இரா. அரிகரசுதன்
போர்ச்சிதறிலின் எச்சங்களில் வாழும்
தனது குடும்பத்திற்கு
உணவுப் பொருளை
எடுத்துச்சென்ற இரண்டு
சிறுவர்களின் மேல்
வீசியெறியப்படுகின்றது குண்டு…
வானிலிருந்தோ
தொலைதூரத்திலிருந்தோ
வெடித்துச் சிதறிய உன்மத்தத்தைக்
கண்டுகொண்டிருப்பவனின்
மனம்..
தற்செயலாலானதா என்ன?
இணையம் உலாவவிடும்
இக்காட்சிக்குள் மாட்டிக்கொண்ட
மலைகள் கடல்கள் தாண்டிய
தூரத்தில் வாழும் ஓர் ஆசிரியனின்
இதயம்
உருகிப் பாய்கிறது!
யுத்தங்களே இந்த உலகின்
சுற்றுச்சூழல் சீர்கேடு.
யுத்தங்களே மனதின்
ஆகப்பெரும் கழிவு.
இதயங்களை களற்றிய தோரணங்களுக்குள்
அமர்ந்து தங்கள் தேநீர்களை
அளவெடுத்துக் கொண்டிருப்பவர்கள்
தங்கள் கண்களை மினுக்குகிறார்கள்!
அது கச்சா எண்ணெயில் மிதக்கும் வைரத்தைப்போல
மின்னுவதும் தற்செயலா..
உலகம் AI யைக் கற்றுக் கொண்டிருக்கின்றது,
உலகம் AI ஆக மாறிக் கொண்டிருக்கின்றது!
மனிதர்கள் இனி என்ன செய்வார்கள்.
Leave a Reply