சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA -வின் 288-வது கருத்தாய்வுக் கூட்டமானது மருத்துவர்.கமலகண்ணன் அவர்கள் தலைமையில் மூலச்சல் மரு.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆகியோர் முன்னிலையில் 07.06.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில் மருத்துவர்.கமலகண்ணன் அவர்கள் சோரியாசிஸ் குணமாவதற்கான தைலம் மற்றும் மேல்பூச்சு முறைகளைத் தெளிவாகக் கூறினார். மேலும் வாயுப்பிரச்சனைகளுக்கு சூரணம் செய்முறையையும் கூறினார்.

அடுத்ததாக திரு.கே.செல்வநாதன் ஆசான் அஸ்வகெந்தி சூரணம் செய்முறையை கூறினார்.

அடுத்ததாக மரு.ஷேக் முகமது ஏங்கலிழைப்பு, இரைப்பு இவற்றுக்கு தங்க ரத்தினாதி குளிகை செய்முறையையும், மாரடைப்புக்கு சூரணம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.

அடுத்ததாக திரு.ஜெபமணி ஆசான் சூலை, வாதம் இவற்றுக்கு மூங்கில் கசாயம் செய்முறையை கூறினார்.

திரு.ஜெகஜீவன் ஆசான் காலரா குணமாவதற்கு எளிய மருந்தினையும், முள் தைத்தால் வெளிவர எளிய மருந்தினையும், அடிபட்ட காயம் தீர எளிய மருந்தினையும் கூறினார்.

திரு.ஜாண் ஆசான் வெள்ளை, வெட்டை, கணை அடிபட்ட வீக்கம், உயர் இரத்த அழுத்தம், எலும்புத்தேய்வு குணமாக மருந்தினையும் கூறினார்.

மூலச்சல். மருத்துவர்.த.இராஜேந்திரன் மருந்துகளின் குணம் குறித்துப் பேசியதோடு வயிற்றுவலி குணமாக எளிய மருந்தினையும், சூலை, வாதம், நரம்புநோய்கள் குணமாக மருந்தினையும், ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு இவற்றுக்கு மருந்தினையும் தெளிவாகக் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *