ஞானத் தமிழ் வளர்ப்போம்

ஞானத் தமிழ் வளர்ப்போம்

  • By Magazine
  • |

– கை. செல்லத்தங்கம்

ஞானத் தமிழ் வளர்ப்போம் – நாம்

விஞ்ஞானத் தமிழ் வளர்ப்போம்.

முக்கடல் முத்தமிடும் குமரி மண்ணில்

மும்மதமும் சேர்ந்துழைக்கும் குமரியிலே . ஞானத்

தமிழனுக்கோர் வானுயரச் சிலை

மெய்ஞ்ஞானத் தலைவனுக்கோர் கற்சி¢லை

சங்கம் வைத்து வளர்த்த தமிழ்

தரணியெங்கும் முழங்கும் தமிழ்

கற்க அதற்குத்தக நில் என்ற தமிழ்

அணுவை குறுகத் தரித்து ஏழ்கடலை

புகுத்தி குறளைச் சொன்ன தமிழ்

கம்பனும் கவியரசர்களும் கையாண்ட தமிழ்

மெய்ஞ்ஞானம் மூலம் வளர்ந்த தமிழ் – இன்று

¢விஞ்ஞானம் மூலம் விண்ணைத் தொட்ட தமிழ்

கண்கள் விரியட்டும் சமத்துவம் நோக்கி

எண்ணங்கள் விரியட்டும் சமூக நீதி நோக்கி

அறிவு வளரட்டும் அமைதி காண

அதரங்கள் பேசட்டும் இயற்கை காக்க

தமிழால் வளரட்டும் தமிழர் .  ஞானத்

தமிழால் வளரட்டும் இளையோர்

பிஞ்சு மனதில் ஞானத் தமிழ் விதைத்து

ஞாலத்தில் நிமிரட்டும் வாசிப்பால் வானம் தொட்டு

நேசிப்பால் மனிதம் தொட்டு – ஞானத்

தமிழ் வளர்ப்போம் என்றும் 

நம் உயிர்த் தமிழ் காப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *