அம்மா
- By Magazine
- |
-
கா.திலீபன் தமிழாசிரியர்
பௌர்ணமியைப் போல்
அலங்கரித்துச்
சுற்றித்திரிந்த விண்மீனே!
கால் வயிறு
கஞ்சிக்காகவும்,
தன் மகனின்
ஆசைக்காகவும்,
உடல் கருத்தும்! கண்கள் சிவந்தும்!
கரும் நிலவாக
சுற்றிக்கொண்டிருக்கிறாய்!
அதனால்தான் என்னவோ?
அதை அமாவாசை என்கிறார்களோ?
என் ஆசை அம்மா! என்றும்
உயர்ந்திருக்கிறாய்.
Leave a Reply