பாரதி என்னும் சாரதி

பாரதி என்னும் சாரதி

  • By Magazine
  • |

சீவலப்பேரி என்றவுடனே நம் கண் முன் விரியும் காட்சி சீவலப்பேரி பாண்டி என்னும் தொடர் கட்டுரையும் திரைப்படமும்தான் …

அந்த ஊர் இன்னொரு சிறந்த மனிதனை கவிஞனை ஒரு யுக புருசனை ஈன்றதும் கூட…. ஆம் மகாகவி பாரதி பிறந்த ஊர் சீவலப்பேரி

புகுந்த ஊர் எட்டயாபுரம் படித்த ஊர் நெல்லை சரணடைந்த ஊர் பாண்டிச்சேரி மறைந்த ஊர் சென்னை….. ஆம் தாமிர பரணிக் கரையில் பிறந்து மெரினா கடற்கரையில் கரைந்தார்….. ஆம்

மகாபாரதத்தில் யுத்தரதத்திற்கு கண்ணன் சாரதி பஞ்சாலி சபதமெனும் இலக்கியத்தேருக்கு சுப்ரமணிய பாரதியே சாரதி… .

அழகுடன் திகழ்கிறதென்றால் அதன் முதற்கதவைத் திறந்தவன் பாரதி என்பது உண்மை….. வெறும் புகழ்ச்சியில்லை….

‘தமிழ் பாஷை’ என்று தன் கட்டுரையில் எழுதியவன்

“ செப்பு மொழி பதினெட்டுடையாள் எனின் சிந்தனை ஒன்றுடையாள்”.. என்று கவிதையுள் செப்பினான்..

கட்டுரையை வியாசம் என்றவன்

நாவலை புதினம் ஆக்கினான்…

தனது ஒன்பதாவது வயதில் முதல் கவிதை எழுதினாலும் 13லிருந்து கவிதையாகவே வாழ்ந்தவன். 26 ஆண்டுக்குள் ஆயிரம் கவிதைகளுக்கு மேலும் தந்திருப்பான் …

பக்தி, அன்பு, தேசம், பாஞ்சாலி சபதம் எனும் காவியம், தனிப்பாடல்கள், மொழி பெயர்ப்பு, பொதுமைப்பாடல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், ஒரு புதினம் ( பாதியில் நிற்கிறது) என விதவிதமாய் படைத்தான்.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதோ.. என்ற கேள்விக்கணை ….

சொல்புதிது சுவைபுதிது

சோதிமிக்க

நவகவிதை…. என்ற

வருணனை

கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம் என்ற ருத்திரம்..

பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே… என்ற சமூகக்குரல்

கொலைவாளினை எடடா வெகு கொடியோர் செயல் அறவே … என்ற சங்கநாதம்…

ஓடி விளையாட ,கூடி விளையாட , நீதி உயர்ந்த மதி கல்வி, காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு,

மாலை முழுதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக் கொள்ளுப்பாப்பா….

என பாப்பாவுக்கும் ..

தேடிச்சோறு நிதம் தின்று -பல

சின்னஞ்சிறுகதைகள் பேசி – நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – சில

வேடிக்கை மனிதர்கள் போலே – நானும்

வீழ்வேன் என நினைத்தாயா?….

என்று அன்று கேட்ட கேள்வி மனிதன் மனிதனாக வாழ்ந்தால் தான் மனிதன் … என அறைகிறார்… பாரதி.

சோதிடம் தனை இகழச் சொல்கிறார்

ஒளிபடைத்த

கண்ணினாய் வாவா

உறுதி கொண்ட நெஞ்சினாய் வாவா

என்று இளைஞர்களை அழைக்கிறார்.

ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே… என்று புதுக்குரலில் பாடுகிறார் ….

சிங்களத்தீவினுக்கோர் பாலம், அமைப்போம் …..

சேதுவை மேடுறுத்தி

வீதிசமைப்போம்…. கங்கைநதிப்புறத்து கோதுமைப்பண்டம்  காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் …..வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் …

சிங்கமராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்… என பண்டமாற்றுமுறையை பண்பாட்டு கொடுத்து வாங்கலை பறை சாற்றுகிற பாரதி… ஒரு தீர்க்கதரிசி, ஆம் ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று. ஆடுவோமே… என சுதந்திரம் கிட்டுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்னரே பாடியவர்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்… என்ற பாரதிக்கு தமிழ், ஆங்கிலம் வங்காளம் சமக்கிருதம் மலையாளம்இந்தி என ஆறு மொழிகள் தெரியும்…

பாரதி பிறந்தநாள் டிசம்பர் 11

நினைவு நாள் செப்டம்பர் 11 இந்த

இருமாதத்தையும் இணைக்கும் அக்டோபரில் அவர் பற்றி சிந்திப்போம் அவர் வழி வாழ்வோம்.

– குமரி எழிலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *