அரசு அலுவலகங்களில் தவிக்கும் மக்களுக்காக சமூக சேவகர் ஆனேன்
  • By Magazine
  • |
சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது பேட்டி அரசு அலுவலகங்களில் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதிக்க வழி தெரியாமல் தவிக்கும் மக்களின் மேல் பரிதாபம் கொண்டு சமூக சேவகர் ஆனேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது. புதிய தென்றலுக்காக அவரை குளச்சலில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது தாங்கள் சமூக சேவகர் ஆனது எப்படி? நான் சுமார் 30 ஆண்டுகளாக சமூக சேவை […]
Read More
பிழைப்பு
  • By Magazine
  • |
போதை தலைக்கு ஏறியது… கிரிக்கெட் மட்டை, கம்பு, இரும்புக்கம்பி என்று கையில் எது கிடைத்ததோ எடுத்துக் கொண்டார்கள். பத்துபேர் நான்கு இரு சக்கர வாகனங்களில் கிளம்பினார்கள். சமத்துவ கழகம் கட்சியின் வாசலில் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை நிறுத்திய இளைஞர்கள் கட்டையையும் கம்பியையும் எடுத்துக் கொண்டு வெறித்தனமாய் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். யேய்… யாருப்பா நீங்க… என்ன பண்றீங்க… வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வெள்ளை வேட்டி பெரியவர்கள் வெலவெலத்து போனார்கள். போலீஸ்க்கு போன் போடுங்க… சுந்தரத்துக்கு போன் […]
Read More
மனதின் சக்தி
  • By Magazine
  • |
– சஜிபிரபு மாறச்சன் மனோசக்தி இருந்தால் ஒரு மனிதனால் எதையும் சாதிக்க முடியும். எப்போதும் தன்னைத்தானே குறைத்து மதிப்பீடு செய்து கொள்ளுதல் கூடாது. இவ்வுலகில் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல. சக மனிதரையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய மகிழ்ச்சி உங்கள் கைகளில் இருக்கிறது. அதை உங்களைத் தவிர யாரும் தட்டிப் பறித்திட முடியாது. உங்களுக்கு நண்பனும் நீங்கள் தான். உங்களுக்கு எதிரியும் நீங்கள் தான். உங்களுக்கு எஜமான் நீங்கள் தான். மனிதனாக பிறந்த அனைவருக்கும் இறைவன் […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் வக்கீல்களுக்கு சில நிபந்தனைகள் கணவன் – மனைவியிடையே நடந்த விவாகரத்து வழக்கு இது. மனைவி  எதற்கெடுத்தாலும் கணவனிடம் தகராறு செய்யும் நிலையை கொண்டவராக இருந்தாள். இறுதியில் உச்சக்கட்டமாக கணவனிடம் உனது பெற்றோர்களிடமிருந்து பாகப்பிரிவினை செய்து சொத்து வாங்கவில்லை என்றால் நான் தூக்குப்போட்டு சாவேன் என மிரட்டல் விட்டுக் கொண்டிருந்தார். இதனால் கணவரும் அவர் குடும்ப உறுப்பினர்களும் கலக்கத்தில் இருந்தனர். மனைவி தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லவே தாக்குப்பிடிக்காத கணவன் அவள் […]
Read More
  • By Magazine
  • |
கமல. அருள் குமார் காற்றுக் கூட சிலநேரம் மூங்கிலைத் தேடும் இசையாகத் தன் குரலை கேட்க… நாற்றுக் கூட சிலநேரம் தென்றலைத் தேடும் தன் பச்சை பட்டாடையை ஸ்பரிசித்துப் பார்க்க.. அலைகள் கூட சிலநேரம் படகினைத் தேடும் தன் முகடுகளின் உதடுகளில் முத்தமிட்டுச் செல்ல.. முகத்தை மலரும் மலரென்றோ அகத்தை ஒளிரும் நிலவென்றோ வர்ணனை கேட்க சில வயது அகங்களும் காத்திருக்கும்… பேராசைகளும் பெரும் ஓசைகளும் அல்ல.. சின்னச் சின்ன ஆசைகளும் சன்னமான ஒசைகளுமே இதயப் பூட்டினை […]
Read More
கர்மான்வாலி
  • By Magazine
  • |
ஹிந்தி மூலம்: அம்ருதா ப்ரீதம் தமிழில்: நாணற்காடன் பெரிய மிக அழகான தந்தூர் ரொட்டி இருந்தது. ஆனால், வெஜிடபிள் கிரேவியால் தொட்டுக் கொண்ட கவளம் வாய்க்குப் பிடிக்கவில்லை. “இவ்வளவு காரம்…” நானும் என் குழந்தைகளும் ஆ… ஊ… என்று அலறிக் கொணடிருந்தோம். “இங்கே ஆட்களின் நடமாட்டம் அதிகம். இந்தப் பகுதியில் ஒரே ஒரு மதுபானக் கடைதான் இருக்கிறது. ஆட்கள் நன்றாகக் குடித்துவிட்டால் ?நல்ல காரமான கிரேவி தான் கேட்பார்கள்.” தந்தூரி கடைக்காரர் சொல்லிக் கொண்டிருந்தார். “இங்கே… சாராயம்…” […]
Read More
உழவனை வாழ்த்து !
  • By Magazine
  • |
– கே. பி. பத்மநாபன் கோழி கூவும் நேரத்தில்      குடிசை வீட்டில் எழுந்திடுவான்; மேழி தன்னை எடுத்திடுவான்;      மேட்டு வரப்பில் நடந்திடுவான்; ஆழி சூழ்ந்த உலகினிலே      அனைத்து மாந்தர் பசியாற நாழி உணவைப் பெறுதற்காய்      நன்றாய் நிலத்தை உழுதிடுவான்; தாழி தன்னில் கொண்டு வந்த      தண்ணீர் மோரும் கலந்திட்ட கூழினையே குடித்திடுவான்;       கொதிக்கும் வெயிலில் உழைத்திடுவான்; கீழிருக்கும் ஆழ்மண்ணைக்      கீழ் மேலாக ஆக்கிடுவான்; பூழிச்சேற்றில் காலூன்றிப்      […]
Read More
நெஞ்சு நிறை வாழ்த்து மடல்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி சித்த மருத்துவச் சிந்தனைக் குறிப்புடன் வர்ம அறிவியல் வண்டமிழ் வளமொடு சிறுகதை கட்டுரை சிறப்பொடு திகழும் குமரியின் தென்றல் குன்றாது வாழியவே! அரசியல் சூழல் அணுகிட விடாமல் நேர்மை நெறிநின்று வாய்மை வழி நடந்து சட்டங்கள் வழிகாட்டிச் சரித்திரம் படைத்திடும் தென்குமரித் தென்றல் திசையெங்கும் வாழியவே! சுற்றுச்சூழலொடு அறிவியல் கருத்துக்கள் வரலாறு புதினம் வளமான கவிதையொடு திங்களில் வீசிடும் தங்கத்தமி¢ழ்த் தென்றல் பொங்கிடும் புத்துணர்வாய் பொன்றாது வாழியவே! அனைவர்க்கும் பயன்தரும் அருங்கலைப்பெட்டகமாய் கலைக்களஞ்சியம் இதுவென […]
Read More
அதிக ஆயுளின் அதிசயம்
  • By Magazine
  • |
C. முருகன் 2014-ம் ஆண்டு அமெரிக்கா ஒரு ஆய்வு நடத்தியது. உலகில் அதிக வயது வரை வாழ்ந்தவர்களின் ஆய்வு. அமெரிக்கர்களை விட ஜப்பானில் தான் அதிக வயது வரை வாழ்ந்து சாதனை படைத்தவர்கள் அதிகம் என்று ஆய்வில் தெரிந்தது. 100 வயது 110 வயது தாண்டியும் நல்ல ஆரோக்கியம், மன உறுதியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நீண்ட வாழ்க்கை பல நேரங்களில் கடினமாக இருந்துள்ள போதிலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் போது அவற்றால் மனக்குழப்பம் […]
Read More
வெள்ளை எலி சகுனம்
  • By Magazine
  • |
– ஓஷோ ஜப்பானில் ஒரு கதை சொல்லுவார்கள். அதை இங்கு தருகிறோம். ஜப்பானில் வெள்ளை எலியை நல்ல சகுனம் என்பார்கள். திடீரென ஒரு வெள்ளை எலியை யாராவது பார்த்து விட்டால் உடனே வெகு மகிழ்ச்சி தான். என்னவோ நல்லது நடக்கப் போகிறது. ஒருநாள் ஒரு தந்தையும் மகனும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். திடீரென தந்தையின் முதுகுக்குப் பின்னால் ஒரு வெள்ளை எலியை மகன் பார்த்தான். சட்டெனத் திரும்பி விடாதீர்கள். உங்களுக்குப் பின்னால் ஒரு விருந்தாளி இருக்கிறார். நல்ல சகுனம். […]
Read More