அமைதி காப்போம்!
  • By Magazine
  • |
– கே.பி. பத்மநாபன் மனிதர் இடையே கருத்தெல்லாம்                 மாறுபடும் தான், தவறன்று; தனி என் கருத்தே உயர்வென்று                 தலையுள் வெறியைக் கொள்ளாமல் கனிவாய் மாற்றார் மொழிகேட்டுக்                 கலந்தே அன்பால் உறவாடி இனிய முடிவை எட்டிட்டால்                 இம்மண் அமைதி பூண்டிடுமே! கணவன் மனைவி இருவருமே                 கலந்தே பேசி முடிவெடுத்தால் மணமே நிறைந்த இல்லறத்தை                 மகிழ்வாய் வாழ்ந்து விடலாமே; இணக்கமாக இருநாடும்                 இணைந்தே பேச முயன்றிட்டால் பிணங்கள் வீழும் போரின்றிப் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
வழக்கறிஞர்.பி.விஜயகுமார் போலீசாருக்கு நமது மொபைல் ஃபோனை சோதனையிடும் அதிகாரம் கிடையாது. (அரசியலமைப்புச்சட்டம் ஆர்ட்டிக்கிள்-21 Right to Life and personal Liberty). பொதுவாக ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் தலைக்கவசம் அணியாமலும் வாகனம் ஓட்டுபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது அபராதம் விதிக்க முற்படுவர். சில வாகன ஓட்டிகளோ வீட்டில் உரிமம் இருக்கிறது, அதனால் அபராதம் கட்ட முடியாது என அடம் பிடிப்பர். இதனால் போலீசாருக்கும் வாகன ஓட்டிக்கும் வாய்தகராறு முற்றி இறுதியில் போலீசார் அவர் வண்டியை […]
Read More
ஜேன் குக் ரைட் – வேதிசிகிச்சையின் அன்னை
  • By Magazine
  • |
– பேரா. மோகனா, பழனி நண்பர்களே, எல்லா உயிர்களையும் நோய் தாக்குவது இயல்பு.நோய் என்பது வைரஸ் அல்லது  பாக்டீரியா அல்லது   வளர்சிதை  மாற்றங்களால் ஏற்படலாம்.  இவைகளில் வைரஸ் நோய்கள் அனைத்தும் தொற்றும் நோய்களே. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களில் சில தொற்றுபவை;  சில தொற்றாநோய்கள். தொற்றாநோய்களில்  மூன்று பெரிய நோய்கள்தான் முன்னணியில் நிற்கின்றன  1. சர்க்கரை நோய், 2. இதய நோய் 3. புற்றுநோய்.. புற்றுநோய் எப்படி புற்றுநோய் என்பது நோய் அல்ல. அது ஒரு வளர்சிதை மாற்றத்தில் […]
Read More
தமிழர் மரபில் நிலமும் – நீரும்
  • By Magazine
  • |
– ஓர் சூழலியல் பார்வை – கோவை சதாசிவம் மனிதர்கள் தமது முன் கால வரலாற்றை அறிந்து கொள்வதில் தீராத தாகம் கொண்டவர்கள்! பத்து தலைமுறைக்கு முன்பு எம் பாட்டன் எப்படி இருந்திருப்பார்..? எப்படி வாழ்ந்திருப்பார்..? இத்தகைய கேள்விகளில் இருந்தே தொடங்குகின்றன… எப்போது பூமி தோன்றியது..? எப்போது மனிதன் தோன்றினான் ..?  எனும் புதிய கேள்விகள். பூமி, இறைவனின் படைப்பு என்று பண்டைய சமயங்கள் அனைத்தும் நம்பின. பூமி தட்டையானது என்னும் கருத்தாக்கத்தில் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு […]
Read More
பூதப்பாண்டியில் பிறந்த புரட்சிக்குயில்
  • By Magazine
  • |
– குமரி எழிலன் ஜீவானந்தம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட, இளமையில் தேவாரம், திருவாசகம், பஜனைப்பாடல்களை தேர்வீதிகளில் பாடிப் பரவசம் அடைந்த சொரிமுத்து, குமரி மண்ணில் பூதப்பாண்டியில் பிறந்தவர் …. 9 வயதில் கோயில் சுண்டலை, எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாக கொடுக்கச் சொல்லி, பூசாரிப் பாட்டா கேட்காததால்… பூசாரியிடமிருந்து பறித்துப் போய் சமபங்கு வைத்தவர். உடன்பயின்ற மண்ணடி மாணிக்கத்தின் தோளில் கை போட்டு தேர்வீதியில் சுற்றி கோயிலுக்குள் புக முயற்சியில் அடித்துக் காயப்படுத்தபட்டவர்.. காந்தியின் மீதும் கதர்மீதுமுள்ள பற்றால் […]
Read More
சித்தமருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 278-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு. இராஜன் ஆசான், திரு.கே. செல்வநாதன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 03.08.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. அருள்தாஸ் ஆசான் துருசு சுண்ணம் செய்முறையை செய்து காண்பித்தார். அடுத்ததாக, திரு. இராஜன் ஆசான் மேகநோய்கள், கை கால் எரிவு, மேகவறட்சை, எலும்புருக்கி, நீர் சுருக்கு, உடல் வறட்சி இவற்றை குணப்படுத்தும் […]
Read More
புற்றுநோயைத் தடுக்கும் நிலக்கடலை…
  • By Magazine
  • |
– நமது மூலிகை மருத்துவர் “உள்ளுர் பண்டங்கள்” விலை போகாது என்பது போல, பாதாம் பருப்பிற்கு சற்றும் குறைவில்லாத அனைத்து சத்துப்பொருள்களும் நிலக்கடலையில் இருந்தும், அதிக விலை கொடுத்து வாங்கும் பாதாம் பருப்பையே மக்கள் கொண்டாடுகின்றனர். நிலக்கடலையின் பூர்வீகம் தென் அமெரிக்கா. சைனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியா, அமெரிக்காவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத்திலும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை விதை மூலம் பயிரிடலாம். இது 120 […]
Read More
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி குவளையில் மதுவென மரணத்தை நிரப்பியிருக்கிறது காலம். பருகுகிறான் நீரோ சோடாவோ தேவைக்கு சேர்க்கப்படாத அதன் கசப்பு தொண்டையை இறுக்குகிறது விழிகளை மூடி பின் திறந்து உச்சுக்கொட்டியபடி துரோகத்தைச் சுவைக்கும் அவன் கண்களால் ஒருமுறை யாவரையும் அளக்கிறான் உலர்ந்த சொற்களோடு நான் இந்தக் கவிதையுடன் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.
Read More
கல்லீரல் கொழுப்புத் தேக்கம்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் தற்காலத்தில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. அதே போன்று கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படக் கூடிய  என்னும் (Fatty Liver) நோயும் பலருக்கு காணப்படுகிறது. இந்த கொழுப்பு கல்லீரல் நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது நமது ஆரோக்கியத்துக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆரம்பக்கட்டத்தில் இந்த நோயை குணப்படுத்துவதும் எளிது. ஆனால் இது தீவிரமடையும் போது தான் நாம் மருத்துவரை சந்திக்கிறோம். சில சமயங்களில் […]
Read More
உருண்டு திரள வேண்டாம்! போர் பதட்டம்
  • By admin
  • |
நவீன அறிவியல் வளர்ச்சியும் அணு ஆயுதப் பெருக்கமும் இன்று உலகம் முழுவதுமுள்ள  மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் இரண்டு உலகப்போர்களும் பலிவாங்கிய உயிர்கள் எண்ணிலடங்காதவை. இங்கிலாந்து, சீனா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் இழந்தன. இன்று உலகம் முழுவதும் சங்கிலித்தொடர் போல் தொடர்புறும் நாடுகளின் போர்ப்பதற்றம் மீண்டும் ஓர் மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுத்து விடுமோ என அறிஞர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போர்களால் உலகம் […]
Read More