இரணகள்ளியின் மகத்துவம்….
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நம் உடல் நலத்துக்காக, நோய்களை தீர்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் பல்வகைத் தாவரங்களில் ஒன்று இரணகள்ளி. இது ஒரு கள்ளி இனத்தைச் சேர்ந்த செடி. இத்தாவரம் நீளவட்ட வடிவில் நீர் பற்று அதிகமாகவும் காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவுகளாகவும் காணப்படுகிறது. இது ஓர் விதையற்ற தாவரம். இதன் இலைகளின் ஓரங்கள் அல்லது விளிம்புகளிலிருந்து புதிய கன்றுகள் வளர்வதைக் காணலாம். இதற்கு மலைக்கள்ளி என்ற பெயரும் உண்டு. இரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை…!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் வாறிளகி வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சிப்பிச்சக்கரவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் வாறிளகிவர்மம் பற்றி அறிவோம். கைச்சிப்பி எலும்பின் கீழ்குழியிலிருந்து (7th rib border) முதுகெலும்பு நோக்கி இருவிரல் தள்ளி தசைகள் பொருந்தும் குழியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பின்கமுந்தான் வர்மம், வாறிளக்கி வர்மம், சிப்பிச்சதை வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “வானென்ற வாறிளகி தலத்தைக்கேளு வன்மையுள்ள சீப்பெலும்பில் தானே தானென்ற தாழ் குழியோரஞ்சார்ந்த உள்வளைவில் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 281-வது கருத்தாய்வுக் கூட்டமான திரு. செல்வநாதன் ஆசான் தலைமையில் திரு. இராஜன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 02.11.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில்  வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.இராஜன் ஆசான் சுவாசகாச சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக திரு.ஜெரின் ஆசான் வாலை ரசம் எடுக்கும் முறையை தெளிவாகக் கூறினார். மேலும் தோல்நோய்களுக்கு ரச பற்பம் செய்யும் முறையையும் கூறினார். அடுத்ததாக, திரு.அனில்குமார் ஆசான் ஆஸ்துமா, […]
Read More
உடல் உஷ்ணமகற்றும் “முள் இலவு”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் இலவு மரம், ஏரிக்கரை ஓரம், தரிசு நிலம், சாலை ஓரங்கள் மற்றும் மலைசார்ந்த நிலங்களில் தானாகவே வறட்சியை தாக்கு பிடித்து வளரும் மரவகை ஆகும். இதனை விதை மூலம் நடவு செய்யலாம். 3 முதல் 5 வருடங்களில் காய்கள் உண்டாகி பலன் கொடுக்கும். வறட்சி மற்றும் பூச்சி தொல்லைகளை தாக்கு பிடித்து பராமரிப்பு செலவு இன்றி வளர்கிறது. இம்மரம் நேராக சுமார் 70 அடி வரை வளரும். முள் இலவு மரத்தின் தண்டில் […]
Read More
மகத்துவம் மிக்க மகிழம் பூ
  • By Magazine
  • |
அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ (நாட்டு மருந்து கடைகளிலும், பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் தாராளமாக கிடைக்கும்.) மகிழம் பூவானது சூடுவதற்கானது மட்டுமல்ல;  பல அரிய பல மருத்துவ குணங்களும் நிறைந்தது! மனச் சோர்வை நீக்கி மகிழ்ச்சி தரும். தலைவலி போக்கும். அமைதியான தூக்கம் தரும் போன்ற பல அற்புதங்கள் நிகழ்த்தும் மகிழத்தை எப்படியெப்படி எல்லாம் பயன்படுத்துவது எனப் பார்ப்போம்; மன மகிழ்ச்சிக்கு  என்று ஒரு  மரம் இருக்கிறது , அதன் பேரை சொன்னாலும், அதன் மணத்தை […]
Read More
மணமூட்டும் புதினா
  • By Magazine
  • |
புதினா நறுமணமிக்கது. இது உணவிற்கு மட்டுமல்லாது, வாய்க்கும் நறுமணத்தை கொடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. புதினா சத்து நிறைந்தது. இதன் பூர்வீகம் ஐரோப்பிய நாடுகளாக இருப்பினும், எல்லா இடங்களிலும் பயிராகிறது. தண்டுபகுதி அல்லது வேர்பகுதியை தொட்டியில் உள்ள மண்ணில் ஊன்றி வீட்டு தோட்டங்களில் வளர்க்கலாம். தண்ணீர் தினம் ஊற்ற வேண்டும்.  இது சுமார் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை கடும்பச்சை நிறத்தில் ஓரங்களில் பற்களுடனும், சுருக்கங்கள் நிறைந்தது போன்றும் காணப்படும். புதினா, பற்பசை, வாய் […]
Read More
எப்சம் உப்பு
  • By Magazine
  • |
வீடுகளில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பின் வேதியியல் பெயர் சோடியம் குளோரைடு ஆகும். ஆனால் எப்சம் உப்பு என்பது எப்சம் உப்பு மெக்னீசியம் மற்றும் சல்பேட் போன்றவற்றின் கலவையாகும். இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே உப்பு எனப்படுகிறது. இந்த உப்பு மருந்துக் கடைகளில் தான் கிடைக்கும்.  மசாலாக் கடைகளில் கிடைக்காது. இது மெக்னீசியம் குறைபாட்டினை நீக்கும் தன்மை வாய்ந்தது. இது வலிகள், காயங்கள், தசைவலிகள், வீக்கங்கள், சோர்வு, பல்வேறு சரும பிரச்சனைகளை சரிச் செய்ய உதவும். பல்வேறு […]
Read More
ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்“பிரம்மி”
  • By Magazine
  • |
பிரம்மி செடி, தடித்த பசுமையான சிறு இலைகளுடன், தண்டில் சிறு கணுக்களும், கணுக்களில் வேர்களையும் கொண்டு தரையில் படர்ந்து வளரும் செடி ஆகும். இதன் பூ வெண்மை நிறத்தில், ஊதாநிறம் கலந்து காணப்படும். இதன் பூர்வீகம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என்று சொல்லப்படுகிறது. இது தண்ணீர் உள்ள வரப்புகள், ஆற்று ஓரங்கள், குளத்து ஓரங்கள், வயல்வெளிகளில் தானாகவே வளர்ந்து காணப்படும். வீடுகளில் தொட்டிகளில் வைத்தும் வளர்க்கலாம். பிரம்மி சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே காக்காய் வலிப்பு, தூக்கமின்மை, […]
Read More
அழியும் நிலையில் பாறு கழுகுகள்
  • By Magazine
  • |
ஐயுசிஎன் எச்சரிக்கை                 பாறு கழுகுகள் விழிப்புணர்வு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?                 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதலாம் சனிக்கிழமை ‘பாறு கழுகுகள்’ விழிப்புணர்வு நாளாகப் பல நாடுகளிலும்  கடைபிடிக்கப்படுகிறது. ‘பாறு’  என்றால் என்ன? ’பாறு’ என்பது கழுகு வகையைச் சேர்ந்த உருவில் மயில் அளவுள்ள பறவை இனமாகும். சத்தியமங்கலம், முதுமலை வாழ் இருளர் பழங்குடிகளால் இவை ‘பாறு’ என  அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியமும் இதன் ஒரு வகையைப் ‘பாறு’ என்று அழைக்கிறது. ‘பாறு’ என்றால் […]
Read More
கண்டங்கத்திரி
  • By Magazine
  • |
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தரிசு நிலங்களிலும், புதர் காடுகளிலும், சாலை ஓரங்களிலும் இயல்பாகவே வளர்ந்து காணப்படும் ஒரு மூலிகை தான் கண்டங்கத்திரி. தாவரவியலில் சொலானம் ஸானக்தோ கார்ப்பம் (Solanum xantho carpum) என்னும் இம்மூலிகை சொலானேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தை  சேர்ந்தது. தரையுடன் படரும் முட்கள் அடர்ந்த ஒரு செடி. இதன் வேர், பூ, இலைகள், காய்கள், பழங்கள் அனைத்தும் மருத்துவத்துக்கு பயன்படும். அனைத்து விதமான நிலங்களிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. முட்களுடன் மாற்றடுக்கில் அமைந்த […]
Read More