SAVKIA-வின் 249-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு.கமலக்கண்ணன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 06.12.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சூரணம் செய்முறையையும், வாதநோயை குணப்படுத்தும் சூரணம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.
திரு.இராஜன் ஆசான் சூலை-18, வாதம், மார்புவலி, தோள்பட்டை வலிக்கும், தாதுபுஷ்டிக்கும் எட்டி விதை மாத்திரை செய்முறையை கூறினார்.
திரு.செல்வநாதன் ஆசான் இருமலுக்கான மாத்திரை செய்முறையை கூறினார்.
திரு.ஸ்டீபன் ஆசான் தலைவலி குணமாக எளிய மருந்து முறைகளைக் கூறினார்.
திரு.ஜேசு பாஸ்கர் ஆசான் மருத்துவ அனுபவங்களை பகிர்ந்தார்.
திரு.அருள் செல்வன் ஆசான் வாதநோய்க்கு தைலம் செய்முறையைக் கூறினார்.
திரு. சுப்பிரமணியம் அவர்கள் பெண்களுக்கு கருப்பை நோய்கள் குணமாக எளிய மருந்தினை கூறினார்.
திரு.கருணாநிதி ஆசான் நுரையீரல், சிறுநீரகம், பித்தப்பை நோய்களுக்கு எளிய கசாயம் செய்முறையைக் கூறினார்.
திரு. ஜாண் ஆசான் உடல் பருமன், நீர்க்கட்டிகள், சதையடைப்பு, கல்லடைப்பு இவற்றுக்கு சூரணம் செய்முறையைக் கூறினார்.
டாக்டர்.த.இராஜேந்திரன் பாஷாண மருந்துகளின் தீமைகள் குறித்தும், மனம், ஆன்மா குறித்தும் விளக்கி பேசியதோடு இதயநோய்கள் குறித்தும் அதனை நிவிர்த்தி செய்வதற்கான வர்மப்புள்ளி தூண்டுமுறைகளையும், வர்ம மருந்துகளையும் கூறியதோடு, சுரப்பி வீக்கம், எல்லாவித கட்டிகளும் குணமாக மருந்து முறைகளையும் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.சே. செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply