உறவு!
  • By Magazine
  • |
உறவுகளே இல்லாத உலகமாக உருமாறும் நாள்களையே காண்கின்றோமே; பிறந்திட்ட பிள்ளையெலாம் வளர்ந்த பின்னர் பெற்றோரை தள்ளிடுவர் படுகுழிக்குள்; சிறந்திட்ட கல்விதனில் தேர்ந்த பின்னர் செல்கின்றார் எங்கெங்கோ செல்வம் சேர்க்க; உறவுசுற்றம் யாவினையும் நீக்கி வைத்தே ஒரு வட்டத்துள்ளெங்கோ சுழலுகின்றார் ! பறக்கின்ற வரையிங்கே பாதுகாக்கும் பறவைகளின் வாழ்வையின்று மாந்தர் கொண்டார்; சிறகிங்கே முளைத்தவுடன் பிரிந்து செல்லும் செல்வமக்கள் உறவறுக்கும் நிலையைக் காண்பார்; நறவென்று நினைத்திங்கே வளர்த்ததெல்லாம் நச்சாக ஆனதென வருந்துகின்றார்; விறகடுக்கில் வேகின்ற நேரத்தும்தம் வித்தான மக்களையே […]
Read More
ஒரே ஒரு இந்திரன்ஸ்…
  • By Magazine
  • |
நாற்பத்தைந்து வருடங்களாக சினிமாவில் தொடர்ந்துக் கொண்டிருக்கும் இந்திரன்ஸ் சினிமா வாழ்க்கையில் திரையில் மின்னி மறைந்துப் போகும் நகைக்சுவை கதாபாத்திரங்களிலிலிருந்து பெருமைப் பொருந்திய முழு நீள கதாபாத்திரங்களுக்கு தன்னை வளர்த்துக் கொண்டு உயர்ந்து நிற்கிறார். இவரின்  சினிமா வாழ்க்கை என்பவனவற்றை குறித்து 2024 ஜீலை 7-ல்  மலையாள மனோரமா ஞாயிறு இதழில் வெளி வந்த பேட்டி… மலையாளத்தில் பேட்டி கண்டவர் டி. பி  லால், தமிழில்: கிருஷ்ணகோபால்.. கேள்வி: இந்த சினிமாவில் இந்திரன்ஸ் திடுக்கிட வைக்கிறார் என்பனப் போன்று […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
வளவன் ஒரு வெற்றியாளன் என்ற நாவலை எழுதியுள்ளார் முனைவர். செந்துறை சி.தங்கராசு அவர்கள்.பொதுவாக மதங்களின் மீதும், ஜாதிகளின் மீதும் உள்ள வெறியில் பல நேரங்களில் சக மனிதர்கள் ஒதுக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் நடைபெறுகிறது. மட்டுமின்றி வேறு நாடுகளில் நிறவெறி, இனவெறி ஆகியவற்றின் பேரிலும் சகமனிதர்களை ஆறறிவு நிறைந்த மிருகங்கள் வேட்டையாடுவது நாம் அறிந்ததே. நம் நாட்டிலும் ஜாதி, மதம் ஆகியவற்றை மீறி திருமணம் செய்பவர்கள் கவுரவக்கொலை என்ற பெயரில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இன்றைய […]
Read More
காத்திருப்பு
  • By Magazine
  • |
இரண்டு கரைகளும் நிறைந்து வழியும் அளவிற்கு மண்ணியாற்றில் வருகிறது தண்ணீர். வழக்கத்தை விட சற்று அதிகம் தான். அந்த தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போல தெரிகிறது மூங்கில் தட்டிப்பாலம். ஆற்றை வேடிக்கைப் பார்த்தபடி அப்பாலத்தில் நின்று கொண்டிருக்கிறான் வீரா. வீரா ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன். தானிபுரம் தான் அவனது ஊர்.அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்து தினமும் பேருந்துக்கு ஆத்தியூர் வந்து விடுவான் காலை எட்டு மணிக்கு வரும் பேருந்தில் பள்ளிக்கூடம் செல்வதற்காக, ஏழரை மணிக்கெல்லாம் வந்து […]
Read More
ஊழ்வினை
  • By Magazine
  • |
நம்மிடையே பாயும் நதிக்கு பெயரில்லை அப்படியே ஏதோவொரு பெயர் வைத்து அழைத்தாலும் அதற்கு பொருந்தவில்லை இதுவரையான வாழ்வின் அத்தனை இன்ப துன்பங்களையும் யாதொரு புகார்களும் இன்றி ஏற்றுக் கொண்டு ஆத்தோடு அதன் போக்கில் போகும் குணம் நமது விட்ட குறை தொட்ட குறையாக விடுபட்ட ஏதோவொரு கணக்கை சமன் செய்ய வந்திருக்கிறாய் திணை திரிந்து தரிசாய்க் கிடந்த நிலத்தில் ஏரோட்டி பிரதி பலன் பாராது விதைக்கிறாய் அன்பெனும் பெரு வித்தை வளர்ந்து பல்கிப் பெருகி நிற்கும் அதன் […]
Read More
சித்தமருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA–வின் 279-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கபரியேல் ஆசான் தலைமையில் திரு.கே. செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன், திரு.கருணாநிதி ஆசான், மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 07.09.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.கபரியேல் ஆசான் வர்மக்கலையை சிறந்த முறையில் கற்று உலகெங்கும் பரவச்செய்ய வேண்டும் என்றும் கூறினார். அடுத்ததாக திரு. கருணாநிதி ஆசான் திறிபலா சூரணம் செய்முறையை கூறினார். அருத்ததாக மரு.ஷேக் முகமது பிரளி தைலம் […]
Read More
இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!
  • By Magazine
  • |
மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட வாழ்வை பற்றிய கவலை. வாழ்கிறாய் என்றால் பயமில்லையே. வாழ்வில் நிறைவேற்றம் இருக்குமானால் பயமே இருக்காது. வாழ்வை இனுபவித்திருந்தால், வாழ்வின் உச்சத்தில் என்னென்ன கிடைக்குமோ அதையெல்லாம் பெற்றுக் கொண்டிருந்தால்,  வாழ்வே ஒரு பரவசமாக இருந்திருக்குமானால். ஆழ்ந்த ஒரு கவிதையாக இருந்திருக்குமானால், உனக்குள் துடிக்கும் ஒரு கீதமாக இருந்திருக்குமானால், ஒரு கொண்டாட்டமாக […]
Read More
ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்“பிரம்மி”
  • By Magazine
  • |
பிரம்மி செடி, தடித்த பசுமையான சிறு இலைகளுடன், தண்டில் சிறு கணுக்களும், கணுக்களில் வேர்களையும் கொண்டு தரையில் படர்ந்து வளரும் செடி ஆகும். இதன் பூ வெண்மை நிறத்தில், ஊதாநிறம் கலந்து காணப்படும். இதன் பூர்வீகம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என்று சொல்லப்படுகிறது. இது தண்ணீர் உள்ள வரப்புகள், ஆற்று ஓரங்கள், குளத்து ஓரங்கள், வயல்வெளிகளில் தானாகவே வளர்ந்து காணப்படும். வீடுகளில் தொட்டிகளில் வைத்தும் வளர்க்கலாம். பிரம்மி சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே காக்காய் வலிப்பு, தூக்கமின்மை, […]
Read More
அன்பென்னும் வீடு..
  • By Magazine
  • |
அன்பென்னும் செங்கல்லை ஊன்றி அன்பென்னும் சுவரைக்கட்டி அன்பென்னும் மேற்கூரையை வேய்ந்து அன்பென்னும் வண்ணமும் பூசி எளிதாகவே கட்டி முடிக்கப்படுகிறது அன்பென்னும் வீடு விரிசல் எதுவும் விழாமல் பார்த்துக்கொள்வது தான் பெரும் போராட்டமாக இருக்கிறது. – கூடல் தாரிக்
Read More
தோற்றமயக்கம்
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மயினியோ, ஆத்தடிமாடங்கோயில்ல? ஒரு அதிசயத்தைக் கேட்டேளா? சொல்லுவுளே, சொன்னாத்தானே தெரியும். அதயேங் கேக்கயோ ஆத்தடிமாடன் சொள்ளமாடனுக்கு கண்ணு  மூடிமூடித் தொறக்காம….கேக்கயில                                                   புல்லரிச்சுற்று..படபடப்புடன் சொல்லி முடிக்குமுன் தெவுங்கிவிட்டாள் தெக்கூட்டு விசியா . எவ சொன்னாவுளே நீ நேருல பாத்தியா? நம்பமறுத்த தொனியில் கேட்டாள் கவுசல்யா. நேருல பாத்தியா தேருல பாத்தியான்னு விண்ணாணம்லாம் பேசாதிங்யொ இப்பதான் கோரசேரி மயினி சொன்னா. பாத்துக்கிடுங்கோ. அவளுக்கும் வேலையில்ல உனக்கும் சோலியில்ல. உடுத்த சீலைய நம்பமாட்டேளா? நீங்யொ இருந்திருந்து வொங்கள்ட்டவந்து […]
Read More