அமைதி காப்போம்!
  • By Magazine
  • |
– கே.பி. பத்மநாபன் மனிதர் இடையே கருத்தெல்லாம்                 மாறுபடும் தான், தவறன்று; தனி என் கருத்தே உயர்வென்று                 தலையுள் வெறியைக் கொள்ளாமல் கனிவாய் மாற்றார் மொழிகேட்டுக்                 கலந்தே அன்பால் உறவாடி இனிய முடிவை எட்டிட்டால்                 இம்மண் அமைதி பூண்டிடுமே! கணவன் மனைவி இருவருமே                 கலந்தே பேசி முடிவெடுத்தால் மணமே நிறைந்த இல்லறத்தை                 மகிழ்வாய் வாழ்ந்து விடலாமே; இணக்கமாக இருநாடும்                 இணைந்தே பேச முயன்றிட்டால் பிணங்கள் வீழும் போரின்றிப் […]
Read More
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி குவளையில் மதுவென மரணத்தை நிரப்பியிருக்கிறது காலம். பருகுகிறான் நீரோ சோடாவோ தேவைக்கு சேர்க்கப்படாத அதன் கசப்பு தொண்டையை இறுக்குகிறது விழிகளை மூடி பின் திறந்து உச்சுக்கொட்டியபடி துரோகத்தைச் சுவைக்கும் அவன் கண்களால் ஒருமுறை யாவரையும் அளக்கிறான் உலர்ந்த சொற்களோடு நான் இந்தக் கவிதையுடன் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.
Read More
  • By Magazine
  • |
கவிமுகில் பெ.அறிவுடைநம்பி காலம் வழங்கிய வாய்ப்பைக் கொண்டு களத்தில் இறங்கி விளையாடு! இலக்கை எட்டும் திறமை உனக்குள் இருக்கும் வரையில் போராடு! வெற்றி நிச்சயமெனும் உறுதிப்பாட்டை நெஞ்சில் பதித்து கற்று விடு! சாதனைப் பாதையில் தடம் பதிக்கும் சாகசப் பறவை ஆகிவிடு! முன்னேற்றம் எனும் மூலதனத்தை அடிப்படை யாக்கி நடைபோடு! தொடர் முயற்சியே பிரதானம் என்று மும்முரமாக செயலாற்று! கடின உழைப்பின் விளைச்சல் அதுவென கண்டும் அறிந்தும் மகிழ்ந்து விடு!
Read More
  • By admin
  • |
கட்டுப்பாடும் சுதந்திரமும் ! கட்டுப்பாடாய் இருந்தால் தான்                 காக்கமுடியும் சுதந்திரத்தை; எட்டுப்பட்டி யானாலும்                 இந்தியாவே ஆனாலும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும்                 விதியை மதிக்கும் பண்புடனும் கட்டுப்பாடாய் இருந்தால் தான்                 காக்க முடியும் சுதந்திரத்தை! கொட்டும் செல்வம் குவித்தவுடன்                 குவலயத்தை மிதிப்பதுவும் ஒட்டிக் கொண்ட இனம்சாதி                 ஒன்றை மட்டும் எண்ணுவதும் மட்டில்லாமல் பேசுவதும்                 மற்றோரையே ஏசுவதும் முட்டுக்கட்டை யாகிடுமே;                 முற்றாய் வீழும் சுதந்திரமே! எட்டுத்திக்கும் இருப்போரை                 […]
Read More
  • By admin
  • |
வேண்டும்… பயன்நோக்கா பணிசெய்து வாழ்தல் வேண்டும்                 பகுத்துண்டு பல்லுயிர்கள் ஓம்பல் வேண்டும் அயராது இறைத்தொண்டு செய்தல் வேண்டும்                 அன்பாலே பிற உயிரைக் காத்தல் வேண்டும் தயங்காமல் பிறர்க்குதவி அளித்தல் வேண்டும்                 தந்நலத்தை அடியோடு நீக்கல் வேண்டும் வியந்து நமை ஊரார்கள் மெச்ச வேண்டும்                 வாழ்நாளில் புகழோடு வாழ்தல் வேண்டும் கவிஞர்.வ.ஆனையப்பன்
Read More
  • By admin
  • |
விசித்திரம்… உயரம் என்பது எப்போதும் தரையிலிருந்து தொடங்குவதில்லை.. துயரம் என்பது எப்போதும் எதிரியிடமிருந்து எழுவதில்லை.. இரக்கம் என்பது எப்போதும் செல்வச் செழிப்பிலிருந்து வருவதில்லை… உறக்கம் என்பது எப்போதும் உயர்ந்த மெத்தையிலிருந்து பெறுவதில்லை.. மகிழ்ச்சி என்பது எப்போதும் அடைந்த பணத்திலிருந்து கிடைப்பதில்லை.. புகழ்ச்சி என்பது எப்போதும் அமர்ந்த பதவியிலிருந்து விளைவதில்லை… உலகம் விசித்திரமானது.. கமல. அருள் குமார்
Read More