தமிழ்நாடு பட்ஜெட் 2025 – 2026 சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்கள் துறையின் திட்டங்கள்

  • By Magazine
  • |

எம். ஞானசேகர்

சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை சமர்ப்பித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தரத்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் அறிவிப்புகள்

1. 2025/26-ம் நிதி ஆண்டில் வங்கிகள் மூலம் தமிழ்நாட்டின் 10 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.25 லட்சம் கோடி கடனாக வழங்கப்படும்.

2. சிட்கோ மூலம் திருமுடிவாக்கம், நாயனூர், நாகம்பள்ளி, சூரியர், கருத்தப் புளியம்பட்டி, தனிச்சியம், நடுவூர், நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் 308 ஏ பரப்பில், ரூ.355 கோடி மதிப்பில் தொழில் பேட்டைகள் கட்டப்படும். இதனால் 17500 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். மேலும் தேனி மாவட்டத்தில் நறுமணப்பொருட்கள், நாமக்கலில் முட்டை உணவு சார் பொருட்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில் மின்கடத்தி  உபகரணங்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் கைவினைப் பொருட்கள், சென்னையில் பொறியியல் பொருட்கள் உற்பத்தி, உள்ளிட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் குழுமங்களின் தரம், உற்பத்தி திறனை மேம்படுத்தி சந்தைப்படுத்திடவும், ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கவும், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுவசதி மையங்கள் உருவாக்கப்படும்.

                அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீட்டில் 35% மூலதன மானியம், 6 சதவீத வட்டி மானியம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.259 கோடி ரூபாய் ஆதி திராவிடர்/ பழங்குடியின தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 2025-26 நிதியாண்டுக்கு ரூ.170 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

                கலைஞர் கைவினைத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.138 கோடி கடனுதவி, ரூ.28 கோடி மானியம் பெறத்தக்க 4297 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு வரும் 2025-26-ம் ஆண்டில் சுமார் 19000 கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில் ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

                தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித் திட்டத்திற்கு 2025-26 ஆண்டுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்வெளி தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்திட விண்வெளி தொழில்நுட்ப ரீதியாக ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1918 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

                தமிழ்நாட்டில் மத்திய அரசும் தொழில் முனைவோர்களுக்கு எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி நிறுவனம், தேசிய சிறு தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேசன், சிட்பி வங்கி, காதி கிராமத் தொழில் வாரியம், நபார்டு வங்கி, அரசு உடையாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவுகள் மூலமும், பல நிதி நிறுவனங்கள் மூலமும் பல பெயர்களில் கடனுதவி வழங்கி வருகின்றனர். முத்ரா கடன் திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகம் பேர் தமிழ்நாட்டில் கடன் பெற்றுத் தொழில் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *