சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA-293 -வது கருத்தாய்வுக் கூட்டமானது மரு.கமலகண்ணன் ஆசான் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மூலச்சல் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.11.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில், மரு.கமலகண்ணன் ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை இவற்றுக்கு மருந்தினையும், தோல்நோய்கள், வெரிக்கோஸ், சோரியாசிஸ் இவற்றுக்கு மருந்தினையும், பிண்ட தைலம் செய்முறை மற்றும் மாந்தம், சீதக்கழிச்சல் இவற்றுக்கு சூரணம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.

அடுத்ததாக திரு.ஜெகஜீவன் ஆசான் வாதநோய்களை குணப்படுத்தும் மருந்தினையும், பெரும்பாடு, வெள்ளை, வெட்டை இவற்றுக்கான மருந்தினையும், மாதவிடாய் நேரம் வயிற்றுவலிக்கு எளிய மருந்தினையும், உடல் எடை குறைய சூரணம் ஒன்றினையும் கூறினார்.

திரு.ஜெபமணி ஆசான் மேகம், குத்துளைவு, நீர் எரிச்சல், பிரமேகம், உள்சுரம், வெப்பசூடு, கல்லடைப்பு இவற்றுக்கு சூரணம் செய்முறையை கூறினார்.

திரு.கருணாநிதி ஆசான் கை கால் முறிவு குணமாக தைலம் செய்முறையைக் கூறினார்.

திரு.பாலதிருமால் ஆறாத புண்கள், தீக்காயம், சர்க்கரை நோயினால் வரும் புண்கள் குணமாக தைலம் செய்முறையை கூறினார்.

திரு. ஏசுதாஸ் ஆசான் வர்ம மருத்துவ வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்து பேசினார்.

திரு. சுப்பிரமணியம் ஆசான் கரள்வாயு, வாயுப்பிரச்சனைக்கு எளிய மருந்தினையும், சூதகக்கட்டி, வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிக்கு சூரணம் செய்முறை, மூலநோய் குணமாக மருந்து, சிறுநீரகக்கல் கரைய மருந்து செய்முறைகளை கூறினார்.

திரு.ஜாண் ஆசான் சீந்தில் சர்க்கரை செய்முறையை கூறினார்.

மரு.ஷேக் முகமது சூலை மற்றும் எல்லாவிதமான வலிகளுக்கும் எளிய சூரணம் செய்முறையை கூறினார்.

மருத்துவர்.த.இராஜேந்திரன் வர்ம மருத்துவம் குறித்து தெளிவாகப் பேசினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *