அதிக ஆயுளின் அதிசயம்

அதிக ஆயுளின் அதிசயம்

  • By Magazine
  • |

C. முருகன்

2014-ம் ஆண்டு அமெரிக்கா ஒரு ஆய்வு நடத்தியது. உலகில் அதிக வயது வரை வாழ்ந்தவர்களின் ஆய்வு. அமெரிக்கர்களை விட ஜப்பானில் தான் அதிக வயது வரை வாழ்ந்து சாதனை படைத்தவர்கள் அதிகம் என்று ஆய்வில் தெரிந்தது. 100 வயது 110 வயது தாண்டியும் நல்ல ஆரோக்கியம், மன உறுதியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய நீண்ட வாழ்க்கை பல நேரங்களில் கடினமாக இருந்துள்ள போதிலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் போது அவற்றால் மனக்குழப்பம் அடையாமல் எப்படி நேர்மனப்போக்குடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்துள்ளனர்.

2014-ம் ஆண்டில் 111 வயது அடைந்து உலகில் அப்போது வாழ்ந்துக் கொண்டிருந்தவர்களில் வயதில் மூத்தவர் என்ற கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவர் அலெக்ஸாண்டர் இமிச். தனக்கு நல்ல மரபணுக்கள் வாய்த்திருந்த போதிலும் தன்னுடைய நீண்ட ஆயுளுக்கு வேறு பிற காரணிகள் இருந்ததையும் புரிந்து வைத்திருந்தார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் நீண்ட ஆயுள் எவ்வளவு முக்கியமோ, அதை விட அதிகமாக நீங்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியம் என்று குறிப்பிட்டர்.

ஆயுள் நீடிப்பதற்கு எதிரான மனப்போக்குகள்

நம் உடல் எவ்வளவு விரைவாக மூப்படைகிறது என்பதன் மீது தாக்கம் விளைவிக்கும் ஆற்றல் நம் மனதிற்கு இருக்கிறது. இளமையாக வைத்திருக்க வேண்டுமென்றால் நாம் நம் உடலை நம் மனதை இளமையாக வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தோடு பெரும்பாலான மருத்துவர்களும் விஞ்ஞான மேதைகளும் உடன்படுகின்றனர். இது ஒரு முக்கியமான அம்சத்தோடு வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது மனம் உடைந்து விடாமல் இருக்கவும் நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக யெஷிபா பல்கலைக்கழகம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. நீண்ட ஆயுளுடன் இருப்பவர்களிடம் இரண்டு தனிச்சிறப்பான மனநிலைகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒன்று நேர்மறை மனப்போக்கு, மற்றொன்று உணர்ச்சிகள் குறித்த பிரக்ஞை. அதாவது சவால்களை ஒரு நேர்மறை மனப்போக்குடன் எதிர்கொண்டு தங்களுடைய உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் நீண்டகாலம் வாழ்கின்றனர்.

வாழ்க்கை பாதையில் ஒரு பின்னடைவை எதிர்கொள்ளும் போது உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக இருக்கும் மனப்போக்கு ஒருவரை இளமையாக வைத்திருக்கும் நடத்தையை சீராக்கி பதற்றத்தையும், மனஅழுத்தத்தையும் குறைப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது. எதற்கும் அவசரப்படாத நிதானமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்ற கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும் மக்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட ஆயுளுக்கு ஒரு வாழ்த்துப்பா

நீண்ட ஆயுளுக்கான கின்னஸ் சாதனை படைத்துள்ள ஜப்பான் ஓகிமி கிராமத்தில் தன்னுடைய நூறாவது பிறந்தநாளைக் கொண்டாட தொடங்கிய ஒரு மூதாட்டி ஜப்பானிய மொழியால் பாடிய பாட்டு மிகுந்த சந்தோசத்தோடு பாடும் போது அந்த கிராம மக்களுக்கு மற்றும் ஏனைய குடும்பத்தாரும் கூடியிருந்தனர்.

பாட்டின் தமிழாக்கம்

ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் வேண்டுமா? குறைவாக சாப்பிடுங்கள் நன்றாக ரசித்து ருசித்து… எழுந்தவுடன் செல்லுங்கள் காலாற நடக்க… அன்றாடம் ஓட்டுகிறோம் வாழ்க்கையை நாங்கள் அலட்டிக் கொள்ளாமல், வாழ்க்கை பயணத்தைத் தொடர்கிறோம் குதூகலத்துடனே… நண்பர்களுடன் ஆடிப்பாடுகிறோம், பிணக்கின்றி வசந்தமோ, குளிரோ, வெயிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கிறோம் ஆனந்தமே! கவலைப்படுவதில்லை நாங்கள் எங்கள் விரலின் மூப்பைப்பற்றி நீங்களும் உங்கள் விரல்களை அசைத்தும் கொண்டிருந்தால் அலுங்காமல், குலுங்காமல் ஒடிவரும் உங்களை நோக்கி அந்த நூறு வயது! எவ்வளவு அருமையான பாடல் சிந்தித்து பாருங்கள்.

அதிக வயது வரை வாழ்ந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்

முதலில் நம் பாரத நாட்டைப் பார்ப்போம். உலகின் அதிக வயதான கேரள மூதாட்டி மலப்புறம் வளன்சேரி அருகே உள்ள பூகுட்டரி பகுதியை சேர்ந்தவர். இவரது வயது 124 உலகிலே அதிக வயது உடைய பெண்மணி. உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். குஞ்சீரம்மா என்ற பெயர். ஐந்து தலைமுறை கண்ட இவர் உடல் நலக்குறைவால் 05.05.2024 அன்று காலமானார். இவருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் என எந்த நோயும் இல்லை. இவர் 17 வயதில் அலி என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு 11 குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் இருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்.

ஜீன் கால்மென்ட் (122) வயது 1875 பிப்ரவரியில் பிரான்சிலுள்ள ஆர்ல் என்ற இடத்தில் பிறந்த ஜீன் கால்மென்ட் 1997 ஆகஸ்ட் 4 வரை வாழ்ந்தார். 122 வயது வரை வாழ்ந்த அவர் மனித வரலாற்றில் அன்று அதிக காலம் வாழ்ந்தவர் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. நான் மெத்து செலாவுடன் போட்டி போட்டேன் என்று நகைச்சுவையாக கூறினார்.

தன்னுடைய நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கைக்குப் பிறகு அவர் எதையும் ஒதுக்கி தள்ளியது கிடையாது. 110 வயது வரை யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தார். தவறுதலாக தன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால், ஒரு காப்பகத்திற்கு குடிபெயர்ந்தார். நீண்ட ஆயுள் அவருடைய நகைச்சுவை காரணமாகவும், நல்ல மனிதநேயமும் அடுத்தவருக்கு உதவி செய்யும் நோக்கமும் கொண்டிருந்தார். 120-வது பிறந்த நாளை கொண்டாடும் என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. நான் மேசாமானதாக உணர்கிறேன். மற்றபடி எல்லாமே மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மரியா காப்போவில்லா (116 வயது)

நான் என் வாழ்நாளில் இறைச்சியை உண்டதே கிடையாது. எக்வடோர் நாட்டில் 1889-ல் பிறந்த மரியா காப்போவில்லா 2006-ல் கின்னஸ் சாதனை புத்தகம் உலகிலேயே மிக அதிக வயது வாழ்ந்த நபர் என்றும் கௌரவித்தது. அவர் இறந்த போது அவருடைய வயது 116 ஆண்டுகள் 377 நாட்கள் ஆகும். அவர் மூன்று குழந்தைகளையும் 12 பேரக் குழந்தைகளையும் 20 கொள்ளு பேரக்குழந்தைகளையும் விட்டு சென்றுள்ளார். அவரது 107-வது வயதில் மலரும் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். நீண்ட ஆயுளின் இரகசியம் என்ன என்று கேட்ட போது நான் ஒருமுறை கூட அசைவம் சாப்பிட்டது இல்லை. ஒருவேளை அது நீண்ட ஆயுளுக்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் பதிலளித்தார்.

வால்ட்டர் புரூனிங் (115 வயது)

வால்ட்டர் புரூனிங் அமெரிக்காவிலுள்ள மின் சோட்டாவில் 1896-ல் பிறந்தார். இயற்கையான காரணங்களால் 2011-ல் இறந்தார். ஓய்வு பெற்ற அவர் ஒரு காப்பகத்திற்கு இடம் பெயர்ந்தார்.

அவர் தன் இறுதி நாள்களில் ஏகப்பட்ட பேட்டிகளை அளித்திருந்தார். தன்னுடைய நீண்ட ஆயுளுக்கு காரணம் என்று கேட்ட போது தன்னுடைய 112 -வது வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவர் நீங்கள் உங்களுடைய உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருந்தால், நீண்ட காலம் இங்கு உலாவி கொண்டிருப்பீர்கள் என்று தெரிவித்தார். எப்போதும் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

நீண்ட ஆயுளுக்கு வால்ட்டரின் பிற ரகசியங்கள்

அவர் எப்போதும் பிறருக்கு உதவினார். அதோடு தான் இறப்பது குறித்து பயப்படாதிருந்தார். 2010-ல் அவர் அளித்த பேட்டியில் நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். இறப்பது குறித்து சிலர் அஞ்சுகிறார்கள். இறப்பது குறித்து ஒருபோதும் அஞ்சாதீர்கள். இறப்பதற்காகத் தான் நாம் பிறந்துள்ளோம் என்று கூறினார்.

அவர் 2011-ல் இறப்பதற்கு முன்ஹப ஒரு பாதிரியாரிடம் இவ்வாறு கூறியிருந்தார். நான் கடவுளுடன் ஒர் உடன்படிக்கை செய்கொண்டோம் என்றால் ஒரு கட்டத்திற்கு மேல் மேம்பாடு அடைய முடியாவிட்டால், என்னை தன்னிடம் அழைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அது.

அலெக்ஸாண்டர் இமிச் (111 வயது)

1903-ம் ஆண்டில் போலந்தில் பிறந்த அலெக்ஸாண்டர் இமிச். பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். அவர் ஒரு மருந்தியலார் 2014-ல் உலகிலேயே நீண்ட ஆயுளுடன் இருந்த ஆண் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு ஒரு சில மாதங்களிலேயே இறந்து போனார். உலகிலேயே மிகவும் வயதானவர் என்று அவர் கௌரவிக்கப்பட்ட போது இது நோபல் பரிசு பெறுவதற்கு சமமானது இல்லை தான். ஆனால் நான் இவ்வளவு காலம் உயிரோடு இருப்பேன் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை என்று கூறினார்.

நீண்ட ஆயுளுக்கான இரகசியத்தை அறிந்தவர்கள் 110 வயதைக் கடந்தவர்கள் மட்டுமல்ல கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறாமல் நீண்ட ஆயுளுடன் இருக்கும் பலர் நம்முடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தையும், ஆற்றலையும் கொண்டு வர உத்வேகம் அளிக்கும் பலவற்றைத் தெரிவிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக வாழ்க்கையில் ஓய்வு பெறாமல் தங்களுடைய வாழ்நாளில் தொடர்ந்து தூக்கிப்பிடித்து கொண்டிருக்கின்ற கலைஞர்களிடம் இந்த ஆற்றல் இருக்கிறது.

எல்லாவிதமான கலைவடிவங்களும் தன்மைப் பெற்று இருக்கின்ற ஆற்றல், அவற்றால் நம்முடைய வாழ்க்கைக்கு மகிழ்ச்சியையும் நோக்கத்தையும் கொண்டு வர முடியும். ஆனால் இவை அனைத்திற்கும் ஒரே ஒரு தீர்வு தான் இருக்கிறது… தொடர்ந்து கற்று கொண்டு இருப்பத தான். அது உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி கற்றுக் கொள்ளுங்கள். இது ஒன்றை குறித்து மட்டும் தான் மனத்தால் சலிப்படைய முடியாது. அதிலிருந்து அதனால் தப்பிக்க முடியாது அந்த ஒரு விஷயத்தால் மனதை பயமுறுத்த முடியாது. பின் வருத்தம் கொள்ள வைக்க முடியாது.

நிகழ்கணத்தில் சஞ்சரித்துக் கொண்டிருங்கள். நீங்கள் சஞ்சரித்து கொண்டிருக்கும் கணத்தோடு உங்களால் உங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தால், உங்களால் உங்களுடைய கண்களையும் சுற்றியிருப்பவை குறித்த ஆர்வம் கொண்டிருக்க முடிந்தால், உங்களால் தானாகவே நிகழ்கணத்தில்  வைத்திருக்க முடியும். எப்போதுமே நாம் எடுத்த காரியத்தை முடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இது அபத்தமாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையை நாம் ஒவ்வொரு நாளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *