SAVKIA-வின் 284-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.போஸ் ஆசான் தலைமையில், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.02.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில், திரு.இராஜன் ஆசான், இருமல், கபம், சுவாசகாசம், கண்மயக்கம், கொழுத்து இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக, திரு.ஜெரின் ஆசான் நரம்புநோய்களுக்கு சூரணம் செய்முறை, PCOD நோய் குறித்து விளக்கிப் பேசியதோடு, அதற்கான மருந்துகளையும் கூறினார்.
திரு.வடிவேல் ஆன்மீகம், யோகம் குறித்து பேசினார்.
திரு.கே.செல்வநாதன் ஆசான், உடல் எரிச்சல், தாகம், மயக்கம், பித்த தலைவலி, அத்திசுரம், வாய்வு, விசசுரம், ஈளை, இருமல், வயிற்று உப்பிசம், நெஞ்செரிப்பு, இரைப்பு இவற்றுக்கு மகா ஏலாதி சூரணம் செய்முறையை கூறினார்.
அடுத்ததாக, திரு.கமலக்கண்ணன் ஆசான் பக்கவாத சூரணம் செய்முறையை கூறினார். மேலும் பக்கவாத நோய்க்கு மேல்பூச்சு தைலம் செய்முறையையும் கூறினார்.
திரு.அருள்செல்வன் அவர்கள் உடல்சூடு, மேகம், வெள்ளை, வெட்டை இவற்றுக்கு குடிநீர் செய்முறையைக் கூறினார்.
திரு.ஜெபமணி ஆசான், கிராணி, அதிசாரம், அழல், கடுப்பு இவற்றை குணப்படுத்தும் காட்டுக்கருணை குழம்பு செய்முறையை கூறினார்.
அடுத்ததாக, மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆன்மா மற்றும் யோகம் குறித்து விளக்கி பேசியதோடு வர்மகாயம், உடல்வலி தீர ஒற்றடம் செய்யும் மருந்து மற்றும் வெள்ளை, வெட்டை இவற்றுக்கு எளிய மருந்து செய்முறை மற்றும் மூலிகைகள் மற்றும் அதன் மருத்துவ பயன்கள் குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கிப் பேசியதோடு குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு எளிய மருந்து முறையையும் தெளிவாகக் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply