நிதர்சனம்
- By Magazine
- |
-
ஜெகன் தங்கையா. B
பறந்து திரியும்
வண்ணத்துப்பூச்சிகளின்
இறகுகளில் பளபளக்கும்
வண்ணத்துகள்கள்
பிடிக்கும் விரல்களில்
ஒட்டிக் கொள்ளும்
வசீகரம் குறைந்து போகும்…
உதிர்ந்த மயிர் என்பதால்
மனிதகுலமே ஒதுக்கித்
தள்ளினாலும்
மயிலிறகின் வசீகரம்
வாழ்நாள் முடிந்த பின்பும்
வாழ்ந்து கொண்டிருக்கும்..!
Leave a Reply