரிந்து செல்லும் செல்வமக்கள் உறவறுக்கும் நிலையைக் காண்பார்; நறவென்று நினைத்திங்கே வளர்த்ததெல்லாம் நச்சாக ஆனதென வருந்துகின்றார்; விறகடுக்கில் வேகின்ற நேரத்தும்தம் வித்தான மக்களையே […]
Read More
ஒரே ஒரு இந்திரன்ஸ்…
  • By Magazine
  • |
நாற்பத்தைந்து வருடங்களாக சினிமாவில் தொடர்ந்துக் கொண்டிருக்கும் இந்திரன்ஸ் சினிமா வாழ்க்கையில் திரையில் மின்னி மறைந்துப் போகும் நகைக்சுவை கதாபாத்திரங்களிலிலிருந்து பெருமைப் பொருந்திய முழு நீள கதாபாத்திரங்களுக்கு தன்னை வளர்த்துக் கொண்டு உயர்ந்து நிற்கிறார். இவரின்  சினிமா வாழ்க்கை என்பவனவற்றை குறித்து 2024 ஜீலை 7-ல்  மலையாள மனோரமா ஞாயிறு இதழில் வெளி வந்த பேட்டி… மலையாளத்தில் பேட்டி கண்டவர் டி. பி  லால், தமிழில்: கிருஷ்ணகோபால்.. கேள்வி: இந்த சினிமாவில் இந்திரன்ஸ் திடுக்கிட வைக்கிறார் என்பனப் போன்று […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
வளவன் ஒரு வெற்றியாளன் என்ற நாவலை எழுதியுள்ளார் முனைவர். செந்துறை சி.தங்கராசு அவர்கள்.பொதுவாக மதங்களின் மீதும், ஜாதிகளின் மீதும் உள்ள வெறியில் பல நேரங்களில் சக மனிதர்கள் ஒதுக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் நடைபெறுகிறது. மட்டுமின்றி வேறு நாடுகளில் நிறவெறி, இனவெறி ஆகியவற்றின் பேரிலும் சகமனிதர்களை ஆறறிவு நிறைந்த மிருகங்கள் வேட்டையாடுவது நாம் அறிந்ததே. நம் நாட்டிலும் ஜாதி, மதம் ஆகியவற்றை மீறி திருமணம் செய்பவர்கள் கவுரவக்கொலை என்ற பெயரில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இன்றைய […]
Read More
காத்திருப்பு
  • By Magazine
  • |
இரண்டு கரைகளும் நிறைந்து வழியும் அளவிற்கு மண்ணியாற்றில் வருகிறது தண்ணீர். வழக்கத்தை விட சற்று அதிகம் தான். அந்த தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போல தெரிகிறது மூங்கில் தட்டிப்பாலம். ஆற்றை வேடிக்கைப் பார்த்தபடி அப்பாலத்தில் நின்று கொண்டிருக்கிறான் வீரா. வீரா ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன். தானிபுரம் தான் அவனது ஊர்.அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்து தினமும் பேருந்துக்கு ஆத்தியூர் வந்து விடுவான் காலை எட்டு மணிக்கு வரும் பேருந்தில் பள்ளிக்கூடம் செல்வதற்காக, ஏழரை மணிக்கெல்லாம் வந்து […]
Read More
ஊழ்வினை
  • By Magazine
  • |
நம்மிடையே பாயும் நதிக்கு பெயரில்லை அப்படியே ஏதோவொரு பெயர் வைத்து அழைத்தாலும் அதற்கு பொருந்தவில்லை இதுவரையான வாழ்வின் அத்தனை இன்ப துன்பங்களையும் யாதொரு புகார்களும் இன்றி ஏற்றுக் கொண்டு ஆத்தோடு அதன் போக்கில் போகும் குணம் நமது விட்ட குறை தொட்ட குறையாக விடுபட்ட ஏதோவொரு கணக்கை சமன் செய்ய வந்திருக்கிறாய் திணை திரிந்து தரிசாய்க் கிடந்த நிலத்தில் ஏரோட்டி பிரதி பலன் பாராது விதைக்கிறாய் அன்பெனும் பெரு வித்தை வளர்ந்து பல்கிப் பெருகி நிற்கும் அதன் […]
Read More
சித்தமருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA–வின் 279-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கபரியேல் ஆசான் தலைமையில் திரு.கே. செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன், திரு.கருணாநிதி ஆசான், மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 07.09.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.கபரியேல் ஆசான் வர்மக்கலையை சிறந்த முறையில் கற்று உலகெங்கும் பரவச்செய்ய வேண்டும் என்றும் கூறினார். அடுத்ததாக திரு. கருணாநிதி ஆசான் திறிபலா சூரணம் செய்முறையை கூறினார். அருத்ததாக மரு.ஷேக் முகமது பிரளி தைலம் […]
Read More
இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!
  • By Magazine
  • |
மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட வாழ்வை பற்றிய கவலை. வாழ்கிறாய் என்றால் பயமில்லையே. வாழ்வில் நிறைவேற்றம் இருக்குமானால் பயமே இருக்காது. வாழ்வை இனுபவித்திருந்தால், வாழ்வின் உச்சத்தில் என்னென்ன கிடைக்குமோ அதையெல்லாம் பெற்றுக் கொண்டிருந்தால்,  வாழ்வே ஒரு பரவசமாக இருந்திருக்குமானால். ஆழ்ந்த ஒரு கவிதையாக இருந்திருக்குமானால், உனக்குள் துடிக்கும் ஒரு கீதமாக இருந்திருக்குமானால், ஒரு கொண்டாட்டமாக […]
Read More