குமரி எழிலன்
இரவு என்பது
உறங்க அல்ல
விழித்துக்கொள்ள…
கனவு என்பது
ஏங்க அல்ல
இயங்க…
பார்வை என்பது
மறக்க அல்ல
பதிந்து கொள்ள
பயணம் என்பது
பார்க்க அல்ல
அனுபவிக்க
கடல் என்பது
அலைவீச அல்ல
உயிர்கள் வாழ
வாழ்க்கை என்பது
வாய் பேச அல்ல
வாழ்ந்து காட்ட…
புரிவது என்பது
சொற்களாலல்ல
செய்கைகளால்
இருப்பது என்பது
கற்பனை அல்ல
செயல்படுவது…
உயிரால்மட்டும்
வாழ்வது
விலங்கு
உணர்வோடும்
வாழ்பவன்
மனிதன்..
இன்பம் என்பது
கையளவு அல்ல
கடலளவு
வனத்தை
வசப்படுத்தும்
மிருகம்
வானத்தையும்
வசப்படுத்தும்
மனிதம்
வானமே
வசப்படும் என்றால்
மனம்?!?!..
எத்தனைக்
காலம்தான்
பொறுத்திருப்பாய்
உன்
இதயதாகத்தை
மறைத்திருப்பாய்
கண்கள்
விடும்
பெருமூச்சு
காதுக்கும்
இங்கே
கேட்கிறது
இதயம்
பாடும்
ஏக்கராகம்
உதயம்
வரை
ஒலிக்கிறது..
தாகம் இங்கே
தண்ணீர்
அங்கே
இதழ்ளுக்கிடையே
ஏன்
இத்தனைதூரம்
சம்மதப் படகு
துடுப்புடன்
வருவதை
இதயக்
கண்ணோ
தேடுகிறது..
கருத்துமனம்தேடி
கவிதை முகம்
கறுக்கிறது
கறுத்தமுகம்இனி
கார்மேகம்
ஆகலாம்
கண்ணீர் மழையும்
சிந்தக்
கூடும்
மேகத்திலென்ன
ஆண் மேகம்
பெண் மேகம்
மோகத்துக்கும்
அதுதானே
வேதம்…
Leave a Reply