தோல்விகள் கூட தோற்றுப்போகும் நம்பிக்கை இருந்தால்
  • By admin
  • |
தோல்விகள் கூட தோற்றுப்போகும் நம்பிக்கை இருந்தால்… விழுந்தாலும் எழுவேன் என்பதே  நம்பிக்கை. தவறி விழுந்த விதையே முளைக்கும்போது தடுமாறி விழும் நம் வாழ்க்கை மட்டும் ஏன் சிறக்காது? நம்பிக்கையுடன் எழுவோம். தோல்விகள் கூட தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால். தளராத இதயம் இருந்தால் இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை. என்னை தோற்கடிக்கவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல. விழுந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை. உள் மனதில் எதை எண்ணி அந்த எண்ணத்திற்கு உயிர் கொடுக்கிறோமோ அதுவாகவே […]
Read More
  • By admin
  • |
கட்டுப்பாடும் சுதந்திரமும் ! கட்டுப்பாடாய் இருந்தால் தான்                 காக்கமுடியும் சுதந்திரத்தை; எட்டுப்பட்டி யானாலும்                 இந்தியாவே ஆனாலும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும்                 விதியை மதிக்கும் பண்புடனும் கட்டுப்பாடாய் இருந்தால் தான்                 காக்க முடியும் சுதந்திரத்தை! கொட்டும் செல்வம் குவித்தவுடன்                 குவலயத்தை மிதிப்பதுவும் ஒட்டிக் கொண்ட இனம்சாதி                 ஒன்றை மட்டும் எண்ணுவதும் மட்டில்லாமல் பேசுவதும்                 மற்றோரையே ஏசுவதும் முட்டுக்கட்டை யாகிடுமே;                 முற்றாய் வீழும் சுதந்திரமே! எட்டுத்திக்கும் இருப்போரை                 […]
Read More
  • By admin
  • |
வேண்டும்… பயன்நோக்கா பணிசெய்து வாழ்தல் வேண்டும்                 பகுத்துண்டு பல்லுயிர்கள் ஓம்பல் வேண்டும் அயராது இறைத்தொண்டு செய்தல் வேண்டும்                 அன்பாலே பிற உயிரைக் காத்தல் வேண்டும் தயங்காமல் பிறர்க்குதவி அளித்தல் வேண்டும்                 தந்நலத்தை அடியோடு நீக்கல் வேண்டும் வியந்து நமை ஊரார்கள் மெச்ச வேண்டும்                 வாழ்நாளில் புகழோடு வாழ்தல் வேண்டும் கவிஞர்.வ.ஆனையப்பன்
Read More
  • By admin
  • |
விசித்திரம்… உயரம் என்பது எப்போதும் தரையிலிருந்து தொடங்குவதில்லை.. துயரம் என்பது எப்போதும் எதிரியிடமிருந்து எழுவதில்லை.. இரக்கம் என்பது எப்போதும் செல்வச் செழிப்பிலிருந்து வருவதில்லை… உறக்கம் என்பது எப்போதும் உயர்ந்த மெத்தையிலிருந்து பெறுவதில்லை.. மகிழ்ச்சி என்பது எப்போதும் அடைந்த பணத்திலிருந்து கிடைப்பதில்லை.. புகழ்ச்சி என்பது எப்போதும் அமர்ந்த பதவியிலிருந்து விளைவதில்லை… உலகம் விசித்திரமானது.. கமல. அருள் குமார்
Read More
பேராசை என்ற பயம்
  • By admin
  • |
பேராசை என்ற பயம்… சாவு என்பது உனக்குக் கிடையாது என்பதை அறியாத வரை நீ பேராசையாகத்தான் இருப்பாய். சாவினால் தான் பேராசை வருகிறது. இதைப்பற்றி நீ ஒரு போதும் எண்ணியிராமல் இருக்கலாம். ஆனால் நாம் சாவைக் குறித்து அஞ்சுவதால் தான் பேராசை வருகிறது. சாவு இருப்பதால் வாழ்வை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அனுபவித்து விட நாம் விரும்புகிறோம். நாம் பேராசைக்காரர்களாய் இருக்கிறோம். நாம் அதிகமாக உண்ண விரும்புகிறோம். எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ அவ்வளவும்  சேர்க்க விரும்புகிறோம். […]
Read More
ஒருவழிப்பாதை
  • By admin
  • |
ஒருவழிப்பாதை… அன்று வெள்ளிக்கிழமை… கோழிக்கடை கோபால் கடைக்குள் உட்காந்து நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தார். கோழிக்கடையில் இன்று பெரிதாக வியாபாரம் ஒன்றும் இருக்காது. ஆனாலும் சில வெள்ளிக்கிழமைகளில் எதிர்பாராத வியாபாரம் இருக்கும். கடையை தேடி வரும் வாடிக்கையாளர்களை தவற விட்டு விடக் கூடாது என்பதற்காகவே கடையை திறந்து வைத்து உட்கார்ந்திருப்பார். அன்று பெரும்பாலும் கடையை சுத்தம் செய்வது, கணக்கு வழக்குகளை பார்ப்பது  என்று நேரத்தை கழிப்பார். கடை அமைந்திருக்கும் இடம் ஒரு பிரதான சாலைதான்… பேருந்து நிலையம், இரயில் […]
Read More
தனியார் கையில் அணு உலையா? அரசின் விபரீத முடிவு மக்கள் கலக்கம்
  • By admin
  • |
தனியார் கையில் அணு உலையா? அரசின் விபரீத முடிவு மக்கள் கலக்கம் தனியாருடன் இணைந்து அணு உலைகள்  இயக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் எரிசக்தி தொடர்பாக  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது நாட்டின் மீது அக்கறை உள்ளவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் தயாரிப்பதற்கு நாட்டில் எவ்வளவோ வழிகள் உள்ளன. காற்றாலைகள் மூலமும், சூரிய சக்தியின் மூலமும், கடல் அலைகளின் மூலமும் ஏற்கனவே நாம் பயன்படுத்தி வரும் பழைய முறையான தண்ணீரின் சக்தியை பயன்படுத்தியும் மின்சாரத்தை தயாரிக்க […]
Read More