இரத்தத்தை சுத்திகரிக்கும் “மஞ்சிட்டி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் மஞ்சிட்டி ஒரு கொடி வகையை சார்ந்தது. இது சுமார் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் இலை பசுமை மாறா நிறத்தில் நீண்ட காம்புடன் செடியின் தண்டுடன் இணைந்திருக்கும் ஒரு கணுவில் 4 இலைகள் காணப்படும். தண்டு நான்கு பக்கங்களைக் கொண்டு மெல்லியதாக இருக்கும். காய் பச்சை நிறத்தில் சிறிதாகவும், பழுக்கும்போது சிகப்பு மற்றும் கறுப்பு நிறத்தை அடையும். மஞ்சிட்டி வேர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர் ஒரு மீட்டர் நீளம் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் அரசு கல்வி நிலையங்கள் மீதான நம்பிக்கைகளை மக்களிடமிருந்து அப்புறப்படுத்துதல் என்பது காலந்தோறும் நடந்து கொண்டிருக்கின்ற ஓர் தொடர் செயல்பாடு. கல்வியை தனியார் மயமாக்கியப் பிற்பாடு, அரசு கல்வி பால் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களை தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி நகர்வதற்கான ஆபத்தை விளைவிப்பது நல்லது அல்ல. அரசு கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் மிக முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால் அது பற்றிய அக்கறை இல்லாது வேறு என்னவெல்லாமோ நெருக்கடிகளை […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 284-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.போஸ் ஆசான் தலைமையில், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.02.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.இராஜன் ஆசான், இருமல், கபம், சுவாசகாசம், கண்மயக்கம், கொழுத்து இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, திரு.ஜெரின் ஆசான் நரம்புநோய்களுக்கு சூரணம் செய்முறை, PCOD நோய் குறித்து விளக்கிப் பேசியதோடு, அதற்கான மருந்துகளையும் […]
Read More
குமரிமாவட்ட பாரம்பரிய  மருத்துவம்’- ஒரு பார்வை
  • By Magazine
  • |
இந்தியாவின் தென் எல்லையாக விளங்கும் கன்னியாகுமரி பல கலைகள் சிறப்புற்று காணப்படும் மாவட்டமாகும். இங்கு மன்னர்கள் ஆட்சி செலுத்தி உள்ளனர். நீர்வளம், நிலவளம் மட்டுமின்றி தொன்று தொட்டே கல்வி வளமும், கலை வளமும் மிக்க பகுதியாகவே விளங்கிய இம்மாவட்டம், மருத்துவகலையில் ஓர் ஒப்பற்ற இடத்தைப் பெற்றுள்ளது. தொன்றுதொட்டே குருமுறை கல்வியாக மருத்துவம், களரி போன்ற கலைகள் கற்பிக்கப்பட்டன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 7- ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களால் இங்கு […]
Read More
உயிர்கள் தட்டான்களாக பறந்து திரியும் மய்யழிக்கரை
  • By Magazine
  • |
பயணக்கட்டுரை – கிருஷ்ணகோபால் கேரளாவில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறோம் ஆனால் இது வரைக்கும்  வடகேரளத்திற்கு சென்றதில்லையே என நண்பர்கள் மலபார்  சுற்றுலாவுக்கு திட்டமிட்டப் போது  நான்  மகிழ்ந்தேன். முப்பது வருடத்திற்குப் பிறகு கோழிக்கோடு மண்ணில் கால்பதிக்கப் போகிறோம் என்ற மிதப்பு என்னை மகிழச் செய்தது. பத்தாம் வகுப்பு  ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து  விடுமுறைகாலத்தில் விளையாடும் போது எனக்கும் தம்பிக்கும்   ஓயாமல் சண்டை நடப்பதை சமாளிக்க முடியாத அம்மா  என் உறவினர் ஒருவரோடு  கொத்தன், கையாள் வேலைக்கு  […]
Read More
தை பிறந்தால் வழிபிறக்கும்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் “மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி, ஆனை கட்டி போரடித்த மருத நிலம் எங்க நிலம்…” என்றப் பாடலை தமிழ்மண்ணில் எங்கு வில்லிசை நடந்தாலும் நம்மால் கேட்காமல் இருக்க முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயத்தில் தலை நிமிர்ந்து நின்றது நம்நாடு. உணவில் நாவுக்கு சுவை பார்த்து உண்டு மகிழ்ந்தவன் தமிழன் என்பது உலகறிந்த உண்மை. ஏனைய நாட்டாரெல்லாம் தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களைப் பச்சையாகவும், சுட்டும், வெறுமையாய் அவித்தும் உண்டு […]
Read More
புத்தாண்டு  வாழ்த்துக்கள்!
  • By Magazine
  • |
உலகெலாம் ஏத்தும் இயற்கை அன்னையின் இதயத்தில் வாழும் அனைத்துயிரிகளும் இனிமையுற்று, இன்புற்று வாழ புதியதென்றலின் புத்தாண்டு வாழ்த்துக்கள்…                 ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஏழைப்பணக்காரன் என்றாகியிருக்கின்றது இவ்வுலகம்.  உள்ளார் இல்லாரை உருக்குலைக்கும் இன்னல் நிலை இந்நிலத்தில் இல்லாமல் ஆகட்டும்.                 சாதி-மதம், இனம்-நிறம், நாடு-தேசம் எனப் பகுத்துப் பேசும் பகுத்தறிவில்லா பண்புகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் எனும் மனிதநேயம் மலரட்டும்…                 அறியாமைச் சுழிக்குள்ளே அறிவுக்கொவ்வா கதை சொல்லி மக்களை மடையராக்கும் மகத்தான பேதைமை ஒழியட்டும்…                 சொல்லும் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ வாழ்க்கை ஒரு பிரச்சனையே அல்ல. வாழ வேண்டிய ஓர் அற்புதமேயன்றி தீர்க்க வேண்டிய பிரச்சனையல்ல. ஆனால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. எதையும் ஒத்தி வைத்துக் கொண்டே போவதால் நாளைக்குச் செய்து விடலாம் என்று ஒத்தி வைத்து போவதால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. இன்றைக்குச் செய்ய வேண்டியதை, இன்றைக்கு செய்ய முடிவதை நாளைக்குச் செய்ய முடியாது. இன்று அருமையான நிகழ்வாக இருந்திருக்கக் கூடியது. வாழவேண்டிய அற்புதமாக இருந்திருக்கக் கூடியது. நாளைக்கு மிகச் சிரமமானதும் […]
Read More
பாரதி வசந்தன் அஞ்சலி குறிப்புகள்
  • By Magazine
  • |
– பொன்.குமார் பிரிய சகோதரனுக்கு  ஒரு பிரியா விடை சாவதெல்லாம் மனிதர்களே- நான் சாகாத பெருங்கவிஞன் நான் எழுதாமல் போனால் இன்றே இறந்திடுவேன் இது உண்மை                 – கவிஞர் பாரதி வசந்தன் வணக்கம் சார். ஒரு நிமிசம் பேசலாங்களா என்றுதான் அலைபேசியில் பேச்சைத் தொடங்குவார் எழுத்தாளர் பாரதி வசந்தன். குறைந்தது அரைமணி நேரம் பேசுவார். அதிகபட்சம் ஒரு மணி நேரம் பேசுவார். நான் அய்யா என்றுதான் அழைப்பேன். இடையிடையே சகோதரா என்பார். எழுத்தாளர் பாரதி வசந்தனை […]
Read More
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
  • By Magazine
  • |
பூ.வ. தமிழ்க்கனல் அக்டோபர் 13-ஆம் தேதி தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார். சிறைத்தண்டனை                 சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற ஊரில் 1895- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் பெயர் வள்ளியம்மை. விருதுநகரில் காமராசர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுப் பல முறை சிறைத்தண்டனை பெற்றார்.                 […]
Read More