மலையாளக்  கவிதை
  • By Magazine
  • |
மலையாளம் – விபிதா தமிழ் – ராஜன் ஆத்தியப்பன்                                      உம்மிணிக்கு ஆறு வயது. அவளுக்கென்று  மூக்குக் கண்ணாடி ஒன்றுண்டு. பூனையை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் அல்ல. அவளது பூனைக்கு சிறகுகளுண்டு. மனிதரைப்போல அது பேசும் ஒரு கையால் சோறு பிசைந்து தின்னும். நாய்குட்டியை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் அல்ல. ஆகாயம் தொடுமளவிற்கு பறக்கும் சக்தியுடையது அவளது நாய்குட்டி. பாட்டு பாடும் படம் வரையும் முத்தம் கொடுக்கும். எறும்புகளை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் […]
Read More
அமைதி காப்போம்!
  • By Magazine
  • |
– கே.பி. பத்மநாபன் மனிதர் இடையே கருத்தெல்லாம்                 மாறுபடும் தான், தவறன்று; தனி என் கருத்தே உயர்வென்று                 தலையுள் வெறியைக் கொள்ளாமல் கனிவாய் மாற்றார் மொழிகேட்டுக்                 கலந்தே அன்பால் உறவாடி இனிய முடிவை எட்டிட்டால்                 இம்மண் அமைதி பூண்டிடுமே! கணவன் மனைவி இருவருமே                 கலந்தே பேசி முடிவெடுத்தால் மணமே நிறைந்த இல்லறத்தை                 மகிழ்வாய் வாழ்ந்து விடலாமே; இணக்கமாக இருநாடும்                 இணைந்தே பேச முயன்றிட்டால் பிணங்கள் வீழும் போரின்றிப் […]
Read More
ஜேன் குக் ரைட் – வேதிசிகிச்சையின் அன்னை
  • By Magazine
  • |
– பேரா. மோகனா, பழனி நண்பர்களே, எல்லா உயிர்களையும் நோய் தாக்குவது இயல்பு.நோய் என்பது வைரஸ் அல்லது  பாக்டீரியா அல்லது   வளர்சிதை  மாற்றங்களால் ஏற்படலாம்.  இவைகளில் வைரஸ் நோய்கள் அனைத்தும் தொற்றும் நோய்களே. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களில் சில தொற்றுபவை;  சில தொற்றாநோய்கள். தொற்றாநோய்களில்  மூன்று பெரிய நோய்கள்தான் முன்னணியில் நிற்கின்றன  1. சர்க்கரை நோய், 2. இதய நோய் 3. புற்றுநோய்.. புற்றுநோய் எப்படி புற்றுநோய் என்பது நோய் அல்ல. அது ஒரு வளர்சிதை மாற்றத்தில் […]
Read More
தமிழர் மரபில் நிலமும் – நீரும்
  • By Magazine
  • |
– ஓர் சூழலியல் பார்வை – கோவை சதாசிவம் மனிதர்கள் தமது முன் கால வரலாற்றை அறிந்து கொள்வதில் தீராத தாகம் கொண்டவர்கள்! பத்து தலைமுறைக்கு முன்பு எம் பாட்டன் எப்படி இருந்திருப்பார்..? எப்படி வாழ்ந்திருப்பார்..? இத்தகைய கேள்விகளில் இருந்தே தொடங்குகின்றன… எப்போது பூமி தோன்றியது..? எப்போது மனிதன் தோன்றினான் ..?  எனும் புதிய கேள்விகள். பூமி, இறைவனின் படைப்பு என்று பண்டைய சமயங்கள் அனைத்தும் நம்பின. பூமி தட்டையானது என்னும் கருத்தாக்கத்தில் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு […]
Read More
பூதப்பாண்டியில் பிறந்த புரட்சிக்குயில்
  • By Magazine
  • |
– குமரி எழிலன் ஜீவானந்தம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட, இளமையில் தேவாரம், திருவாசகம், பஜனைப்பாடல்களை தேர்வீதிகளில் பாடிப் பரவசம் அடைந்த சொரிமுத்து, குமரி மண்ணில் பூதப்பாண்டியில் பிறந்தவர் …. 9 வயதில் கோயில் சுண்டலை, எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாக கொடுக்கச் சொல்லி, பூசாரிப் பாட்டா கேட்காததால்… பூசாரியிடமிருந்து பறித்துப் போய் சமபங்கு வைத்தவர். உடன்பயின்ற மண்ணடி மாணிக்கத்தின் தோளில் கை போட்டு தேர்வீதியில் சுற்றி கோயிலுக்குள் புக முயற்சியில் அடித்துக் காயப்படுத்தபட்டவர்.. காந்தியின் மீதும் கதர்மீதுமுள்ள பற்றால் […]
Read More
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி குவளையில் மதுவென மரணத்தை நிரப்பியிருக்கிறது காலம். பருகுகிறான் நீரோ சோடாவோ தேவைக்கு சேர்க்கப்படாத அதன் கசப்பு தொண்டையை இறுக்குகிறது விழிகளை மூடி பின் திறந்து உச்சுக்கொட்டியபடி துரோகத்தைச் சுவைக்கும் அவன் கண்களால் ஒருமுறை யாவரையும் அளக்கிறான் உலர்ந்த சொற்களோடு நான் இந்தக் கவிதையுடன் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.
Read More
உருண்டு திரள வேண்டாம்! போர் பதட்டம்
  • By admin
  • |
நவீன அறிவியல் வளர்ச்சியும் அணு ஆயுதப் பெருக்கமும் இன்று உலகம் முழுவதுமுள்ள  மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் இரண்டு உலகப்போர்களும் பலிவாங்கிய உயிர்கள் எண்ணிலடங்காதவை. இங்கிலாந்து, சீனா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் இழந்தன. இன்று உலகம் முழுவதும் சங்கிலித்தொடர் போல் தொடர்புறும் நாடுகளின் போர்ப்பதற்றம் மீண்டும் ஓர் மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுத்து விடுமோ என அறிஞர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போர்களால் உலகம் […]
Read More
  • By Magazine
  • |
கவிமுகில் பெ.அறிவுடைநம்பி காலம் வழங்கிய வாய்ப்பைக் கொண்டு களத்தில் இறங்கி விளையாடு! இலக்கை எட்டும் திறமை உனக்குள் இருக்கும் வரையில் போராடு! வெற்றி நிச்சயமெனும் உறுதிப்பாட்டை நெஞ்சில் பதித்து கற்று விடு! சாதனைப் பாதையில் தடம் பதிக்கும் சாகசப் பறவை ஆகிவிடு! முன்னேற்றம் எனும் மூலதனத்தை அடிப்படை யாக்கி நடைபோடு! தொடர் முயற்சியே பிரதானம் என்று மும்முரமாக செயலாற்று! கடின உழைப்பின் விளைச்சல் அதுவென கண்டும் அறிந்தும் மகிழ்ந்து விடு!
Read More
சொற்களில் முளைத்த நிலம்
  • By Magazine
  • |
நூலறிமுகம் – கூடல்தாரிக் ‘முதலெனப்படுவது நிலத்தோடு பொழுதே’ என்பார், தொல்காப்பியர்.அந்த வகையில் நிலமே மனிதனின் முதல் அடையாளமாகத் திகழ்கின்றது. இத்தகு சிறப்பு மிகுந்த நிலத்தினை உயிர்ப்பாக வைத்திருக்கும் உழுகுடிகளின் வாழ்வைப் பேசுகின்றன. ஏர் மகாராசனின் நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைத்தொகுப்பு..  இயற்கைச்சீற்றங்கள், அதிகார வர்க்கத்தின் அபகரிப்பு என நிலம் எளியவர்களின் கரங்களை விட்டு வெளியேறிச்சென்று விடுகின்றது.நிலமற்ற மனிதர்களின் வாழ்வு வார்த்தைகளால் வடிக்க இயலாதது. ஏர் மகாராசன் அவர்கள் மனிதர்களின் துயரங்களை நிலங்களும் அடைவதாக எழுதியிருப்பது இத் தொகுப்பினை […]
Read More
சமூகசேவகருக்கு பத்மஸ்ரீ விருது              கிடைக்குமா?
  • By Magazine
  • |
– சந்திப்பு : ஜி. ஜெயகர்ணன் என் உடலில் பலம் இருக்கும் வரை சமூக பணி தொடரும் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் சமூக சேவகர் ராஜகோபால். இவர் சுமார் 750 -க்கு மேற்பட்ட அனாதையான இறந்த உடல்களை அடக்கம் செய்தும் விபத்துகளில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்றியும் உள்ளார் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான மனநோயாளிகள், ஆதரவற்றவர்கள் ஆகியோர்களை காப்பகங்களிலும் சேர்த்து நிஜ கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார். இவரை புதிய தென்றலுக்காக மார்த்தாண்டம் கொடுங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். […]
Read More