சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது பேட்டி
அரசு அலுவலகங்களில் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதிக்க வழி தெரியாமல் தவிக்கும் மக்களின் மேல் பரிதாபம் கொண்டு சமூக சேவகர் ஆனேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது.
புதிய தென்றலுக்காக அவரை குளச்சலில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது
தாங்கள் சமூக சேவகர் ஆனது எப்படி?
நான் சுமார் 30 ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகிறேன். பலர் தங்களுக்கு தேவையான அரசின் நலத்திட்டங்கள் உதவிகள் மற்றும் தேவையான விஷயங்கள் ஆகியவற்றை பெறுவதற்கு வழி தெரியாமல் அரசு அலுவலகங்களில் அலைந்து கொண்டிருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன்.
எனவே இத்தகைய ஏழை எளிய படிப்பறிவற்ற, ஆதரவற்ற மக்களுக்கு வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் ஏற்பட்டது எனவே எனது இளம் வயது முதலே சமூக சேவையாக அரசு அலுவலகங்களில் அலைந்து கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களை அரசு அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான விதவை ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஓய்வூதியம், போன்றவற்றை பெறுவதற்கு பலருக்கு உதவியாக இருந்து பெற்றுக் கொடுத்துள்ளேன்.
மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்டங்களை பற்றி தெரியாமல் இருக்கும் தொழிலாளர்களை அரசின் நல வாரியங்களில் சேர்த்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து உதவி மரணத்தொகை போன்றவற்றை அவர்கள் பெறுவதற்கு மிகவும் உதவியாக செயல்பட்டுள்ளேன். இவை மட்டுமல்லாமல் உடல் நலம் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நலிந்தவர்களை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்து இருக்கிறேன். பசியால் வாடும் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்ற மனிதர்களுக்கு என்னால் இயன்ற அளவு உணவுகளை வாங்கி கொடுத்து வருகிறேன்.
தாங்கள் மக்களுக்காக அரசிடம் என்ன விதமான கோரிக்கைகள் விடுத்துள்ளீர்கள்
மக்கள் விரைவாக பயணிப்பதற்காக பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பஸ் இயக்குவதற்கு காரணமாக செயல்பட்டு இருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தின் மண்டைக்காடு பகுதியில் இருந்து தொடங்கும் ஏவிஎம் கால்வாயை தூர்வாருவதற்கு கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும் இதுபோன்று மக்கள் நலனுக்காக அவ்வப்போது பல்வேறு விதமான மனுக்களை அரசு அலுவலகங்களில் அளித்து வருகிறேன்.
சமூக சேவைகளில் உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது எது?
ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுக்கும் போதும் அரசு அலுவலகங்களில் சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத மக்களுக்கு வழிகாட்டும் போதும் நோயாளிகள் மற்றும் பலருக்கு உதவிகள் செய்யும் போதும் எனது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனவே நான் யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்குவது கிடையாது எனது சொந்த உழைப்பில் தான் வாழ்ந்து வருகிறேன் எவரிடமும் எந்த பொருளையும் வாங்குவதும் கிடையாது தண்ணீர் கூட நான் வீட்டில் இருந்தே கொண்டு சென்று விடுவேன்.
இப்போது சமூக சேவை செய்து வரும் சேவையாளர்கள் பற்றி தங்களது கருத்து என்ன?
இப்போதும் பலர் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளனர் அது மிகவும் மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயமாகவும் நம்மால் இயன்றவரை ஏதாவது அவர்களுக்கு செய்ய வேண்டும். அப்படி ஒருவருக்கொருவர் சேவை செய்து வழிகாட்டி வந்தால் மனித சமூகம் விரைவில் முன்னேறும். சமூக சேவையில் தங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள் பாராட்டுக்கள் அங்கீகாரங்கள் என்னென்ன உள்ளன. எனது சமூக சேவையை பாராட்டி பல அமைப்புகள் விருது வழங்கும் என்று வந்தன ஆனால் நான் அவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
ஆனாலும் எனது சேவையை பாராட்டி கன்னியாகுமரிமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மற்றும் பத்மநாபபுரம் கோட்டாட்சியர், ஆகியோர் சமூக சேவகர் என்று அடையாள அட்டை வழங்கி கௌரவித்து உள்ளனர். மேலும் குழு கண்காணிப்பாளர் என்று நியமித்து குளச்சல் நகராட்சி கௌரவித்துள்ளது. ஆனாலும் இது எல்லாவற்றையும் விட மக்கள் சேவை என்ற பெயரில் சமூக சேவை செய்வது மட்டுமே எனது லட்சியமாகும் இவ்வாறு அவர் தெரிவித்தார் .
சுயநலத்தை தேடி ஓடும் உலகத்துக்கு இடையே இத்தகைய ஒரு சில மனித நேயமிக்க மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். புதிய தென்றல் சார்பில் அவரை வாழ்த்தி விடை பெற்றோம்.
G. ஜெயகர்ணன்,
இணை ஆசிரியர்
தகவல் & உதவிசமூக சேவகர் குளச்சல் முகமது சபீர்
Leave a Reply