சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA-வின் 292-வது கருத்தாய்வு கூட்டமானது மரு.கமலக்கண்ணன் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 04.10.2025 அன்று மதியம் சுமார் 2.00 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில் மரு.கமலகண்ணன் மூட்டு வலிக்கான மருந்து, மலச்சிக்கல், வலிகளை கட்டுப்படுத்துவதற்கான சூரணம் செய்முறையை கூறினார். மேலும் தீராத தலைவலிக்கு பூச்சு மருந்தினையும் கூறினார். அடுத்ததாக திரு. செல்வநாதன் ஆசான் பசியின்மை, செரியாமை, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும் லேகியம் செய்முறையைக் கூறினார்.

திரு. ஹரிகரன் ஆசான் காய்ச்சல், டெங்குகாய்ச்சல் குணமாக கசாயம் செய்முறையை கூறினார்.திரு. பாலதிருமால் அவர்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சூரணம், வர்மம், குன்மம், சூலை, தோல்நோய்கள், குஷ்டம், சொரியாசிஸ் இவற்றை குணப்படுத்த சித்திரமூலம் கசாயம் செய்முறையையும் கூறினார்.திரு.ஜெபமணி ஆசான் சூலை, புற்றுநோய், தோல்நோய்கள், வாய்வு பிரச்சனைகளுக்கான எளிய மருந்தினை கூறினார்.

மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் விஷத்துக்கு முறிவு மருந்துமுறைகளை கூறினார். மேலும் காது ஓட்டைக்கு காதில் விடும் சொட்டுமருந்து செய்முறையைக் கூறினார். ஆண்மைக்குறைவு, உடல் ஆரோக்கியத்துக்கான சூரணம் செய்முறை மற்றும் விஷகடிக்கு எளிய மருந்தினையும் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *