புத்தகம் வாசிப்பு

புத்தகம் வாசிப்பு

  • By Magazine
  • |

முனைவர் ப.சார்லஸ்

தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம் தொடர்ந்து படித்தால் வாழ்வில் வெற்றியின் ஆயுதம் அதுவே புத்தகங்கள் ஆகும் .”மனிதனுடைய ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள்” தான் என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

                புத்தகங்கள் மனிதனின் மிகச் சிறந்த நண்பர்கள்.ஒரு நல்ல புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம் என்றார் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் கி. றி. யி. அப்துல் கலாம். உலகின் பெரிய மேதைகள் அனைவரும் புத்தகம் வசிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. நூல்களை வாசிப்பது என்பது ஓர் அற்புதமான கலையாகும்.வாசிப்பதற்க்கு அமைதியான சூழலை தேர்ந்தெடுத்தல் வேண்டும்.தினமும் வாசிப்பதற்கு என நேரத்தை ஒதுக்குவது அவசியம். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரியில் இருக்கும் நூலகத்தை பயன்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் தங்கள் ஊரில் உள்ள பொது நூலகங்களில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒன்று கூடி வாசகர் வட்டம் தொடங்கலாம். இந்த வாசகர் வட்டம் மூலம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கவும், இலக்கிய விவாதங்களை நடத்தவும், வாசிப்புத்திறனை மேம்படுத்தவும் கல்வியாளர்கள்,எழுத்தாளர்கள் இணைந்து நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துதல், கதை, கவிதை ஆய்வுகள் மற்றும் படைப்பாளிகளுடனான கலந்துரையாடல்களை நிகழ்த்தலாம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் பொதுவாக 14 முதல் 20 வரை தேசிய நூலக வார விழாவாக கொண்டாடப்படுகிறோம். இது வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும், நூலகங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், பள்ளி, கல்லூரி மற்றும் பொது நூலகங்களில் போட்டிகள், புத்தக கண்காட்சிகள் மற்றும் வாசகர் சந்திப்புகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நாம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12, இந்தியாவில் நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர்.எஸ் .ஆர் ரங்கநாதன் பிறந்த நாளில் தேசிய நூலகர் தினம் கொண்டாடபடுகிறோம்.

                “புத்தகங்களை படியுங்கள் மனம் அமைதி பெரும், புத்தகங்களை நண்பராக்குங்கள் சிந்தனை சிறகடிக்கும், புத்தகங்களோடு வாழுங்கள் அறிவு பயணப்படும். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *