மது ஒழிப்பு மாரத்தான்
  • By Magazine
  • |
எத்தனை நாளைக்குத்தான் தொண்டனாகவே இருக்கிறது. கொடி பிடிக்கிறதும் சுவரொட்டி ஒட்டுறதுமாகவே போய்ட்டுருந்துச்சுண்ணா நமக்கு என்ன மதிப்பு… திருமூர்த்தி தீவிரமாய் யோசித்தான். நாமளும் கவுன்சிரலாகணும். அப்புறம் எம்.எல்.ஏ அமைச்சர்னு போய்ட்டே இருக்கணும். சீட்டு கிடைக்கணும், மக்களையும் நம்ம பக்கம் திருப்பணும். சட்டென்று ஒரு திட்டம் மனதில் பட்டது. அன்று மாலையே நண்பர்களை சந்தித்தான். திங்கள்கிழமை கலெக்டர் ஆபீஸ்க்கு மனு கொடுக்க போவணும்டா… என்ன மனு… எப்படி மனு… சும்மா மொட்டையா மனு கொடுக்க போகணும்னு சொன்னா எப்படி… நண்பர்கள் […]
Read More
வ.உ.சி-க்கு உதவி செய்த கைதிகள்
  • By Magazine
  • |
வ.உ.சி-க்கு கோவை சிறைதான் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..! வ.உ.சி -யைஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டித் தெருவெல்லாம் இழுத்துச் சென்றுள்ளனர்..! வஉசிக்கு சிறைக்குள் தனிஅறை.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுத்தான் வஉசியை அடைத்து வைத்தனர்..! சிறைக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு உடைதந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் […]
Read More
சுதனும் மதனும் சுனாமியும்
  • By Magazine
  • |
ஒரு விடுமுறை நாள். மதனை சுதன் விருந்துக்கு கூப்பிட்டிருந்தான். பூவரச மரமும், புன்னை மரமும் நின்றிருந்த சுதனின் வீட்டிற்கு வந்த மதனை வரவேற்று உபசரித்தார்கள் சுதனின் அம்மா.  சுதனின் அம்மாவை மதனும் அம்மா என்றே அழைப்பான். மதனின் அம்மாவை சுதனும் அம்மா என்றே அழைப்பான்.  மத்தியானச் சாப்பாட்டிற்கு நல்ல சாளை மீன் அவியல், சூரத்துண்டு பொரியல், மஞ்சத் தண்ணீ மீன்குழம்பு என வித விதமா பரிமாறி வயிறு நிறைய உண்ண வச்சாங்க அம்மா.  சாப்பிட்டப் பிறகு, அதற்கு […]
Read More
சாலையில்  இறந்து கிடக்கும் பூனைக்கான இரங்கல் குறிப்பு
  • By Magazine
  • |
வண்டியில அடிபட்டு செத்துகிடக்குது பாருங்கப்பா, பாவம் அந்த பூனை. சாம்பல்கரிய நிறத்தில் உப்பிப்போய் கிடந்த அந்தப் பூனையின் உடலில் வண்டியின் தடயங்களைக் கண்டறிய இயலவில்லை. இதோட அப்பா பூனை எங்கப்பா இருக்கும்?… தேடிவரும்ல. நெஞ்சுக்கு முன்னிருந்தது அவனின் குரல்… அப்பாவை எவ்வளவு பெரிய உருவமாக எழுப்பிவிட்டான்! கடுகுக்குள்ளிருந்து எகிறும் குரலை குறுகத் தறித்தால் எங்கு கொண்டு பொத்தி வைப்பது. அது பெரிய பூனைதான் என்பதையும் தனித்தலையும் திறன் கொண்டது என்பதையும் நான் சொல்லவில்லை. அவ்வாறே அது கைவிடப்பட்டதாகவோ […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
கரிசனையோடு உச்சுகொட்டும் சிலரும் கண்டும் காணாமல் பலருமாயிருக்கும் ஒரு மத்தியான வெய்யிலின் உக்கிரத்தில் மாரெலும்பு தெந்நிய ரோட்டோரச் சிறுமி நெருப்பைக் கடப்பதுபோல ரோட்டைக் கடக்கிறாள் பட்டுப்போன மர இலைகளுக்கு நன்றியோடு நானெழுதிக்கொண்டிருக்கும் இந்த கவிதை என்னை அருவருப்பாய் பார்க்கிறது. – டாக்டர் கி. பாபு
Read More
பாரதி என்னும் சாரதி
  • By Magazine
  • |
சீவலப்பேரி என்றவுடனே நம் கண் முன் விரியும் காட்சி சீவலப்பேரி பாண்டி என்னும் தொடர் கட்டுரையும் திரைப்படமும்தான் … அந்த ஊர் இன்னொரு சிறந்த மனிதனை கவிஞனை ஒரு யுக புருசனை ஈன்றதும் கூட…. ஆம் மகாகவி பாரதி பிறந்த ஊர் சீவலப்பேரி புகுந்த ஊர் எட்டயாபுரம் படித்த ஊர் நெல்லை சரணடைந்த ஊர் பாண்டிச்சேரி மறைந்த ஊர் சென்னை….. ஆம் தாமிர பரணிக் கரையில் பிறந்து மெரினா கடற்கரையில் கரைந்தார்….. ஆம் மகாபாரதத்தில் யுத்தரதத்திற்கு கண்ணன் […]
Read More
ஒரே ஒரு இந்திரன்ஸ்…
  • By Magazine
  • |
நாற்பத்தைந்து வருடங்களாக சினிமாவில் தொடர்ந்துக் கொண்டிருக்கும் இந்திரன்ஸ் சினிமா வாழ்க்கையில் திரையில் மின்னி மறைந்துப் போகும் நகைக்சுவை கதாபாத்திரங்களிலிலிருந்து பெருமைப் பொருந்திய முழு நீள கதாபாத்திரங்களுக்கு தன்னை வளர்த்துக் கொண்டு உயர்ந்து நிற்கிறார். இவரின்  சினிமா வாழ்க்கை என்பவனவற்றை குறித்து 2024 ஜீலை 7-ல்  மலையாள மனோரமா ஞாயிறு இதழில் வெளி வந்த பேட்டி… மலையாளத்தில் பேட்டி கண்டவர் டி. பி  லால், தமிழில்: கிருஷ்ணகோபால்.. கேள்வி: இந்த சினிமாவில் இந்திரன்ஸ் திடுக்கிட வைக்கிறார் என்பனப் போன்று […]
Read More
காத்திருப்பு
  • By Magazine
  • |
இரண்டு கரைகளும் நிறைந்து வழியும் அளவிற்கு மண்ணியாற்றில் வருகிறது தண்ணீர். வழக்கத்தை விட சற்று அதிகம் தான். அந்த தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போல தெரிகிறது மூங்கில் தட்டிப்பாலம். ஆற்றை வேடிக்கைப் பார்த்தபடி அப்பாலத்தில் நின்று கொண்டிருக்கிறான் வீரா. வீரா ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன். தானிபுரம் தான் அவனது ஊர்.அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்து தினமும் பேருந்துக்கு ஆத்தியூர் வந்து விடுவான் காலை எட்டு மணிக்கு வரும் பேருந்தில் பள்ளிக்கூடம் செல்வதற்காக, ஏழரை மணிக்கெல்லாம் வந்து […]
Read More
தோற்றமயக்கம்
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மயினியோ, ஆத்தடிமாடங்கோயில்ல? ஒரு அதிசயத்தைக் கேட்டேளா? சொல்லுவுளே, சொன்னாத்தானே தெரியும். அதயேங் கேக்கயோ ஆத்தடிமாடன் சொள்ளமாடனுக்கு கண்ணு  மூடிமூடித் தொறக்காம….கேக்கயில                                                   புல்லரிச்சுற்று..படபடப்புடன் சொல்லி முடிக்குமுன் தெவுங்கிவிட்டாள் தெக்கூட்டு விசியா . எவ சொன்னாவுளே நீ நேருல பாத்தியா? நம்பமறுத்த தொனியில் கேட்டாள் கவுசல்யா. நேருல பாத்தியா தேருல பாத்தியான்னு விண்ணாணம்லாம் பேசாதிங்யொ இப்பதான் கோரசேரி மயினி சொன்னா. பாத்துக்கிடுங்கோ. அவளுக்கும் வேலையில்ல உனக்கும் சோலியில்ல. உடுத்த சீலைய நம்பமாட்டேளா? நீங்யொ இருந்திருந்து வொங்கள்ட்டவந்து […]
Read More
உலகின் முதல் எழுத்தாளர்
  • By Magazine
  • |
ஆதிகால சுமேரியாவும், பாபிலோனும்தான் நாகரிகம், மற்றும் எழுத்துக்களின் பிறப்பிடம் என்று சொல்லப்படுகிறது.   யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகளுக்கிடையே இருந்த, பண்டைய மெசபடோமியாவின்  ஒரு நகரம்தான் பாபிலோன். மெசபடோமியாதான் மனித நாகரிகத்தின் தொட்டில் என்றும், வளமான பிறைநிலம் (Fertile Crescent)  என்றும் போற்றப்படுகிறது.  அந்த காலம், கற்காலத்தின் முடிவாகவும், பித்தளை/உலோக காலத்தின் துவக்க காலமும் கூட. அப்போதுதான்  எழுத்து துவங்கியதும் கூட.  பழங்கால சுமேரியர்கள் கல்வியில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர். எதனையும் பதிவு செய்வது அங்கே முக்கியமாக கருதப்பட்டது. தமது […]
Read More