– இரா. அரிகரசுதன்,
வேறுபடுத்தும் காலவெட்டியைக்
கொண்டலைகின்றன
இன்றும் நேற்றும்
நேற்று உண்ண இருந்ததை
இன்று தேடி அலைவது
ஒரு வேட்டை
இன்று இருந்திருந்ததை
நேற்றே எடுத்துக்கொண்டவர்
செய்தது கொள்ளை
கொள்ளை என்பது திறன்
திறன் கல்வி என்பது
வடிவமைக்கப்பட்ட பாசம்
பாசச் சுருள்களைக் கைக்கொடுக்கும்
நிலையங்கள்
ஆசிரியர்களை வெளியேற்றும்
வீரத் தொழில்முறைவோரே..
எனவே ஆசிரியரே வெளியேறுங்கள்..
அல்லது
நாங்கள் செய்வோம்
திரேதாயுகம் முதல்
நாங்கள் பயிற்சி பெற்றிருக்கின்றோம்
நாங்கள் செய்வோம்..
அவ்வாறே…..
Leave a Reply