சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA-வின் 289-வது கருத்தாய்வுக் கூட்டமானது, மரு.கமலகண்ணன் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 05.07.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் புற்றுநோய்க்கு எளிய மருந்து செய்முறைகளையும், எலும்பு முறிவுக்கு மருந்து பூச்சு செய்து கட்டும் முறைகளை தெளிவாகக் கூறினார்.

அடுத்ததாக, திரு.கே.செல்வநாதன் ஆசான் எல்லாவித மூலநோய்களுக்குமான கருணைக்கிழங்கு சூரணம் செய்முறையைக் கூறினார்.

திரு.வடிவேல் ஆசான் வர்மக்கலை மருத்துவத்தை அனைவரும் கருத்தாய்வுக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ள முன் வர வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

திரு.ஜெகஜீவன் ஆசான் இரத்தமூலம், மூலநோய்கள், மூல அரிப்பு இவற்றுக்கான சிறந்த மருந்து முறைகளை கூறியதோடு பித்தப்பை கல்லுக்கான எளிய மருந்தினையும், வாதநோய்க்கான மெழுகு செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.

அடுத்ததாக, திரு.பழனி அவர்கள் Pranic healing குறித்தும், வர்மக்கலை குறித்தும் தெளிவாக பேசினார்.

அடுத்ததாக திரு.ஜாண் ஆசான் தலைவலி, தலைசுற்று, கண்கலக்கம், பீனிசம், காயம், இருமல், சயம், வாதம் இவற்றுக்கு தலைக்கு வைக்கும் தைலம் தயாரிக்கும் முறையை கூறினார்.

திரு.ஜெபமணி ஆசான் குடல்புண், இருமல், மந்தம், வாயு, செரியாமை, வீக்கம், மகோதரம், கழிச்சல், கிராணி, மூலம், தளர்ச்சை, வயறுவலி இவற்றுக்கு லேகியம் செய்முறையை கூறினார்.

அடுத்ததாக மரு.ஷேக் முகமது தோள்பட்டை வலிக்கு எளிய மருந்துக் குறிப்பினையும், Vericose vein குணமாக தைலம் செய்முறையை கூறினார். அடுத்ததாக மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் Vericose Ulcer-க்கான தைலம் செய்முறையையும், வலிகளுக்கான வர்மப்புள்ளி தூண்டு முறைகளையும், உயர் இரத்த அழுத்தம், குறை இரத்த அழுத்தம் இவற்றை கட்டுப்படுத்தும் வர்மப்புள்ளிகளையும் தெளிவாகக் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *