கமல. அருள் குமார்
காற்றுக் கூட சிலநேரம்
மூங்கிலைத் தேடும்
இசையாகத் தன் குரலை கேட்க…
நாற்றுக் கூட சிலநேரம்
தென்றலைத் தேடும் தன்
பச்சை பட்டாடையை
ஸ்பரிசித்துப் பார்க்க..
அலைகள் கூட சிலநேரம்
படகினைத் தேடும் தன்
முகடுகளின் உதடுகளில்
முத்தமிட்டுச் செல்ல..
முகத்தை மலரும் மலரென்றோ
அகத்தை ஒளிரும் நிலவென்றோ
வர்ணனை கேட்க சில வயது
அகங்களும் காத்திருக்கும்…
பேராசைகளும் பெரும்
ஓசைகளும் அல்ல..
சின்னச் சின்ன ஆசைகளும்
சன்னமான ஒசைகளுமே
இதயப் பூட்டினை
எளிதாய் திறக்கும்…
வாழ்த்திடும் வார்த்தைகளில்
வான்மழை நெஞ்சுக்குள்
பாய்ந்திடும்..
வாழ்த்தில்லா வாழ்வினில்
வாழ்க்கையும் வனப்பின்றி ஓய்ந்திடும்…
Leave a Reply