நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
பொறியியல் கல்வியை முடித்த ஒரு இளைஞனை செண்டை மேளம் என்ற நாட்டார் கலை ஆட்டிப்படைக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழாவில் கண்ட சக்கர தீ வெட்டி தூக்கும் நிகழ்ச்சியில் எழுந்த செண்டை மேளத்தின் ஒலி, வெறும் தகர டப்பாவில் கொய்யா மரக்கம்பால் ஒத்திகை பார்க்கும் அளவுக்கு அவனுள் ஆழமாகப் பதிந்தது. இதுதான் சஜு என்ற கலைஞன் உருவான புள்ளி. “கொட்டடிக்காரன்” என்ற இந்த நூல், சஜுவின் 14 ஆண்டுகால செண்டை மேள அனுபவத்தை, ஒரு […]
Read More
தொழிலாளர் நலனுக்காக எதிரான சட்டங்கள்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்தியாவில் நடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை ஊதியம் குறித்த தொகுப்பு, தொழில்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, பணி இடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைகள் குறித்த தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு இயற்றி, அவற்றைச் சட்டம் ஆக்கி நவம்பர் 21 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு. மேற்குறிப்பிட்ட 44 தொழிலாளர் […]
Read More
மனம் எனும் மாயை
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் நீல மலைச்சரிவுகளின் பசிய மரங்களை முட்டும் மேகங்கள் வெட்கம் சுமக்கின்றன. மலையையும் தன்னையும் சுமந்து ஓடிக்கொண்டிருக்கின்றது ஆறு அதன் உள்ளொளியாய் எரிந்துக்கொண்டிருக்கும் ஆழமோ நீரின் மேலே  மெல்ல ஊர்கின்றது தெங்கம் பழங்கள் மிதந்து செல்வதைக் கண்கொள்ளும் குரங்குகள் தங்களுக்குள் நினைவுகளைப் பேசிக் கொள்கின்றன. நீரின் முகமும் நீந்தும் மனமும் தொட்டுக்கொள்ளும் கணத்தில் பிறக்கின்றது பிரபஞ்சத்தின் ஓர் அழகியக் குழந்தை அமைதியின் தாய்ப்பாலை வாய்உறிஞ்சும் அதன் மென்சிரிப்போ சுடரும் மலைமேல் இன்னொருச் சுடராகச் சுடர்கிறது. அவ்வாறே […]
Read More
வேகத்தின் விலை
  • By Magazine
  • |
வேகத்தின் விலை பயணம் என்ற நோக்குடன், பயணித்தன பல உயிர்கள்… பயணிகளின் பாதுகாப்பு ஓட்டுனரின் கால் கைகளில்… சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள், வளைவுகளில் முந்தாதீர் பதாகைகள், மித வேகம் மிக நன்று அறிவிப்புகள்… இருந்தும்__ வேகம் கூட்டியதன் விளைவு பறிக்கப்பட்டன பல உயிர்கள்… வேகத்தை விவேகத்துடன் கையாண்டால், தவிர்கப்படுமே உயிர் பலியாகும் தருணங்கள்… செ.பராந்தகன்
Read More
அரசியல் திட்டங்கள்!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வலது கைகொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு… அதை மதித்து அனைத்தையும் பதுக்கிவிட்டார் அடுத்த மக்கள் தெரியக்கூடாது என்று… இது அரசியல் சான்றோர்களின் சதிகாரத் திட்டம்.
Read More
  • By Magazine
  • |
சுமார் 900,000-800,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை 1,280 இனப்பெருக்க உயிரினங்கள் மட்டுமே..! – முனைவர் மோகனா, பழனி பூமியில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மனிதகுலம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்ட காலம் என்ற ஒன்று இருந்தது . அதுதான், சுமார் 900,000-800,000 ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் தொகை,என்பது சுமார் 1,280 இனப்பெருக்க உயிரினங்கள் மட்டுமே இருந்தன என்ற ஆபத்தான நிலையை அடைந்தது. இந்த மிகக் குறைந்த நிலையை அடைந்து, 117,000 ஆண்டுகள் இதே […]
Read More
வருணின்  சாகசம்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் அன்றைக்கு ராத்திரி 10 மணி ஆனதுக்கு அப்புறம் கூட வரும் டிவிய அணைக்காம கார்ட்டூன்ஸ் பார்த்துகிட்டே இருந்தான். அம்மா அவன திட்டி நாளைக்கு திங்கட்கிழமை ஸ்கூலுக்கு போகணும் போய் சீக்கிரம் தூங்குற வேலைய பாரு அப்படின்னு பெட்ரூமுக்கு விரட்டி விட்டாங்க. போகும்போதுதான் அருணுக்கு நாளைக்கு டீச்சர் கொடுத்த ஹோம் ஒர்க் ஞாபகத்துக்கு வந்தது. வழக்கமா ஏதாவது அஞ்சு பக்கம் எழுதணும் அப்படின்னா கூட, அம்மா அப்பா கிட்ட கேட்டு எதையாவது எழுதி கொடுத்துவிடுவான். இந்த […]
Read More
  • By Magazine
  • |
வெ. சின்னசாமி பிறந்தவுடன் பூச்சிகள் பறக்கவும், விலங்குகள் நடக்கவும், மீன்கள் நீந்தவும் தொடங்கி விடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் பிறந்ததும் நடப்பதில்லை. சில மாதங்களுக்குப் பிறகு பிறர் துணையுடன் நடக்கக் கற்று கொள்கிறான். பேச, வளர, வாழ பிறர் மூலம் தான் கற்றுக் கொள்கிறான். கற்றுக் கொள்வது என்பது வாழ்வியலின் அடிப்படையாகும். வாழ்வியலை வகுத்து, பகுத்து, விரித்து சொல்கிறது திருவள்ளுவரின் அற்புதப் படைப்பாம் திருக்குறள். மெய், வாய் (நாக்கு, கண், மூக்கு, செவி இவற்றை ஐம்புலன் என்கிறோம். […]
Read More
தமிழ்நாட்டின் வானம்பாடி                          கவிஞர் முடியரசன்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் ‘தன்மானக்குன்றம்-கொள்கைமாறாச்சிங்கம்- திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர், இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர்… இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால்…. அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்” என கருணாநிதியால் போற்றப்பட்ட அன்பு உடன்பிறப்பு அவர்தான், ‘தமிழ்நாட்டின் வானம்பாடி” எனப் போற்றப்பட்ட கவிஞர் முடியரசன். ‘ கவிஞன் யார் என்பதற்கு எடுத்துக்காட்டு தானய்யா பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்” என்கிற பெரியாரின் பாராட்டுச் சான்றிதழ் முடியரசின் கொள்கை உரத்துக்குக் காலத்துக்கும் அழியாத சான்று! தேனிமாவட்டம், பெரியகுளம் […]
Read More
மாற்றுத் திறனாளிகள்குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… 2021-ஜீன் மாதத்தில் தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்ற போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அதே ஆண்டு அதே மாதத்தில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைத் திட்டங்கள் […]
Read More