சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

– வழக்கறிஞர்  பி. விஜயகுமார்

சைபர் குற்ற வங்கி பணம் முடக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும்Breezing and unbreezing bank Accounts involved cyber crime

திடீரென வங்கியிலிருந்து நமக்கு ஒரு அழைப்பு வரும். உங்கள் வங்கிக் கணக்கின் பணம் முடக்கப்பட்டுள்ளது என்று. நாம் பயந்தபடி வங்கிக்கு  ஓடுவோம். விபரங்கள் கேட்போம். வங்கி மேலாளரோ கேரள மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் உங்கள் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளதாக ஆணை பிறப்பித்துள்ளார்கள் என்று சொல்லுவார்கள்.

இதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை. நாம் பல வாடிக்கையாளர்களிடமிருந்து UPI மூலம் பணம் பெறுவோம். சில நேரம் நமது நெருங்கிய நண்பரோ நமக்கு பணம் அனுப்பியிருப்பார். ஆதலால் நாம் கவலைப்பட மாட்டோம். ஆனால் அந்த நெருங்கிய  நண்பருக்கு சில மோசடி கும்பல்களிடமிருந்து பணம் வந்து அது நமது கணக்கிற்கு வந்திருக்கும். அந்த மோசடி கும்பலின் முழு பண பரிவர்த்தனையும் கண்டறிவதற்காக நமது வங்கிப் பணமும், நண்பர் பணமும் முடக்கப்பட்டிருக்கும். மோசடிக் கும்பல் மீதுள்ள விசாரணை முடியும் வரை நமது பணத்தை எடுக்க முடியாத நிலை உருவாகும். ஆதலால் இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை நமது பணம் எடுக்க முடியாத நிலை ஏற்படும். அதுவும் நமது கணக்கில் ரூ.10 லட்சம் இருக்கும். ஆனால் மோசடி கும்பலிடமிருந்து நமது கணக்குக்கு வந்த பணம் ரூ. 2 லட்சமாக மட்டும் தான் இருக்கும். ஆனால் வங்கியோ மொத்த 10 லட்சத்தையும் முடக்கி விடுவார்கள். ஏன் பணம் முடக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை நமது மாவட்ட சைபர் பிரிவு போலீசார் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு 2024-ம் ஆண்டு தாக்கல் செய்தார். அவருக்கு வங்கியில் 12 லட்சம் ரூபாய் இருந்தது. அவர் வங்கிக் கணக்கு பணம் முழுவதும் தெலுங்கான சைபர் குற்ற போலீசாரால் முடக்கப்பட்டிருந்தது. ஆனால் மோசடியாக வந்ததாகக் கூறப்படும் பணம் வெறும் 2 லட்சம் மட்டுமே. இருப்பினும் அவரது மொத்தப் பணமும் முடக்கப்பட்டது. இரண்டு வருடமாக அப்பணத்தை எடுக்க முடியவில்லை. அதனால் தான் அவர் நீதிமன்றத்தை நாடினார்.

நீதிமன்றம் அவர் வழக்கை பரிசீலித்து மோசடி என்று கூறப்படும் ரூ.2 லட்சத்தைத் தவிர்த்து மற்ற பணங்களை வங்கி விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன் பிரகாரம் அவர் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டார். இப்பேர்பட்ட பிரச்சனை வருபவர்கள் மேற்படி சொன்ன உயர்நீதிமன்ற தீர்ப்பை வங்கியில் காட்டி தமது பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். உயர் நீதிமன்ற தீர்ப்பு நாள் 10.09.2024 ஆகும். நீதியரசர் மாண்புமிகு திரு.ஜெயசந்திரன் ஆவார். இந்தத் தீர்ப்பை நீங்கள் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்னொரு வகை வங்கி கணக்கையும் வங்கிகள் முடக்குவார்கள். அது மிகவும் ஆபத்தானது. அதற்கு பெயர் MULE Account. இங்கு தீவிரவாதிகள், கிரிமினர் பஜார் நடத்துபவர்கள். ஒரு அப்பாவியிடம் அவர் பெயரில் ஒரு வங்கிக் கணக்கை திறக்கச் சொல்வார்கள். அதற்கு நல்ல சன்மானமும் கொடுப்பார்கள். அவர் வங்கி கணக்குத் திறந்ததும் அந்த அப்பாவிக்கு தெரியாமல் கோடிகணக்கில் அவர் கணக்கு வழியாக பரிவர்த்தனை நடக்கும்.

இதை பார்வையிடும் வங்கியினர் இந்த பரிவர்த்தனையை சைபர் பிரிவுக்கு உடனே தெரிவித்து வங்கி பணத்தை முடக்கி விடுவர். அதன் பிறகு அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, தீவிரவாத எதிர்ப்புத் துறை போன்ற துறைகளெல்லாம் விசாரணையில் இறங்கி விடுவர். பிறகு வழக்கு வரும். பணம் எந்தத் தீவிரவாதியிடமிருந்து வந்தது என்றெல்லாம் கண்டுபிடித்து விடுவர்.  MULE Account holder –ஐ முதலில் வழக்கில் சேர்த்திருந்தாலும் வழக்கின் விசாரணை முழுவதுமாக முடிந்ததும் அவரை வழக்கிலிருந்து விடுவித்து விடுவர். இருப்பினும் அவர் விசாரணையின் போது மிகவும் கஷ்டப்பட நேரிடும். ஆதலால் யாராவது நம்மை அவர்களுக்காக வங்கிக் கணக்கு திறக்கச் சொன்னால் நன்றாக யோசித்து அதைச் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *