SAVKIA–வின் 279-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கபரியேல் ஆசான் தலைமையில் திரு.கே. செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன், திரு.கருணாநிதி ஆசான், மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 07.09.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் திரு.கபரியேல் ஆசான் வர்மக்கலையை சிறந்த முறையில் கற்று உலகெங்கும் பரவச்செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்ததாக திரு. கருணாநிதி ஆசான் திறிபலா சூரணம் செய்முறையை கூறினார்.
அருத்ததாக மரு.ஷேக் முகமது பிரளி தைலம் செய்முறையை மிகவும் தெளிவாக கூறினார்.
திரு. வினோத்குமார் ஆசான் காய்ச்சலுக்கு எளியமுறை கசாயம் செய்முறையை கூறினார்.
அடுத்ததாக திரு. புருஷோத்தமன் ஆசான் ஆண்மைக்குறைவுக்கான எளிய மருந்து செய்முறையையும் நீரிழிவு நோய்க்கான மருந்தினையும், பெண்மை குறைவுக்கு காடை லேகியம் செய்முறையையும் கூறினார்.
அடுத்ததாக திரு. கபரியேல் ஆசான் திடீர் பதட்டம் மாற எளிய மருந்துக்குறிப்பினை கூறினார்.
அடுத்ததாக திருமதி. என்.கே.கலா அவர்கள் சொறி, சிரங்கு, படை, கரப்பான் இவற்றுக்கான எண்ணெய் செய்முறையை பற்றி மிகவும் தெளிவாக கூறினார்.
அடுத்ததாக திரு. அருட்செல்வன் ஆசான் பித்தம், படபடப்பு, தளர்ச்சை போன்ற உயர் இரத்த அழுத்தத்துக்கான எளிய மருந்துமுறையை கூறினார்.
அடுத்ததாக திரு. இராஜன் ஆசான் சிறுநீரகக்கல்லுக்கான குளிகை செய்முறையை கூறினார்.
அடுத்ததாக திரு. டார்வின் புரூஸ்லி ஆசான் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளை தெளிவாக கூறினார்.
அடுத்ததாக மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் சரம் குறித்தும், நாடிகள் குறித்தும் மிகத் தெளிவாக பேசினார். கூட்டத்தில் இறுதியில் திரு.கே. செல்வநாதன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply