– திலீபன் காளிதாஸ் – (தமிழாசிரியர்
ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டால்
நான்தான் சிறப்பு விருந்தினர்.
எனக்கென தனி டம்ளர்,
என்னிடம் பணம் கொடுக்கும்
நீயோ கையை உயர்த்திப் போடுகிறாய்.
நான் கொடுத்தப் சில்லறையை
வாங்கிச் சட்டைப்பையிற்குள் போடுகிறாய்.
உன் வீட்டைத் தூய்மை செய்து
மூக்கை மூடி,
வீதியில் போடுகிறாய்.
என் பிழைப்போ
விரும்பி தெருவை சுத்தம் செய்வது.
என் பணியோ தூய்மைப் பணியாளர்,
உங்களின் மத்தியில் குப்பைக்காரன்!
என் உடையோ அழுக்கு நிறம்,
எத்தனை சாயம் போட்டாலும் நிறம் மாறாது.
என் உடை மட்டும்தானா?
உங்கள் உள்ளம் இல்லையா?
Leave a Reply