பலாப்பழம் கற்றுத் தரும் படிப்பினைகள்
  • By admin
  • |
பலாப்பழம் கற்றுத் தரும் படிப்பினைகள் நண்பர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து எனக்குத் தந்தார் – அன்பு அதை நான் 7 துண்டுகளாக்கி  7 பேருக்குப் பகிர்ந்தேன் – பகிர்ந்துண்ணல் ஒரு துண்டை பக்கத்து வீட்டு நண்பருக்குக் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறிந்து விடும்” என்று வாங்க மறுத்தார் – மூடநம்பிக்கை இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது. எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே “ என்றார் – உரிமை […]
Read More
மதுரையின் மாண்புமிகு உணவுகள்
  • By admin
  • |
மதுரையின் மாண்புமிகு உணவுகள் தூங்கா நகர் எனும் பெயருக்குரிய மதுரை, ‘உணவுகளின் பெரு நகரம்’ எனப் பெருமை கொண்டிருக்கிறது. சங்க காலம் முதலே ‘உண்டு உயர்ந்தோர்’ பட்டியலில் இந்நகர்வாசிகளே நகராமல் நின்று நிலைக்கின்றனர். ‘மதுரைக் காஞ்சி’ வாசிப்போர், இந்நகரத்துத் தெருக்களில் மணக்கும் விதவித உணவுகளையும்நுகர்ந்துணர முடியும். மதுரையில் ஒவ்வோர் உணவுச் சாலையையும் அடையாளம் காட்டிட அக்காலத்தில் கடை வாசலில் ‘தனியாக ஒரு கொடி’ பறக்க விடப்பட்டதும் அறிய முடிகிறது. வேறுபட்ட உணவுகளை, சுவை குன்றாது வழங்கிட அக்காலத்தில் […]
Read More
நேர்மை
  • By admin
  • |
நேர்மை நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரும் நேர்மையில்லாமல் நடந்துக் கொள்ளும் சமயத்தில் நாம் மட்டும் ஏன் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும்? அதனால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது. நேர்மையின்றி வாழ்பவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறார்கள். நேர்மையுடன் வாழ்வதால் நமக்கு என்ன கிடைக்கிறது? என்று நினைப்பவர்கள் இந்த கதையை முழுமையாகப் படியுங்கள். ஒரு நாட்டுடைய அரசர் அவருக்கு அதிகமாக வயதானதால் புது அரசரை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வருகிறார். ஆனால் இந்த முறை தன்னுடைய குடும்பத்திலிருந்து இல்லாமல் மக்களில் இருந்து […]
Read More
உழைப்பு
  • By admin
  • |
உழைப்பு…. இவ்வுலகில் மனிதனாக  ஏதோ இப்பிறவி எடுத்தோம்… வாழ்ந்து விட்டு போய்விடுவோம். இருப்பதை உண்டு களித்து விட்டு வாழ்வோம் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். நாம் மனிதனாக அரிய பிறப்பெடுத்து உள்ளோம். செயற்கரிய காரியங்கள் படைக்கத்தான் நாம் மனிதனாக பிறந்துள்ளோம். நாம் பிறக்கும் போது நம்மை யாருக்கும் தெரியாது. நாம் இறக்கும் போது, சரித்திரம் பேச வேண்டும். வரலாற்றில் நமது பெயர் இடம் பெற வேண்டும். எந்தவொரு சிறப்பான காரியங்கள் செய்யாமல் இருக்கிறோம் என்றால் நாமும் விலங்குகளுக்கும், […]
Read More
மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல…
  • By admin
  • |
மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல… மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல. யார் வேண்டுமானாலும் அதை உடைத்துப்  போட்டு போவதற்கு. அது நம்மோடு எப்போதும் இருக்க வேண்டிய மூச்சுக் காற்று. மகிழ்ச்சியை நாம் மூச்சுக் காற்றாக   வைத்து நிரப்பினால் அதை நாம் நழுவ விடவும் மாட்டோம். தொலைக்கவும் மாட்டோம். ஆனால் மகிழ்ச்சியைக் கையில் பிடித்து வைக்க நினைத்தால்  அது விரலிடுக்கில் நழுவித்தான் செல்லும். சின்னஞ்சிறு குருவி ஒன்று ஒருநாள் கனவில் அழகிய உலகம் கண்டது. விழித்ததும் தான் கண்ட […]
Read More
தோல்விகள் கூட தோற்றுப்போகும் நம்பிக்கை இருந்தால்
  • By admin
  • |
தோல்விகள் கூட தோற்றுப்போகும் நம்பிக்கை இருந்தால்… விழுந்தாலும் எழுவேன் என்பதே  நம்பிக்கை. தவறி விழுந்த விதையே முளைக்கும்போது தடுமாறி விழும் நம் வாழ்க்கை மட்டும் ஏன் சிறக்காது? நம்பிக்கையுடன் எழுவோம். தோல்விகள் கூட தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால். தளராத இதயம் இருந்தால் இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை. என்னை தோற்கடிக்கவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல. விழுந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை. உள் மனதில் எதை எண்ணி அந்த எண்ணத்திற்கு உயிர் கொடுக்கிறோமோ அதுவாகவே […]
Read More
  • By admin
  • |
கட்டுப்பாடும் சுதந்திரமும் ! கட்டுப்பாடாய் இருந்தால் தான்                 காக்கமுடியும் சுதந்திரத்தை; எட்டுப்பட்டி யானாலும்                 இந்தியாவே ஆனாலும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும்                 விதியை மதிக்கும் பண்புடனும் கட்டுப்பாடாய் இருந்தால் தான்                 காக்க முடியும் சுதந்திரத்தை! கொட்டும் செல்வம் குவித்தவுடன்                 குவலயத்தை மிதிப்பதுவும் ஒட்டிக் கொண்ட இனம்சாதி                 ஒன்றை மட்டும் எண்ணுவதும் மட்டில்லாமல் பேசுவதும்                 மற்றோரையே ஏசுவதும் முட்டுக்கட்டை யாகிடுமே;                 முற்றாய் வீழும் சுதந்திரமே! எட்டுத்திக்கும் இருப்போரை                 […]
Read More
  • By admin
  • |
வேண்டும்… பயன்நோக்கா பணிசெய்து வாழ்தல் வேண்டும்                 பகுத்துண்டு பல்லுயிர்கள் ஓம்பல் வேண்டும் அயராது இறைத்தொண்டு செய்தல் வேண்டும்                 அன்பாலே பிற உயிரைக் காத்தல் வேண்டும் தயங்காமல் பிறர்க்குதவி அளித்தல் வேண்டும்                 தந்நலத்தை அடியோடு நீக்கல் வேண்டும் வியந்து நமை ஊரார்கள் மெச்ச வேண்டும்                 வாழ்நாளில் புகழோடு வாழ்தல் வேண்டும் கவிஞர்.வ.ஆனையப்பன்
Read More
  • By admin
  • |
விசித்திரம்… உயரம் என்பது எப்போதும் தரையிலிருந்து தொடங்குவதில்லை.. துயரம் என்பது எப்போதும் எதிரியிடமிருந்து எழுவதில்லை.. இரக்கம் என்பது எப்போதும் செல்வச் செழிப்பிலிருந்து வருவதில்லை… உறக்கம் என்பது எப்போதும் உயர்ந்த மெத்தையிலிருந்து பெறுவதில்லை.. மகிழ்ச்சி என்பது எப்போதும் அடைந்த பணத்திலிருந்து கிடைப்பதில்லை.. புகழ்ச்சி என்பது எப்போதும் அமர்ந்த பதவியிலிருந்து விளைவதில்லை… உலகம் விசித்திரமானது.. கமல. அருள் குமார்
Read More
பேராசை என்ற பயம்
  • By admin
  • |
பேராசை என்ற பயம்… சாவு என்பது உனக்குக் கிடையாது என்பதை அறியாத வரை நீ பேராசையாகத்தான் இருப்பாய். சாவினால் தான் பேராசை வருகிறது. இதைப்பற்றி நீ ஒரு போதும் எண்ணியிராமல் இருக்கலாம். ஆனால் நாம் சாவைக் குறித்து அஞ்சுவதால் தான் பேராசை வருகிறது. சாவு இருப்பதால் வாழ்வை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அனுபவித்து விட நாம் விரும்புகிறோம். நாம் பேராசைக்காரர்களாய் இருக்கிறோம். நாம் அதிகமாக உண்ண விரும்புகிறோம். எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ அவ்வளவும்  சேர்க்க விரும்புகிறோம். […]
Read More